இந்திய அரசுச் சட்டம் 1935, சட்டம் என்பது ஆங்கிலேய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்காக இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமாகும்.
இதன்மூலம் இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டன
இந்தியாவில் முழுமையான பொறுப்புள்ள அரசாங்கம் அமைவதற்கான (Completely Responsible Government in India) அடித்தளத்தை ஏற்படுத்திய சட்டம் இதுவாகும்
இது மிகவும் நீளமானதும், விரிவாகவும் உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதில் 1௦ அட்டவணைகளும், 321விதிகளையும் கொண்டது
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பிற்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இச்சட்டம் விளங்குகிறது
இந்திய அரசுச் சட்டம் 1935 – சட்டத்தின் அவசியம்
மூன்று வட்டமேஜை மாநாடுகளின் விளைவாக புதிய அரசியலமைப்புக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. மாநாட்டு முடிவுகளை உள்ளடக்கிய “வெள்ளை அறிக்கை” (White Paper on Constitutional Reforms) பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
வெள்ளை அறிக்கையை ஆராய “லின்லித்தோ பிரபு” தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பதினெட்டு மாதங்கள் விரிவாக பரிசீலித்து பின்னர் 1934 நவம்பர் 11 தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது
1935 ஆகஸ்ட் 4-ம் தேதி மன்னரின் ஒப்புதலை பெற்று சட்டமானது
இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் = 1937 ஏப்ரல் 1-ம் தேதி
இந்திய அரசுச் சட்டம் 1935 – சிறப்பியல்புகள்
மாநில சுயாட்சி (Provincial Autonomy)
மாநிலங்களில் நடைபெற்று வந்த இரட்டை ஆட்சி முறை (Dyarchy) ஒழிக்கப்பட்டது.
மாநிலங்களில் “சுயாட்சி முறை” (Provincial Autonomy) கொண்டுவரப்பட்டது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கிடைத்தது. இதன் தலைவராக மாகாண ஆளுநர் இருப்பார்
அகில இந்திய கூட்டாட்சி (All India Federation)
பிரிட்டிஷ் இந்திய மாநிலங்களையும், இந்திய சுதேச அரசுகளையும் கொண்ட ஒரு அகில இந்திய கூட்டாட்சி அமைக்கப்பட இச்சட்டம் வழிவகுத்தது
சுதேச அரசுகள் தங்கள் விருப்பப்படி கூட்டாட்சியில் சேருவதற்கும், சேராமல் இருப்பதற்கும் உரிமை உண்டு
மத்தியில் இரட்டை ஆட்சி (Dyarchy at the Centre)
மாநிலங்களில் இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு, மத்தியில் இரட்டை ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது
இதன்படி, மத்திய அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட துறைகள் (Reserved Subjects) என்றும், மாற்றப்பட்ட துறைகள் (Transferred Subjects) எனவும் பிரிக்கப்பட்டது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு
இச்சட்டத்தின் மூலம் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தேர்தல் பாதுகாப்புகளும் இடஒதுக்கீடுகளும் செய்யப்பட்டன
நெகிழ்ச்சி இல்லா சட்டம்
இச்சட்டமானது நெகிழ்ச்சி இல்லாத சட்டமாகும்
கூட்டாட்சி சட்டமன்றமோ அல்லது மாநில சட்டமன்றங்களோ இச்சட்டத்தை மாற்றவோ, திருத்தங்கள் கொண்டுவரவோ முடியாது. இங்கிலாந்து பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை திருத்த முடியும்.
கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court)
சட்ட அமைப்பு சம்பந்தப்பட்ட சிக்கல்களையோ, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே எழக்கூடிய வேறுபாடுகளையோ அல்லது ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையேயான பிரச்சனயை தீர்த்து வைக்க கூட்டாட்சி நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்யப்பட்டது
இதன் படி கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court) 1937ம் ஆண்டு அமைக்கப்பட்டது
வாக்குரிமை விரிவாக்கம் (Extension of Franchise)
வாக்குரிமை விரிவுபடுத்தப்பட்டு, மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் மக்கள் வாக்குரிமை பெற்றனர்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் விரிவுபடுத்தப்பட்டதால் இந்தியாவில் மக்களின் ஒற்றுமை கேள்விக்குறியானது
ஈரங்க சட்டமன்றம் (Bicameral Legislature)
மொத்தம் உள்ள 11 மாநிலங்களில் 6 மாநிலங்களில் ஈரங்க சட்டமன்றம் கொண்டுவரப்பட்டது
மத்திய மேல்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 26௦ ஆகவும், கீழ்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆகவும் உயர்ந்தது.
அதிகாரப் பங்கீடு (Division of Powers)
மாநில அரசுகளுக்கும் மத்திய கூட்டாட்சி அரசுக்கும் இடையே அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இவை
மத்தியப் பட்டியல் – 59 இனங்கள்
மாகாணப் பட்டியல் – 54 இனங்கள்
பொதுப்பட்டியல் – 36 இனங்கள்
இந்தியக் கவுன்சில் ஒழிக்கப்பட்டது (Abolition of Indian Council)
1858 இந்திய அரசுச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட இந்திய செயலரின் இந்திய கவுன்சில் ஒழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக 3 – 6 உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் விரிவுபடுத்தல்
1935 வருட சட்டப்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்துக்களில் தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது
முஸ்லீம்களுக்கு 3-ல் 1 பங்கு இடம் ஒதுக்கப்பட்டது
இந்தியாவில் இருந்து பர்மா பிரிப்பு
இச்சட்டத்தின் படி பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது.
ஹைதராபாத்தின் ஒரு பகுதியாக இருந்த “பேரார்”, மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது
கூட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
இச்சட்டத்தின் படி கூட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (Federal Public Service Commission), தேவைக்கேற்ப மாகாண அரசுப் பணியாளர் தேர்வானையமும் (provincial Public Service Commission) ஏற்படுத்திக்கொள்ளலாம்
மத்திய ரிசர்வ் வங்கி
நாட்டின் பண விவகாரங்களை கட்டுப்படுத்த இந்திய மைய ரிசர்வ் வங்கி துவங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது
ரிசர்வ் வங்கி 1935-ல் துவங்கப்பட்டது
மாநில மறுசீரமைப்பு
பம்பாய் மாகணத்தில் இருந்து சிந்து பகுதி பிரிக்கப்பட்டது
பீகார் மற்றும் ஒரிசா என இரண்டாக பிரிக்கப்பட்டது
இந்தியாவில் இருந்து பர்மா பிரிப்பு
ஏமன் பிரதேசத்தில் இருந்து ஏடன் (Aden from Yemen) பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆளுமைக்கு கீழ் கொண்டுவரப்பட்டது
இந்திய அரசுச் சட்டம் 1935 – குறிப்பு
மாநில அளவில் முதல் முறையாக சுயாட்சியை அளித்தது இச்சட்டமே ஆகும்
கூட்டாட்சி ரயில்வே ஆணையம் (Federal Railway Authority) உருவாக்கப்பட்டு இந்திய ரயில்வே நிர்வாகத்தை கட்டுப்படுத்தினர்
சைமன் குழுவால் உறுதியளிக்கப்பட்ட “டொமினியன் அந்தஸ்து” (Dominion Status) பற்றி இச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை
நேரு இச்சட்டத்தினை “A Machine with Strong Brakes but no Engine” என்றார்.
மேலும் நேரு இச்சட்டத்தினை “அடிமைத்தனமான சாசனம்” (a Charter of Slavery) என்றார்
இச்சட்டம் இந்திய விடுதலைச் சட்டம் 1947 நிறைவேற்றப்படும் வரை நீடித்தது
1937-ல் முதல் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.
முதல் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது