நெடுநல்வாடை
நூல் அமைப்பு
- திணை = முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்)
- பாவகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 188
பெயர்க்காரணம்
- தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று.
- நெடுமை + நன்மை + வாடை = நெடுநல் வாடை
நெடுநல்வாடை வேறு பெயர்கள்
- பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
- மொழிவளப் பெட்டகம்
- சிற்பப் பாட்டு
- தமிழ்ச் சுரங்கம் ( திரு.வி.கா)
நெடுநல்வாடை ஆசிரியர்
- பாடிய புலவர் = நக்கீரர்
- பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
உரை
- கோதண்டபாணி பபிள்ளை உரை
- வேங்கடா செட்டியார் உரை
திரு.வி.காவின் கூற்று
- நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக் குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையை குறிக்கும்; எனவே அழியாது நீளும் நல்வாடை” என்றார்.
- திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடு நல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன” என்றார்.
- திரு.வி.க அவர்கள், “நெடு நல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.
பொதுவான குறிப்புகள்
- நெடுநல் வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.
- “கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்
- பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.
- இதில் கூறப்பட்டுள்ள பாசறை = கூதிர் பாசறை
முக்கிய அடிகள்
- குன்று குளிர்ப்பன்னக் கூதிர்ப்பானாள்
- வேம்புதலை யாத நோன்காழ் எஃகம்
- சிலரொடு திரிதரும் வேந்தன்
- பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
- மா மேயல் மறப்ப மந்தி கூர
- பறவை பதிவான வீழ, கறவை
- கன்று கோள் ஒழியக் கடிய வீசி