இந்திய குடியுரிமை சட்டம் 1955

இந்திய குடியுரிமை சட்டம் 1955

இந்திய குடியுரிமை சட்டம் 1955

இந்திய குடியுரிமை சட்டம் 1955

         குடியுரிமை (Citizenship) என்ற பிரச்சனை குறித்து சுருக்கமான சட்டத் தொகுதி ஒன்று “இந்திய குடியுரிமை சட்ட்டம் 1955” (Indian Citizenship Act, 1955), 1955-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் (Parliament) அனுமதிக்கப்பட்டது. இந்த உரிமையை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 11-வது சட்டம் (Article 11), பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு, குடியுரிமையில் ஏற்பட்ட அணைத்து பிரச்சனைகளுக்கும் இச்சட்டதிம் மூலமே தீர்வு காணப்பட்டது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

       இவ்விதியில் உள்ள அதிகாரங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,

  1. குடியுரிமை பெறுதல் (Acquisition of Citizenship)
  2. குடியுரிமை மறுத்தல் (Termination of Citizenship)
  3. உபரி விதிகள் (Other matters relating to Citizenship)

       வங்காளதேசம், இலங்கை மற்றும் பல ஆப்ரிக்க நாடுகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பெருமளவில் பலர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததை அடுத்து, 1986-ம் ஆண்டு மீண்டும் இச்சட்டம் திருத்தப்பட்டது. இந்தியக் குடியுரிமை பெறுவதை இச்சட்டம், மேலும் கடுமையாக்கியது.

         பிறப்பின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமானால் பிறப்பின் போது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்ற அச்சட்டத்தின் மூன்றாவது பிரிவு கூறுகிறது.

  1. பிறப்பாலும் (By Birth)
  2. மூதாதையர் வழியாலும் (By Descent)
  3. பதிவின் மூலமும் (By Registration)
  4. இயல்பாக்கதினாலும் (By Naturalisation)
  5. புதிய ஆட்சிப்பகுதிகளை சேர்த்தல் (By Acquisition of Territory)

      போன்ற வழிமுறைகளில் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான (Acquisition of Citizenship) விரிவான வழிமுறைகளை அச்சட்டம் கூறுகிறது.

அதேபோல்,

  1. இந்தியக் குடியுரிமையைத் துறந்து விடுவதன் மூலமும் (By Renunciation)
  2. வேறுநாட்டின் குடியுரிமையை தானே முன்வந்து பெறுவதின் மூலமும் (By Termination)
  3. சில காரணங்களுக்காக இந்திய அரசே குடியுரிமையை கட்டாயமாக பறிமுதல் செய்தல் (By Deprivation)

     போன்ற முறைகளில் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான (Loss of Citizenship) வழிகளையும் அச்சட்டம் கூறுகிறது.

இந்திய குடியுரிமை சட்டம் 1955

  • இந்திய குசியுரிமைச் சட்டம், 1955 ஆனது முதலில் அறிவிக்கப்பட்ட பொழுது, அதில் காமன்வெல்த் குடியுரிமை தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அனால் அது 2௦௦3-ம் ஆண்டு நீக்கப்பட்டது.

 

 

 

Leave a Reply