அந்தாதி இலக்கியம்
அந்தாதி இலக்கியம்
- அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- அந்தம் = இறுதி, ஆதி = முதல்
அந்தாதி என்றால் என்ன
- ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
- இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.
- முதல் அந்தாதி நூல் = காரைக்கால் அம்மையாரின் “அற்புதத் திருவந்தாதி’
அந்தாதி வகைகள்
- பதிற்றுப் பத்தந்தாதி
- யமாக அந்தாதி
- திரிபந்தாதி
- நீரோட்டக யமாக அந்தாதி
அந்தாதி நூல்கள்
அற்புதத் திருவந்தாதி (முதல் அந்தாதி நூல்) |
காரைக்கால் அம்மையார் |
சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி |
|
திருவேங்கடத்தந்தாதி |
பிள்ளை பெருமாள் ஐயங்கார் |
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி (குட்டித் திருவாசகம் எனப்படும்) | |
வீரை அந்தாதி, கோமதி அந்தாதி |
காவடிசிந்து அண்ணாமலையார் |
அற்புதத் திருவந்தாதி
- இந்நூலின் ஆசிரியர் = காரைக்கால் அம்மையார்
- இவரின் இயற்பெயர் = புனிதவதி
- இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்
- 63 நாயன்மார்களில் கோவிலில் இவர் மட்டுமே அமர்ந்த நிலையில் இருக்கும் பெருமை பெற்றவர்.
- இவரின் பாடல்கள் மட்டும் “மூத்த திருப்பதிகம்” எனப் போற்றப்படும்
- கட்டளை கலித்துறை, அந்தாதி, மாலை என்னும் சிற்றிலக்கிய வகைகளை தொடங்கி வைத்தவர்.
- ஒரு பொருளை பல பொருளில் பாடும் பதிக மரபை தொடங்கி வைத்தவர்.
திருவேங்கடத் தந்தாதி
- இந்நூலின் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
- இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
- இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
- “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
- இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.