இந்திய குடியுரிமை சட்டம் 1955
இந்திய குடியுரிமை சட்டம் 1955
குடியுரிமை (Citizenship) என்ற பிரச்சனை குறித்து சுருக்கமான சட்டத் தொகுதி ஒன்று “இந்திய குடியுரிமை சட்ட்டம் 1955” (Indian Citizenship Act, 1955), 1955-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் (Parliament) அனுமதிக்கப்பட்டது. இந்த உரிமையை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 11-வது சட்டம் (Article 11), பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு, குடியுரிமையில் ஏற்பட்ட அணைத்து பிரச்சனைகளுக்கும் இச்சட்டதிம் மூலமே தீர்வு காணப்பட்டது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இவ்விதியில் உள்ள அதிகாரங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
- குடியுரிமை பெறுதல் (Acquisition of Citizenship)
- குடியுரிமை மறுத்தல் (Termination of Citizenship)
- உபரி விதிகள் (Other matters relating to Citizenship)
வங்காளதேசம், இலங்கை மற்றும் பல ஆப்ரிக்க நாடுகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பெருமளவில் பலர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததை அடுத்து, 1986-ம் ஆண்டு மீண்டும் இச்சட்டம் திருத்தப்பட்டது. இந்தியக் குடியுரிமை பெறுவதை இச்சட்டம், மேலும் கடுமையாக்கியது.
பிறப்பின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமானால் பிறப்பின் போது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்ற அச்சட்டத்தின் மூன்றாவது பிரிவு கூறுகிறது.
- பிறப்பாலும் (By Birth)
- மூதாதையர் வழியாலும் (By Descent)
- பதிவின் மூலமும் (By Registration)
- இயல்பாக்கதினாலும் (By Naturalisation)
- புதிய ஆட்சிப்பகுதிகளை சேர்த்தல் (By Acquisition of Territory)
போன்ற வழிமுறைகளில் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான (Acquisition of Citizenship) விரிவான வழிமுறைகளை அச்சட்டம் கூறுகிறது.
அதேபோல்,
- இந்தியக் குடியுரிமையைத் துறந்து விடுவதன் மூலமும் (By Renunciation)
- வேறுநாட்டின் குடியுரிமையை தானே முன்வந்து பெறுவதின் மூலமும் (By Termination)
- சில காரணங்களுக்காக இந்திய அரசே குடியுரிமையை கட்டாயமாக பறிமுதல் செய்தல் (By Deprivation)
போன்ற முறைகளில் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான (Loss of Citizenship) வழிகளையும் அச்சட்டம் கூறுகிறது.
இந்திய குடியுரிமை சட்டம் 1955
- இந்திய குசியுரிமைச் சட்டம், 1955 ஆனது முதலில் அறிவிக்கப்பட்ட பொழுது, அதில் காமன்வெல்த் குடியுரிமை தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அனால் அது 2௦௦3-ம் ஆண்டு நீக்கப்பட்டது.
- இந்திய நிலபரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் / EXCHANGE OF TERRITORIES WITH FOREIGN NATIONS
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் / EXCHANGE OF TERRITORIES WITH BANGLADESH
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் / INTEGRATION OF PRINCELY STATES
- தார் கமிசன் / DHAR COMMISSION
- ஜேவிபி குழு / JVP COMMITTEE
- பசல் அலி கமிசன் / FAZAL ALI COMMISSION
- 1956 பிறகு புதிய மாநிலங்கள் / STATES AFTER 1956
- ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் / JAMMU KASHMIR AND LADAKH
- மாநிலங்களின் பெயர் மாற்றம் / RENAMING OF STATES