சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்

இந்திய சுதந்திர சட்டம் 1947

                இந்தியா, சுதந்திரத்திற்கு முன்னர், அரசியல் ரீதியாக இரண்டு பிரிவுகளாக் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்திய் மாநிலங்கள், மற்றொன்று சுதந்திர அரசுகள் (ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளூர் அரச வம்சத்தால் ஆளப்படும் பகுதிகள்). 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திர சட்டத்தின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான்  என்னும் இரண்டு டொமினியன் அந்தஸ்து நாடாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுதந்திர சுதேச அரசுகளுக்கு இந்தியா மூன்று வாய்புகள் வழங்கப்பட்டன. அவை,

  1. இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளுதல்
  2. பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்ளுதல்
  3. சுதந்திர அரசாகவே இருத்தல்

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்

           இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை உறுதிசெய்யப்பட்ட பின்பு, இந்திய நில எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 552 சுதேச அரசுகள் இருந்தன. இவற்றில் பெரும்பாலான சுதேச அரசுகள், அதாவது 549 சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைத்துக்கொண்டன. மீதமுள்ள 3 பகுதிகளான காஸ்மீர், ஹைத்ராபாத் மற்றும் ஜூனாகத் ஆகியவை தொடர்ந்து சுதேச அரசுகளாக இருந்தன.

       அனால், சர்தார் வல்லபாய் படேலின் திறமையால் இம்மூன்று பகுதிகளும், பின்னாளில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

  1. சூழ்நிலை கட்டாயத்தின் காரணமாக காஸ்மீர் 1947 அக்டோபர் 26-ம் தேதி “இணைப்புப் பத்திரத்தில்” கையொப்பம் இட்டு இந்தியாவுடன் இணைந்துக் கொண்டது.
  2. ஜூனாகத் மக்களின் வாக்கெடுப்பு காரணமாக இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது
  3. ஹைத்ராபாத் நகரம் ராணுவ நடவடிக்கையின் காரணமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இந்தியா குடியரசு நாடு என அறிவிக்கப்பட்ட பின்பு, 195௦-ம் ஆண்டு, இந்திய மாநிலங்களை நான்கு பிரிவுகளாக பிரித்தனர்.

குதி ‘அ’ மாநிலங்கள்

பகுதி ‘ஆ’ மாநிலங்கள் பகுதி ‘இ’ மாநிலங்கள் பகுதி ‘ஈ’ மாநிலங்கள்
மொத்த மாநிலங்கள் = 9 மொத்த மாநிலங்கள் = 9 மொத்த மாநிலங்கள் = 1௦

மொத்த மாநிலங்கள் = 1

1.        அஸ்ஸாம்

2.        பீகார்

3.        பம்பாய்

4.        மத்தியப் பிரதேசம்

5.        மதராஸ்

6.        ஒரிசா

7.        ஒருங்கிணைந்த மாகாணம்

8.        பஞ்சாப்

9.        மேற்கு வங்காளம்

1.        ஹைத்ராபாத்

2.        ஜம்மு காஸ்மீர்

3.        மத்திய பாரதம்

4.        மைசூர்

5.        பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப்

6.        ராஜஸ்தான்

7.        சவுராஷ்டிரா

8.        திருவிதாங்கூர் – கொச்சின்

9.        விந்தியப் பிரதேசம்

1.        அஜ்மீர்

2.        போபால்

3.        பிலாஸ்பூர்

4.        கூச் – பெகார்

5.        கூர்க்

6.        டெல்லி

7.        இமாசலப் பிரதேசம்

8.        கட்ச்

9.        மணிப்பூர்

10.     திரிபுரா

1.        அந்தமான் நிகோபார் தீவுகள்

குறிப்பு

  • மொத்த மாநிலங்கள் = 29
  • பகுதி ‘அ / A’ மாநிலங்கள், பிரிட்டிஷ் இந்தியாவின் முந்தைய ஒன்பது ஆளுநரின் மாகாணங்களை உள்ளடக்கியது
  • பகுதி ‘ஆ / B’ மாநிலங்கள் சட்டமன்றங்களுடன் கூடிய ஒன்பது சுதேச மாநிலங்களைக் கொண்டிருந்த அரசுகள்
  • பகுதி ‘இ / C’ மாநிலங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் முன்னாள் தலைமை ஆணையரின் மாகாணங்களையும், சில சுதேச மாநிலங்களையும் கொண்டிருந்தன. இந்த 1௦ மாநிலங்கள் மைய அரசின் கீழ் நிர்வகிக்கப்பட்டன
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் தனி பகுதி ‘ ஈ / D’ பிரதேசங்களாக வைக்கப்பட்டன

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

Leave a Reply