மதுரைக்காஞ்சி
நூல் அமைப்பு
- திணை = மருதம், புறத்திணை
- பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா
- அடி எல்லை = 782
மதுரைக்காஞ்சி பெயர்க்காரணம்
- மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக் காஞ்சி
மதுரைக்காஞ்சி வேறு பெயர்கள்
- மாநகர்ப்பாட்டு (ச.வே.சுப்பிரமணியன்)
- கூடற் தமிழ்
- காஞ்சிப்பாட்டு
மதுரைக்காஞ்சி ஆசிரியர்
- பாடிய புலவர் = மாங்குடி மருதனார்
- பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியனின் போர் வெற்றி
- கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
- குறுநில மன்னர்கள் ஐவர் = திதியன், எழினி, எருமையூரன், பொருளன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களை தோற்கடித்தான்
பாண்டியனின் முன்னோர்
- முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
- நிலத்திரு திருவிற் பாண்டியன்
பொதுவான குறிப்புகள்
- நிலையாமையை உணர்த்தும் திணை காஞ்சித்திணை
- தொல்காப்பியரின் காஞ்சித்திணை நிலையாமை பற்றியது; புறப்பொருள் வெண்பா மாலையின் காஞ்சித் திணை போர் பற்றியது.
- பத்துப்பாட்டின் அதிக அடிகளை கொண்டது
- பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகு வளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.
- மதுரையின் நாள் அங்காடியும் (பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.
- இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்
- மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா.
முக்கிய அடிகள்
- கரை பொருது இறங்கும் கணைஇரு முந்நீர்
திரையீடு மணலிலும் பலரே, உரைசொல்
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
- அளந்து கடை அறியா வளம்கெழு தாரமொடு
புத்தேன் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை