சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் வளர்த்த சான்றோர்

தமிழ் வளர்த்த சான்றோர்

தமிழ் வளர்த்த சான்றோர்:

  • புதுக்கவிதைக்கு = பாரதியார்
  • சமுதாய புரட்சிக்கு = பாரதிதாசன்
  • பொதுவுடைமை = திரு.வி.க
  • தனித்தமிழுக்கு = மறைமலையடிகள்
  • பேச்சுக்கலை = அறிஞர் அண்ணா
  • சிறுகதை = புதுமைப்பித்தன்

வீரமாமுனிவர்(1680 – 1747):

  • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
  • இவரின் இயற்பெயர் “கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி”.
  • இவர் தம் முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார்.
  • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை “தைரியநாதன்” என மாற்றிகொண்டார்.
  • பின்னர் தனித்தமிழுக்கு ஏற்ப “வீரமாமுனிவர்” என மாற்றம் பெற்றது.

சதுரகராதி, தேம்பாவணி:

  • தமிழில் முதன்முதலாக “சதுரகராதி” என்னும் அகரமுதலியை படைத்தார்.
  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் “தேம்பாவணி” என்னும் காப்பியத்தை படைத்தார்.

எழுத்து சீர்திருத்தம்:

  • தமிழ் எழுத்து வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.

குட்டித் தொல்காப்பியம்:

  • குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படும் “தொன்னூல் விளக்கம்” படைத்தார்.

பிற நூல்கள்:

  • கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும், பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலையும் படைத்தார்.

ரா.பி.சேதுபிள்ளையின் பாராட்டு:

  • “தேம்பாவணி, காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்.

குணங்குடி மஸ்தான்(1788 – 1835):

  • “மாதவஞ்ச்சேர் மேலோர் வழுத்தும் குனங்குடியான்” என்று அழைக்கப்படுபவர்.
  • இயற்பெயர் = குணங்குடி மஸ்தான் சாகிபு.
  • இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.

தாயுமானவர் மீது பற்று:

  • இவர் தாயுமானவர் பாடல்கள் மீட்கு பெரிதும் பற்று கொண்டவர்.
  • அவருடைய பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
  • பராப்பரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில கண்ணிகள்.

அழியாப் பேரின்பம்:

  • இவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்.
  • இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.

நான்மணிமாலை:

  • இவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள் நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.
  • அந்நூலில் “மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல்சூழ்பவரின், குனங்குடியான், மிக்கோன் எனற்குஓர் தடையுளதோ?” எனக் கேட்கிறார்.
  • “தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை” என்கிறார்.

ஆறுமுக நாவலர்(1822 – 1879):

  • இவர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
  • இயற் பெயர் = ஆறுமுகனார்.
  • இளமையிலே சைவ சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர்.

நாவலர் பட்டம்:

  • இவரின் சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு “நாவலர்” பட்டம் வழங்கினார்.
  • இவர் சிறந்த பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்.

இலக்கண வலுவற்ற தூய்மை:

  • நாவலரே முதன் முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையை கையாண்டார்.

பரிதிமாற் கலைஞர் பாராட்டு:

  • தமிழ் உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பருதிமார் கலைஞர் இவரை “வசன நடை கைவந்த வல்லாளர்” என பாராட்டினார்.

அச்சுக்கூடம் நிறுவுதல்:

  • சென்னையில் அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல பதிப்பித்தார்.
  • பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற இலக்கிய நூல்களை பதிப்பித்தார்.
  • இலக்கண வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கண கொத்து, இலக்கண சூறாவளி முதலிய இலக்கண நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.
  • முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

Leave a Reply