இந்திய அரசுச் சட்டம் 1919

இந்திய அரசுச் சட்டம் 1919

இந்திய அரசுச் சட்டம் 1919:

இந்திய அரசுச் சட்டம் 1919

  • இந்திய அரசுச் சட்டம் 1919-ஐ “மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்த சட்டம்” என்றும் கூறுவர்
  • இச்சட்டத்தின் பொழுது இந்திய வைசிராய் = செமஸ்போர்ட் பிரபு
  • அப்பொழுது இந்திய அரசுச் செயலர் = எட்வின் சாமுவேல் மாண்டேகு பிரபு

மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்த சட்டம்:

இந்திய அரசுச் சட்டம் 1919

  • இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியில் அடுத்த கட்டமான பொறுப்புள்ள ஆட்சிக்கும் (Responsible Government), கூட்டாட்சி அரசுக்கும் வழி செய்து கொடுத்தது இச்சட்டம்.
  • மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்தம சட்டம் மொத்தம் 6 பகுதிகளையும், 47 சரத்துக்களையும் கொண்டது

மாண்டேகு ஆகஸ்ட் அறிவிப்பு (1917):

  • 1917ம் ஆண்டு ஆகஸ்ட் 2௦ம் நாள் ஆங்கிலேய பிரிட்டிஷ் அரசின் “மாண்டேகு ஆகஸ்ட் அறிவிப்பை” (Montagu August Declaration) வெளியிட்டார்
  • இந்திய நிர்வாகத்தின் ஒவ்வொரு துறையிலும் இந்தியரை அதிக அளவில் பங்கேற்க செய்தல்
  • தன்னாட்சி அமைப்புகளை முறையாக வளர்த்தல்
  • பிரிட்டிஷ் பேரரசின் பகுதியாக உள்ள இந்தியாவுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி (Gradual Introduction of Responsible Government) வழங்குதல்
  • பிரிட்டிஷ் பாராளுமன்றமும், இந்திய அரசாங்கமும் இம்மன்றங்களை ஒவ்வொரு நிலையிலும் கண்காணித்தல்
  • இந்த அறிவிப்பால் காங்கிரஸ் கட்சியினர் “இந்தியாவின் மாக்னா கார்டா” (Magna Carta of India) என வர்ணித்தனர்
  • எஸ்.ஆர்.ஷர்மா = மாண்டேகுவின் ஆகஸ்ட் அறிவிப்பு இந்திய அரசியல் அமைப்பு வரலாற்றில் ஒரு அத்தியாயம் முடிந்து அடுத்த அத்தியாயம் எழுதப்படுவதற்கு ஒப்பாகும்
  • சுமித் சர்கார் = வழக்கமான பிரதிநிதித்துவதைப் பற்றிய கொள்கைகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றம்
  • துர்கா தாஸ் பாஸு = புரட்சிகரமான முக்கியத்துவம் மிக்கது

இந்திய அரசுச் சட்டம் 1919 – சட்டத்தின் அவசியம்:

  • 19௦9 ஆண்டு சட்டமானது இந்தியர்களுக்கு எவ்வித மனநிறைவையும் அளிக்கவில்லை
  • கலவரமும், வெடிகுண்டு அரசியலும் தலைத்தூக்கியது
  • மின்டோ-மார்லி சீர்திருத்தங்களின் தோல்வி
  • 1916ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் முஸ்லீன் லீக் இடையேயான “லக்னோ உடன்படிக்கை”
  • முதல் உலகப்போரில் இங்கிலாந்திற்கு ஆதராவாக இந்தியா செயல்பட்டதால், இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை

இந்திய அரசுச் சட்டம் 1919  – சட்டத்தின் சிறப்பியல்புகள்:

இந்திய அரசுச் சட்டம் 1919

முகப்புரை (Preamble)

  • மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்த சட்டத்தின் முகப்புரையில் இந்தியாவில் படிப்படியாக செயல்படுத்தப்படப் போகும் சீர்திருத்தக் கொள்கைகளை பற்றி கூறியது

இந்திய செயலர் பதவியில் மாற்றம்:

  • இந்தியசெயலரின் ஊதியம் இச்சட்டத்தின் மூலம், இந்திய வருவாயில் இருந்து மாற்றி இங்கிலாந்து நிதியில் இருந்து வழங்க வழிவகை செய்தது
  • இந்திய செயலரின் அதிகாரம் குறைக்கப்பட்டது
  • இங்கிலாந்தில் உள்ள இந்தியர்களின் தேவைகளை கவனிக்கும் பொருட்டு “இந்திய உயர் ஆணையர்” (Indian High Commissioner) என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இவர் வைசிராயால் ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்படுவார்

அதிகாரப் பங்கீடு:

  • மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே முறையான அதிகாரப் பங்கீடு ஏற்படுத்தப்பட்டது
  • இச்சட்டத்தின் மூலம் இந்தியா 9 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. 1.மதராஸ், 2.பம்பாய், 3.வங்காளம், 4.ஐக்கிய பிரதேச மாநிலம், 5.அஸ்ஸாம், 6.பீகார், 7.ஒரிசா, 8.மத்திய மாநிலம், மற்றும் 9.பஞ்சாப்
  • அதிகாரங்களை “மத்திய பட்டியல்” என்றும் “மாநிலப் பட்டியல்” என்றும் பிரிக்கப்பட்டது

நிர்வாக சபையில் இந்தியர்கள்:

  • கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபையில் இதுவரை ஒரு இந்தியர் மட்டுமே இருந்த நிலையில், 6 பேர் கொண்ட இச்சபையில் இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது

ஈரடுக்கு சட்டமன்றம் (Bi-Cameralism):

  • முதன் முறையாக ஈரடுக்கு சட்டமன்ற முறை (Bi-Cameralsim) அறிமுகம் செய்யப்பட்டது
  • மத்திய அரசாங்கம் இரு சட்டமன்றங்களை (Bi-Cameralsim) கொண்டிருக்கும்
    • மத்திய சட்டமன்றம் (அ) கீழவை (CentralLegislative Assembly)
    • மாநில மன்றம் (அ) மேலவை (Council of States)
  • மத்திய சட்டமன்றத்திற்கு மொத்தம் 145 உறுப்பினர்கள். இவற்றில்
    • 41 பேர் பரிந்துரை செய்யப்படுபவர்கள்
      • 26 அலுவலர்கள்
      • 15 அதிகாரிகள் அல்லாதோர்
    • 104 பேர் தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படுவர்
      • பொது பிரிவில் 52 பேர்
      • 3௦ முஸ்லிம்கள்
      • 9 ஐரோப்பியர்கள்
      • 7 நிலக்கிழார்கள், ஜமின்தார்கள்
      • இந்திய சமூகத்தை சேர்ந்த நான்கு பேர்
      • 2 சீக்கியர்கள்
    • மாநில சட்டமன்றத்திற்கு “ஆண் பிரதிநிதிகள்” (Male Members) மட்டுமே அனுமதி. இதில் 6௦ பேர் உறுப்பினர்கள் ஆவர்
      • 27 பேர் பரிந்துரை செய்யப்படுவர்
        • 17 அதிகாரிகள்
        • 1௦ அதிகாரிகள் அல்லாதோர்
      • 33 பேர் தேர்வு செய்யப்படுவர்
        • 16 பொதுப்பிரிவு
        • 11 முஸ்லிம்கள்
        • 3 ஐரோப்பியர்கள்
        • 1 சீக்கியர்
      • மத்திய சட்டமன்றத்தின் உறுப்பினரின் பதவிக் காலம் = 3 ஆண்டுகள். மாநில சட்டமன்றத்தின் உறுப்பினரின் பதவிக் காலம் = 5 ஆண்டுகள் ஆகும்.
      • இவ்விரு மன்றங்களுக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் “நேரடி தேர்தல்” மூலமே தேர்வு செய்யப்படுவர்

இரட்டையாட்சி முறை:

  • மாநிலங்களில் பொறுப்புள்ள ஆட்சியை உருவாக்குவதற்காக அறிமுகம் செயப்பட்டதே “இரட்டை ஆட்சி முறை” (Dyarchy) ஆகும்
  • அதிகாரங்களை மத்திய அதிகாரங்கள் (Central Subjects) என்றும், மாநில அதிகாரங்கள் (Provincial Subjects) என்றும் பிரித்து, மேலும் மாநில அதிகாரங்களை ஒதுக்கப்பட்ட பட்டியல் (Reserved Subjects) என்றும், மாற்றப்பட்ட பட்டியல் (Transferred Subjects) என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது
  • இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை சிறப்பாக செயல்பட்ட ஒரே மாநிலம் = மதராஸ் மாநிலம் மட்டுமே.

நேரடி தேர்தல்:

  • இச்சட்டத்தின் மூலம் முதல் முறையாக நேரடி தேர்தல் முறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது (Introduction of Direct Elections)
  • அதன்படி சட்டமன்ற தேர்தல்கள் 192௦-21ல் நடைபெற்றன. இந்த தேர்தலில் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக காங்கிரஸ் போட்டியிடவில்லை

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்:

  • வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அதிகப்படுத்தப்பட்டது (Communal Representation – Separate Electorate)
  • சீக்கியர்கள், இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ – இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்றோருக்கு தனித்தனியாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டன

ஓட்டளித்தல்:

  • சொத்து, கல்வி தகுதி மற்றும் வரி செலுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் வாக்கு அளிக்கும் உரிமை வழங்கப்பட்டது

பணியாளர் தேர்வாணையம்:

  • இந்திய அரசுச் சட்டம் 1919 சட்டத்தின் மூலம் அரசுப் பணிக்கு பணியாளரை தேர்வு செய்யும் தேர்வாணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது
  • இதற்காக 1923ம் ஆண்டு “லீ கமிசன்” (Lee Commission on Superior Civil Services) அமைக்கப்பட்டது. இக்கமிசனின் அறிக்கையின் அடிப்படையில் 1926ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது

சட்ட ஆணையம்:

  • மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்த சட்டங்களின் செயல்பாடுகளை ஆராய 1௦ ஆண்டுகள் கழித்து ஒரு சட்ட ஆணையம் (Statutory Commission) அமைக்க வேண்டும் என இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

முடிமான் குழு:

இந்திய அரசுச் சட்டம் 1919

  • இந்திய அரசுச் சட்டம் 1919 ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட “இரட்டை ஆட்சி முறையின்” செயல்பாடுகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவே “முடிமான் குழுவாகும்” (Mudimaan Committee – investigating the diarchy issue)
  • 1921-ல் அமைக்கப்பட்ட இக்குழு, “சீர்திருத்த விசாரணை குழு” (Mudimaan Committee or Reforms Enquiry Committee) எனவும் அழைக்கப்படுகிறது
  • இக்குழுவில் இருந்த சில முக்கியமான இந்தியர்கள்
    • சிவசாமி ஐயர்
    • தேஜ்பகதூர் சப்ரூ
    • முகமது அலி ஜின்னா
    • பிஜாய் சந்த்
  • முடிமான் கமிட்டியின் விசாரணையின் அடிப்படையில் இரட்டை ஆட்சி முறையின் செயல்பாடுகளில் எவ்வித குறைபாடுகளும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
  • இக்குழுவின் அறிக்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் மோதிலால் நேரு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார்.

இந்திய அரசுச் சட்டம் 1919 – குறிப்பு:

  • இந்திய அரசுச் சட்டம் 1919 சட்டத்தின் மூலம் இந்தியர்களுக்கு ஆட்சியிலும் நிர்வாகத்திலும் பங்கு கிடைத்தது
  • பரந்த வாக்குரிமை மூலம் முதன் முறையாக உண்டாக்கப்பட்ட நேரடி தேர்தல் இந்தியர்களுக்கு கிடைத்த முக்கியமான சலுகையாகும்.
  • இரட்டையாட்சி முறை (Dyarchy) தோல்வியில் முடிந்தது
  • பி.சட்ஸ் = இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுவதற்கும், இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் இச்சட்டம் காரணமாக இருந்தது
  • 1௦ ஆண்டுகள் கழித்து இச்சட்டத்தின் செயல்பாடுகளை ஆராய குழு அமைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் எட்டு ஆண்டுகளிலே “சைமன் குழு” (Simon Commission) அமைக்கப்பட்டு இச்சட்டம் ஆராயப்பட்டது

 

 

Leave a Reply