Skip to content
முத்தொள்ளாயிரம்
சொற்பொருள்:
- உய்ம்மின் – பிழைத்துக் கொள்ளுங்கள்
- மலை – வளமை
- வள் – நெருக்கம்
- விசும்பு – வானம்
- புரவு – புறா
- நிறை – எடை
- ஈர்த்து – அறுத்து
- துலை – துலாக்கோல்(தராசு)
- நிறை – ஒழுக்கம்
- மேனி – உடல்
- மறுப்பு – தந்தம்
- ஊசி – எழுத்தாணி
- மறம் – வீரம்
- கனல் – நெருப்பு
- மாறன் – பாண்டியன்
- களிறு – யானை
இலக்கணக்குறிப்பு:
- மாமலை –உரிச்சொற்றொடர்
- நெடுமதில் – பண்புத்தொகை
- வாங்குவில் – வினைத்தொகை
- உயர்துலை – வினைத்தொகை
- குறையா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
- இலைவேல் – உவமைத்தொகை
- மருப்பூசி, மார்போலை – உருவகம்
- மாறன்களிறு – ஆறாம் வேற்றுமைத் தொகை
பிரித்தறிதல்:
- தந்துய்ம்மின் = தந்து +உய்ம்மின்
- வில்லெழுதி = வில் + எழுதி
- பூட்டுமின் = பூட்டு + மின்
- மருப்பூசி = மறுப்பு + ஊசி
- எமதென்று = எமது + என்று
- மொய்யிலை = மொய் + இலை
நூல் குறிப்பு:
- மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களை கொண்டது.
- ஆயினும் இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
- “புறத்திரட்டு” என்னும் நூல் வாயிலாக 108 வெண்பாக்களும், பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
- இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
Related