நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது.
நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.
கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.
இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு.
நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:
தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்.
நாடகம் என்பது “போலச் செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக கொண்டது.
பிறர் செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
மரப்பாவைக்கூத்து->பொம்மலாட்டம்->தோல்பாவைக்கூத்து->நிழற்பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்தது.
இலக்கியங்களில் நாடகம்:
தொல்காப்பிய மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
“கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே” என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி அறியலாம்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று மாதவியை குறிப்பிடுகிறார்.
கூத்து:
தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளார்.
நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவாகக் “கூத்து” என்ற சொல்லே வழக்கில் இருந்தது.
அடியார்க்கு நல்லார்:
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்.
இவர் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் கூறியுள்ளார்.
நாடக நூல்கள்:
முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
நாடகவியல்:
பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி கூறியுள்ளார்.
நாடக ஆராய்ச்சி நூல்கள்:
சுவாமி விபுலானந்தர் = மதங்க சூளாமணி
மறைமலையடிகள் = சாகுந்தலம்
இவ்விரண்டு நூல்களும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.
தொழில்முறை நாடக அரங்குகள்:
பம்மல் சம்பந்தனார், “நாடகத்தமிழ்” என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.
காலம்தோறும் நாடகக்கலை:
ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் “மத்தவிலாசம்” என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
பதினொன்றாம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் “இராசராசேச்சுவர நாடகம்” நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.
கட்டியங்காரன் உரையாடல்:
பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
சமுதாய சீர்திருத்த நாடகங்கள்:
காசி விஸ்வநாதரின் “டம்பாச்சாரி விலாசம்”.
பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணியம்”.
தேசிய நாடகங்கள்:
“கதரின் வெற்றி” நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.
சிறப்பிடம் பெற்றவர்கள்:
பரிதிமாற் கலைஞர் – தமிழ் நாடக பேராசிரியர்
சங்கரதாசு சுவாமிகள் – தமிழ் நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடக பேராசிரியர்
பம்மல் சம்பந்தனார் – தமிழ் நாடக தந்தை
கந்தசாமி – தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை
கவிமணியின் கூற்று:
“நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்ற கவிமணியின் கூற்றிற்குஏற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக் கவரும் வகையிலும் நாடகங்கள் கதை அழகோடு கவிதை அழகையும் கொண்டு வாழ்வைத் தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்.