Skip to content
விக்ரமசோழன் உலா
பாடலின் பொருள்:
குடகு மலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் = கவேரன்.
தெளிந்த அருவியை உடைய மேரு மலையின் உச்சியில் புலிக்கொடி நாட்டி, பொன்னியாகிய காவிரியின் இருகரைகளையும் உயர்த்திக் கட்டியவன் = சோழன் கரிகாலன்.
பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாக் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்தவன் = சோழன் செங்கணான்.
போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் 96ம் பெற்றவன் = சோழன் விசயாலயன்.
சிவபெருமான் ஆடலரசாய்க் காட்சிதரும் தில்லைக்குப் பொன்வேய்ந்தவன் = சோழன் முதல் பராந்தகன்.
பதினெட்டு சிற்றூர்களையும் வென்று மலைநாடு வென்றவன் = சோழன் முதல் இராசராசன்.
வடக்கே படையெடுத்துக் கங்கையும் கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டவன், சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்தவன் = சோழன் இராசேந்திரன்.
சாளுக்கியர்களின் தலைநகரான கல்யானபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்றவன் = சோழன் இராசாதிராசன்.
கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் = சோழன் இராசேந்திரன்.
திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் = சோழன் இராசமகேந்திரன்.
சொற்பொருள்:
குவடு – மலை
பொன்னி – காவிரி
கொத்து – குற்றம்
அரவம் – பாம்பு
ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் = ஒட்டக்கூத்தர்
சிறப்புப்பெயர் = கவிச்சக்ரவர்த்தி
சிறப்பு = விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
இயற்றிய நூல்கள் = மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
காலம் = பனிரெண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
உலா என்பது 96 வகை சிற்றிலக்கியனங்களுள் ஒன்று.
இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகை சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றன.
உலா என்பதற்கு “ஊர்கோலம் வருதல்” என்பது பொருள்.
பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என எழுவகைப் பெண்களும் காதல் கொள்வதாய்க் அமைத்துப் பாடுவது உலா.
முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
அவனின் தயார் மதுராந்தகி.
இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.
Related