இந்திய அரசுச் சட்டம் 1935
இந்திய அரசுச் சட்டம் 1935
- இந்திய அரசுச் சட்டம் 1935, சட்டம் என்பது ஆங்கிலேய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்காக இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமாகும்.
- இதன்மூலம் இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டன
- இந்தியாவில் முழுமையான பொறுப்புள்ள அரசாங்கம் அமைவதற்கான (Completely Responsible Government in India) அடித்தளத்தை ஏற்படுத்திய சட்டம் இதுவாகும்
- இது மிகவும் நீளமானதும், விரிவாகவும் உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதில் 1௦ அட்டவணைகளும், 321விதிகளையும் கொண்டது
- சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பிற்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இச்சட்டம் விளங்குகிறது
இந்திய அரசுச் சட்டம் 1935 – சட்டத்தின் அவசியம்
- மூன்று வட்டமேஜை மாநாடுகளின் விளைவாக புதிய அரசியலமைப்புக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. மாநாட்டு முடிவுகளை உள்ளடக்கிய “வெள்ளை அறிக்கை” (White Paper on Constitutional Reforms) பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
- வெள்ளை அறிக்கையை ஆராய “லின்லித்தோ பிரபு” தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பதினெட்டு மாதங்கள் விரிவாக பரிசீலித்து பின்னர் 1934 நவம்பர் 11 தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது
- 1935 ஆகஸ்ட் 4-ம் தேதி மன்னரின் ஒப்புதலை பெற்று சட்டமானது
- இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் = 1937 ஏப்ரல் 1-ம் தேதி
இந்திய அரசுச் சட்டம் 1935 – சிறப்பியல்புகள்
மாநில சுயாட்சி (Provincial Autonomy)
- மாநிலங்களில் நடைபெற்று வந்த இரட்டை ஆட்சி முறை (Dyarchy) ஒழிக்கப்பட்டது.
- மாநிலங்களில் “சுயாட்சி முறை” (Provincial Autonomy) கொண்டுவரப்பட்டது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கிடைத்தது. இதன் தலைவராக மாகாண ஆளுநர் இருப்பார்
அகில இந்திய கூட்டாட்சி (All India Federation)
- பிரிட்டிஷ் இந்திய மாநிலங்களையும், இந்திய சுதேச அரசுகளையும் கொண்ட ஒரு அகில இந்திய கூட்டாட்சி அமைக்கப்பட இச்சட்டம் வழிவகுத்தது
- சுதேச அரசுகள் தங்கள் விருப்பப்படி கூட்டாட்சியில் சேருவதற்கும், சேராமல் இருப்பதற்கும் உரிமை உண்டு
மத்தியில் இரட்டை ஆட்சி (Dyarchy at the Centre)
- மாநிலங்களில் இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு, மத்தியில் இரட்டை ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது
- இதன்படி, மத்திய அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட துறைகள் (Reserved Subjects) என்றும், மாற்றப்பட்ட துறைகள் (Transferred Subjects) எனவும் பிரிக்கப்பட்டது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு
- இச்சட்டத்தின் மூலம் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தேர்தல் பாதுகாப்புகளும் இடஒதுக்கீடுகளும் செய்யப்பட்டன
நெகிழ்ச்சி இல்லா சட்டம்
- இச்சட்டமானது நெகிழ்ச்சி இல்லாத சட்டமாகும்
- கூட்டாட்சி சட்டமன்றமோ அல்லது மாநில சட்டமன்றங்களோ இச்சட்டத்தை மாற்றவோ, திருத்தங்கள் கொண்டுவரவோ முடியாது. இங்கிலாந்து பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை திருத்த முடியும்.
கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court)
- சட்ட அமைப்பு சம்பந்தப்பட்ட சிக்கல்களையோ, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே எழக்கூடிய வேறுபாடுகளையோ அல்லது ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையேயான பிரச்சனயை தீர்த்து வைக்க கூட்டாட்சி நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்யப்பட்டது
- இதன் படி கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court) 1937ம் ஆண்டு அமைக்கப்பட்டது
வாக்குரிமை விரிவாக்கம் (Extension of Franchise)
- வாக்குரிமை விரிவுபடுத்தப்பட்டு, மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் மக்கள் வாக்குரிமை பெற்றனர்
- வகுப்புவாரி பிரதிநிதித்துவம் விரிவுபடுத்தப்பட்டதால் இந்தியாவில் மக்களின் ஒற்றுமை கேள்விக்குறியானது
ஈரங்க சட்டமன்றம் (Bicameral Legislature)
- மொத்தம் உள்ள 11 மாநிலங்களில் 6 மாநிலங்களில் ஈரங்க சட்டமன்றம் கொண்டுவரப்பட்டது
- மத்திய மேல்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 26௦ ஆகவும், கீழ்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆகவும் உயர்ந்தது.
அதிகாரப் பங்கீடு (Division of Powers)
- மாநில அரசுகளுக்கும் மத்திய கூட்டாட்சி அரசுக்கும் இடையே அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இவை
- மத்தியப் பட்டியல் – 59 இனங்கள்
- மாகாணப் பட்டியல் – 54 இனங்கள்
- பொதுப்பட்டியல் – 36 இனங்கள்
இந்தியக் கவுன்சில் ஒழிக்கப்பட்டது (Abolition of Indian Council)
- 1858 இந்திய அரசுச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட இந்திய செயலரின் இந்திய கவுன்சில் ஒழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக 3 – 6 உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் விரிவுபடுத்தல்
- 1935 வருட சட்டப்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்துக்களில் தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது
- முஸ்லீம்களுக்கு 3-ல் 1 பங்கு இடம் ஒதுக்கப்பட்டது
இந்தியாவில் இருந்து பர்மா பிரிப்பு
- இச்சட்டத்தின் படி பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது.
- ஹைதராபாத்தின் ஒரு பகுதியாக இருந்த “பேரார்”, மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது
கூட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
- இச்சட்டத்தின் படி கூட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (Federal Public Service Commission), தேவைக்கேற்ப மாகாண அரசுப் பணியாளர் தேர்வானையமும் (provincial Public Service Commission) ஏற்படுத்திக்கொள்ளலாம்
மத்திய ரிசர்வ் வங்கி
- நாட்டின் பண விவகாரங்களை கட்டுப்படுத்த இந்திய மைய ரிசர்வ் வங்கி துவங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது
- ரிசர்வ் வங்கி 1935-ல் துவங்கப்பட்டது
மாநில மறுசீரமைப்பு
- பம்பாய் மாகணத்தில் இருந்து சிந்து பகுதி பிரிக்கப்பட்டது
- பீகார் மற்றும் ஒரிசா என இரண்டாக பிரிக்கப்பட்டது
- இந்தியாவில் இருந்து பர்மா பிரிப்பு
- ஏமன் பிரதேசத்தில் இருந்து ஏடன் (Aden from Yemen) பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆளுமைக்கு கீழ் கொண்டுவரப்பட்டது
இந்திய அரசுச் சட்டம் 1935 – குறிப்பு
- மாநில அளவில் முதல் முறையாக சுயாட்சியை அளித்தது இச்சட்டமே ஆகும்
- கூட்டாட்சி ரயில்வே ஆணையம் (Federal Railway Authority) உருவாக்கப்பட்டு இந்திய ரயில்வே நிர்வாகத்தை கட்டுப்படுத்தினர்
- சைமன் குழுவால் உறுதியளிக்கப்பட்ட “டொமினியன் அந்தஸ்து” (Dominion Status) பற்றி இச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை
- நேரு இச்சட்டத்தினை “A Machine with Strong Brakes but no Engine” என்றார்.
- மேலும் நேரு இச்சட்டத்தினை “அடிமைத்தனமான சாசனம்” (a Charter of Slavery) என்றார்
- இச்சட்டம் இந்திய விடுதலைச் சட்டம் 1947 நிறைவேற்றப்படும் வரை நீடித்தது
- 1937-ல் முதல் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.
- முதல் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)