சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஓய்வும் பயனும்

ஓய்வும் பயனும்

அறிவியல் ஆய்வு செய்வாய் – நீ
அன்றாடச் செய்தி படிப்பாய்!
செறிவுறும் உன்றன் அறிவு – உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!

மருத்துவ நூல்கள் கற்பை – உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய்!
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் – வருந்
தீமைடயும் பொய்யும் களைவாய்!
– பெருஞ்சித்திரனார்

ஆசிரியர் குறிப்பு:

  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை மாணிக்கம்
  • இவர் சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்.
  • பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்.
  • 10.03.1933 அன்று பிறந்த இவர், 11.06.1995ஆம் நாள் மறைந்தார்.
  • கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
  • தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை ஊட்டினார்.

Leave a Comment

Your email address will not be published.