கலிங்கத்துப்பரணி
சொற்பொருள்:
- தீயின்வாய் – நெருப்பில்
- சிந்தை – எண்ணம்
- கூர – மிக
- நவ்வி – மான்
- முகில் – மேகம்
- மதி – நிலவு
- உகு – சொரிந்த(பொழிந்த)
இலக்கணக்குறிப்பு:
- வெந்து, உலர்ந்து, எனா, கூர – வினையெச்சம்
- செந்நாய் – பண்புத்தொகை
- கருமுகிலும் வெண்மதியும் – எண்ணும்மை
- கருமுகில், வெண்மதி – பண்புத்தொகை
- கடக்க, ஓடி, இளைத்து – வினையெச்சம்
பிரித்தறிதல்:
- வாயினீர் = வாயின் + நீர்
- வெந்துலர்ந்து = வெந்து + உலர்ந்து
- காடிதனை = காடு + இதனை
- கருமுகில் = கருமை + முகில்
- வெண்மதி = வெண்மை + மதி
ஆசிரியர் குறிப்பு:
- கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் செயங்கொண்டார்.
- இவர் திருவாரூர் மாவட்டம் தீபங்குடியில் பிறந்தவர்.
- இவர் முதல் குலோத்துங்கசோழனின் அரசவைப் புலவர்.
- “பரணிக்கோர் சயங்கொண்டார்” எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
- இசையாயிரம், உலா, மடல் ஆகிய நூல்களையும் இயற்றி உள்ளார்.
- இவரது காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
- ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பரணி என்று பெயர்.
- இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- தமிழி தோன்றிய முதல் பரணி = கலிங்கத்துப்பரணி
- கலிங்க மன்னன் ஆனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான். அவ்வெற்றியை பாராட்டி எழுதப்பட்ட நூல் இது.
- இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.
- ஒட்டக்கூத்தர் இந்நூலைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்துள்ளார்.
ஆயிரம் யானை அமரிடை வென்ற மாணவ னுக்கு வகுப்பது பரணி – பன்னிரு பாட்டியல் |
- பேரறிஞர் அண்ணா, “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” என்றார்.
உலகளாவிய தமிழர்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி – புறப்பொருள் வெண்பாமாலை |
- உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.
- இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
- சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
- சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
- ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.
- இலங்கையில் வாழும் தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.
- இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.