தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை “தைரியநாதன்” என மாற்றிகொண்டார்.
பின்னர் தனித்தமிழுக்கு ஏற்ப “வீரமாமுனிவர்” என மாற்றம் பெற்றது.
சதுரகராதி, தேம்பாவணி:
தமிழில் முதன்முதலாக “சதுரகராதி” என்னும் அகரமுதலியை படைத்தார்.
கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் “தேம்பாவணி” என்னும் காப்பியத்தை படைத்தார்.
எழுத்து சீர்திருத்தம்:
தமிழ் எழுத்து வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.
குட்டித் தொல்காப்பியம்:
குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படும் “தொன்னூல் விளக்கம்” படைத்தார்.
பிற நூல்கள்:
கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும், பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலையும் படைத்தார்.
ரா.பி.சேதுபிள்ளையின் பாராட்டு:
“தேம்பாவணி, காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்.
குணங்குடி மஸ்தான்(1788 – 1835):
“மாதவஞ்ச்சேர் மேலோர் வழுத்தும் குனங்குடியான்” என்று அழைக்கப்படுபவர்.
இயற்பெயர் = குணங்குடி மஸ்தான் சாகிபு.
இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.
தாயுமானவர் மீது பற்று:
இவர் தாயுமானவர் பாடல்கள் மீட்கு பெரிதும் பற்று கொண்டவர்.
அவருடைய பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
பராப்பரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில கண்ணிகள்.
அழியாப் பேரின்பம்:
இவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்.
இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
நான்மணிமாலை:
இவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள் நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.
“தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை” என்கிறார்.
ஆறுமுக நாவலர்(1822 – 1879):
இவர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
இயற் பெயர் = ஆறுமுகனார்.
இளமையிலே சைவ சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர்.
நாவலர் பட்டம்:
இவரின் சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு “நாவலர்” பட்டம் வழங்கினார்.
இவர் சிறந்த பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்.
இலக்கண வலுவற்ற தூய்மை:
நாவலரே முதன் முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையை கையாண்டார்.
பரிதிமாற் கலைஞர் பாராட்டு:
தமிழ் உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பருதிமார் கலைஞர் இவரை “வசன நடை கைவந்த வல்லாளர்” என பாராட்டினார்.
அச்சுக்கூடம் நிறுவுதல்:
சென்னையில் அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல பதிப்பித்தார்.
பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற இலக்கிய நூல்களை பதிப்பித்தார்.
இலக்கண வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கண கொத்து, இலக்கண சூறாவளி முதலிய இலக்கண நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.
முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.