மணிமேகலை
மணிமேகலை நூல் அமைப்பு
- ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
- அடிகள் = 4755 வரிகள்
- காதைகள் = 30
- பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
- சமயம் = பௌத்தம்
மணிமேகலை நூலின் வேறு பெயர்கள்
- மணி மேகலைத் துறவு
- முதல் சமயக் காப்பியம்
- அறக்காப்பியம்
- சீர்திருத்தக்காப்பியம்
- குறிக்கோள் காப்பியம்
- புரட்சிக்காப்பியம்
- சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
- கதை களஞ்சியக் காப்பியம்
- பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
- பசு போற்றும் காப்பியம்
- இயற்றமிழ்க் காப்பியம்
- துறவுக் காப்பியம்
மணிமேகலை ஆசிரியர் குறிப்பு
- மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
- இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
- கூலவாணிகம் செய்தவர்(கூலம் = தானியம்)
- இவரை, “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” எனப் போற்றுவர்.
மணி மேகலை நூல் குறிப்பு
- இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை.
- முப்பது காதைகள் மட்டும் உள்ளன.
- முதல் காதை = விழாவறைக் காதை
- இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
மணிமேகலை கதை மாந்தர்கள்
- மணி மேகலையின் தோழி சுதமதி
- புத்தத்துறவி அறவன அடிகள்
- மணி மேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை
- மனி மேகலை பிறந்த ஊர் பூம்புகார்
- மணி மேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
- கோவலனின் குலதெய்வம் மணி மேகலை
மணிமேகலை குறிப்பு
- இரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் இது
- இரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு மிகுந்த நூல்
- பிறமொழிச் சொற்களை மிகுதியும் பயன்படுத்திய நூல் இதுவாகும்
- சிலப்பதிகாரத்தின் இறுதியில் “மணி மேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.
- இக்காப்பியத்தை சாத்தனார், இளங்கோவடிகள் முன் அரங்கேற்றினார்.
- கதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் இதுவே.
- தொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் மணி மேகலை.
- திருவள்ளுவரை “பொய்யில் புலவன்” எனவும் திருக்குறளைப் “பொருளுரை” என்றும் முதலில் கூறிய காப்பியம்
மேற்கோள்
- வினையின் வந்தது வினைக்கு விளைவாது
புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது
மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை
- கோள்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவளம் குன்றும்
- பசிப்பிணி என்னும் பாவி
- மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே
- இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
- அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லென காவலன் உரைக்கும்
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- மலைபடுகடாம்
- குறிஞ்சிப்பாட்டு
- முல்லைப்பாட்டு
- பட்டினப்பாலை
- நெடுநல்வாடை
- மதுரைக்காஞ்சி