தருமு சிவராமு
தருமு சிவராமு
- ஊர் = இலங்கையில் உள்ள திரிகோண மலை
- இயற்பெயர் = சிவராமலிங்கம்
புனைப்பெயர்கள்
- பிரமிள்
- பானுசந்திரன்
- அரூப்சிவராம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சிறப்பு பெயர்கள்
- படிமக் கவிஞர்
- ஆன்மீகக் கவிஞர்
கவிதை நூல்கள்
- கண்ணாடி உள்ளிருந்து
- கைப்பிடியளவு கடல்
- மேல்நோக்கிய பயணம்
- பிரமிள் கவிதைகள்
- சூரியன் தகித்த நிறம்
- காவியம் (புகழ்பெற்ற நூல்)
- விடிவு
சிறுகதை
- லங்காபுரிராஜா
- பிரமிள் படைப்புகள்
- காடன் கண்டது
- பாறை
- நீலம்
- கோடரி
- கருடனூர் ரிப்போர்ட்
- சந்திப்பு
- அசரீரி
- சாமுண்டி
- அங்குலிமாலா
- கிசுகிசு
நாவல்
- ஆயி
- பிரசன்னம்
உரைநடை
- மார்க்சும் மார்க்சீயமும்
- வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்
- பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள்
- விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள்
- ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை
- காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள்
- வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்
நாடகம்
- நட்சத்திரவாசி
தருமு சிவராமு சிறப்புகள்
- புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
- ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும்.
- தி.ஜானகிராமன் இவரை “தமிழின் மாமேதை”, “நவீன தமிழ் இலக்கியத்தின் மாமேதை” என்றும் சிறப்பித்துள்ளார்.
- “உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்” என்று சி.சு.செல்லப்பா இவரை பாராட்டியுள்ளார்.
- “பிரமிள் விசித்திரமான படிமவாதி” என்று சி.சு.செல்லப்பா கூறியுள்ளார்.
- இளம் வயதிலேயே மௌனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.
- “கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்” என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
- ‘காவியம்’ என்ற கவிதை பிரமிளின் மிகப்புகழ்பெற்ற தமிழின் முக்கியமான கவிதைகளுள் ஒன்று.
- “பிரமிள் தமிழ்க் கவிதையின் தனிப்பெரும் ஆளுமை” என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
- “புதுக் கவிதை தொடர்பான அதிகபட்ச பிரக்ஞையும் , மரபின் செழுமையும், சமத்காரப் பண்பும், தனித்துவமான படிம வெளியீட்டு முறையையும் பெற்றவர் பிரமிள்” என விமர்சகர் சங்கர ராம சுப்ரமணியன் பதிவு செய்துள்ளார்.
- “இன்றைய தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி விமர்சன ரீதியாக நிர்ணயிக்கும் முதல் கட்டுரை மௌனியின் கதைக்கு பிரமிள் எழுதிய முன்னுரை, ‘எழுத்து’ சஞ்சிகை மூலம் நமக்குக் கிடைத்த விமர்சகர். அவரது நடை சிந்தனைத்துடிப்பு மிக்கது. நுணுக்கமும், ஆழமும், உடையது . அவர் எழுத்து மேல்நாட்டு இலக்கிப் பரிச்சயத்தால் வளம் பெற்றது” எனக் கவிஞர் நகுலன் குறிப்பிட்டுள்ளார்.
- நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன்” விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” வழங்கியது.
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்
Given a wonderful article about DharmuSivaramu. I am very much interested to read his writings. Can you suggest me a way to get his writings. Thank you. — C.Ramachandran.
thank u for ur valuble comments. freely available in some telegram channels.