காவடிச்சிந்து

காவடிச்சிந்து

காவடிச்சிந்து

காவடிச்சிந்து

  • காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று. கலம்பக உறுப்பாக வரும் சிந்து வேறு.
  • சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும்.
  • அஃது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு.
  • சென்னிக்குளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்
  • பெயர் = அண்ணாமலையார்
  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
  • பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள்
  • காவடிச் சிந்தின் தந்தை எனப்படுபவர் = அண்ணாமலையார்
  • நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர்.
  • தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர்.
  • தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்தின் தந்தை அழைக்கப்படுகிறார்.
  • நூல்கள் = காவடிச் சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ். வீரை தலபுராணம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை,
  • சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.
  • காலம் = 1861–1890
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.
  • இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.

 

Leave a Reply