உரிமைத் துறப்பு

உரிமைத் துறப்பு

உரிமைத் துறப்பு

    இந்திய குடியுரிமை சட்டம், 1955 (Indian Citizenship Act, 1955) ல், இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளவாறு, குடியுரிமையை துறத்தல் (Loss of Citizenship) பற்றியும் கூறப்பட்டுள்ளது. குடியுரிமையை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, 3 வழிகளில் துறக்கலாம்.

  1. உரிமைத் துறப்பு (By Renunciation)
  2. முடிவுக்கு கொண்டு வருதல் (By Termination)
  3. பறிமுதல் (By Deprivation)

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

உரிமைத் துறப்பு

       இந்தியாவின் எந்தவொரு குடிமகனும், உரிய வயது மற்றும் தகுதி உடைய எவரும், உரிய முறையில் தனது குடியுரிமையை கைவிடுவதாக அறிவித்து, அந்த அறிவிப்பினை உரிய அலுவலரிடம் அளித்து பதிவினை செய்து தனது குடியுரிமையை துறக்கலாம் (If any citizen of India of full age and capacity, makes in the prescribed manner a declaration renouncing his Indian Citizenship, the declaration shall be registered by the prescribed authority; and, upon such registration, that person shall cease to be a citizen of India)

       ஆனால், இந்தியா ஏதேனும் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேலையில், எவரேனும் இவ்வகை விண்ணப்பத்தினை அளித்தால், அரசு முடிவெடுக்கும் வரை, அக்குடியுரிமை துறத்தல் சார்ந்த விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்படும் (Provided that if any such declaration is made during any war in which India may be engaged, registration thereof shall be withheld until the Central Government otherwise directs)

       அவ்வாறு ஒரு நபர் தனது குடியுரிமையை இழக்கும் பொழுது, அவர் சார்ந்த அவரின் மைனர் குழந்தைகளும் தானாகவே இந்தியக் குடியுரிமையை இழப்பர். இருப்பினும், அத்தகைய குழந்தை பதினெட்டு வயதை எட்டும்போது, அவர் மீண்டும் இந்திய குடியுரிமையைத் கோரி விண்ணப்பத்தினை வழங்கலாம்.

 

 

 

Leave a Reply