யார் கவிஞன்?
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்; கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டு பாடுபவன் கவிஞன் அல்லன்; தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்; மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும் ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்; தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன். – முடியரசன் |
சொற்பொருள்:
- கைம்மாறு – பயன்
- மாசற்ற – குற்றமற்ற
- தேட்டை – திரட்டிய செல்வம்
- மீட்சி – மேன்மை
- மாலை – நீங்க
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = முடியரசன்
- இயற்பெயர் = துரைராசு
- பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
- ஊர் = தேனி மாவட்டம் பெரியகுளம்
- இயற்றிய நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.
- பணி = காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்.
- பட்டம் = பறம்புமலையில் நடந்த விழாவில் “கவியரசு” என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.
- பரிசு = பூங்கொடி என்னும் காவியத்திற்காக 1966ஆம் ஆண்டின் தமிழக அரசு பரிசு.
- சிறப்பு = முடியரசன், பாரதிதாசன் பரம்பரைக் தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
- காலம் = 1920-1998