மா இராசமாணிக்கனார்
மா இராசமாணிக்கனார் வரலாறு
- இயற் பெயர் = இராசமாணிக்கம்
- பெற்றோர் = மாணிக்கம் – தாயாரம்மாள்
- மனைவி = கண்ணம்மாள்
- சகோதரர் = இராமகிருஷ்ணன்
- காலம் = மார்ச் 12, 1907 – 26 மே, 1967
கல்வி பயில்தல்
- இவர் தற்போதைய ஆந்திர மாநிலம் கர்னூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை பயின்றார்
- இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார்
- தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்
மா இராசமாணிக்கனார் பெற்ற சைவத் தமிழ் பட்டங்கள்
- சைவ சமயத்தில் இவர் ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து இவருக்குச் சைவ சமயத் தலைவர்களின் வாயிலாகப் பல பட்டங்கள் வழங்கப்பட்டன. அவை,
- சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் – 1951ல் திருவாடுதுறை ஆதீனம் வழங்கினார்.
- ஆராய்ச்சிக் கலைஞர் – 1955ல் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் வழங்கினார்.
- சைவ இலக்கிய பேரறிஞர் – 1963ல் தருமபுர ஆதீனம் வழங்கினார்.
- சைவ நெறிக் காவலர் – சைவ சித்தாந்த சமாஜ்.
மா இராசமாணிக்கனார் படைப்புகள்
- நாற்பெரும் வள்ளல்கள் (முதல் நூல்)
- பொற்கால வாசகம் (முதல் பாடநூல்)
- ஹர்ஷவர்த்தனன் (1930)
- முடியுடை மூவேந்தர் (1931)
- பொற்கால வாசகம் (1932) பாடநூல்.
- ஏப்ரஹாம் லிங்கன் (1934)
- முசோலினி (1934)
- பெரியபுராண ஆராய்ச்சி
- பல்லவர் வரலாறு
- பல்லவப் பேரரசர்
- சோழர் வரலாறு
- தமிழர் திருமண நூல்
- பத்துப்பாட்டு ஆராய்ச்சி
- சங்க காலத் தமிழ்ச் சமுதாயம்
- இலக்கிய அமுதம்
- கால ஆராய்ச்சி
- புதிய தமிழகம்
- சேக்கிழார் – ஆராய்ச்சி நூல்
- சேக்கிழார்
- சைவ சமய வளர்ச்சி
- சைவ சமயம்
- சிலப்பதிகாரக் காட்சிகள்
- மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்
- தமிழ் அமுதம்
- தமிழ் இனம்
- தமிழ்நாட்டு வட எல்லை
- தமிழ்மொழி இலக்கிய வரலாறு
- தமிழக ஆட்சி
- தமிழகக் கலைகள்
- தமிழர் திருமணத்தில் தாலி
மா இராசமாணிக்கனார் நூல்கள்
- நாற்பெரும் வள்ளல்கள் 1930
- ஹர்ஷவர்த்தனன் 1930
- முடியுடை வேந்தர் 1931
- நவீன இந்திய மணிகள் 1934
- தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934
- முசோவினி 1934
- ஏப்ரஹாம் லிங்கன் 1934
- அறிவுச்சுடர் 1938
- நாற்பெரும் புலவர்கள் 1938
- தமிழர் திருமண நூல் 1939
- தமிழர் திருமண இன்பம் 1939
- மணிமேகலை 1940
- மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941
- பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941
- பல்லவர் வரலாறு 1944
- மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944
- சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945
- இரண்டாம் குலோத்துங்கள் 1945
- கட்டுரை மாலை 1945
- செய்யுள் – உரைநடைப் பயிற்சி நூல் 1945
- முத்தமிழ் வேந்தர் 1946
- காலியம் செய்த கவியரசர் 1946
- விசுவநாத நாயக்கர் 1946
- சிவாஜி 1946
- சிலப்பதிகாரக் காட்சிகள் 1946
- இராஜேந்திர சோழன் 1946
- பல்லவப் பேரரசர் 1946
- கட்டுரைக் கோவை 1946
- சோழர் வரலாறு 1947
- ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947
- பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947
- வீரத் தமிழர் 1947
- இருபதாம் நூற்றாண்டுப் புலவர் பெருமக்கள் 1947
- இந்திய அறிஞர் 1947
- தமிழ்நாட்டு வடஎல்லை 1948
- பெரியபுராண ஆராய்ச்சி 1948
- கதை மயர் மாலை (மலர் ஒன்று) 1948
- இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948
- சிறுகதைக் களஞ்சியம் (பகுதி ஒன்று) 1949
- சிறுகதைக் களஞ்சியம் (பகுதி இரண்டு) 1949
- சிறுகதைக் களஞ்சியம் (பகுதி மூன்று) 1949
- மேனாட்டுத் தமிழறிஞர் 1950
- தென்னாட்டுப் பெருமக்கள் 1950
- இந்தியப் பெரியார் இருவர் 1950
- தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950
- நாற்பெரும் புலவர் 1950
- மறைமலையடிகள் 1951
- அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951
- சங்கநூற் காட்சிகள் 1952
- இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953
- விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953
- பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953
- சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954
- திருவள்ளுவர் காலம் யாது? 1954
- சைவ சமயம் 1955
- கம்பர் யார்? 1955
- வையை 1955
- தமிழர் திருமணத்தில் தாலி 1955
- பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955
- இலக்கிய அறிமுகம் 1955
- அருவிகள் 1955
- தமிழ் மொழிச் செல்வம் 1956
- பூம்புகார் நகரம் 1956
- தமிழ் இனம் 1956
- தமிழர் வாழ்வு 1955
- வழிபாடு 1957
- இல்வாழ்க்கை 1957
- தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957
- வழியும் வகையும் 1957
- ஆற்றங்கரை நாகரிகம் 1957
- தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957
- என்றுமுள தென்றமிழ் 1957
- சைவ சமய வளர்ச்சி 1958
- பொருநை 1958
- அருள்நெறி 1958
- தமிழரசி 1958
- இலக்கிய அமுதம் 1958
- எல்லோரும் வாழவேண்டும் 1958
- தமிழகக் கலைகள் 1959
- தமிழக ஆட்சி 1959
- தமிழக வரலாறு 1959
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் 1959
- தென்பெண்ணை 1959
- புதிய தமிழகம் 1959
- நாட்டுக்கு நல்லவை 1959
- தமிழ் அமுதம் 1959
- பேரறிஞா இருவர் 1959
- துருக்கியின் தந்தை 1959
- தமிழகக் கதைகள் 1959
- குழந்தைப் பாடல்கள் 1960
- கட்டுரைச் செல்வம் 1960
- தமிழகப் புலவர் 1960
- தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1954
- தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965
- சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969
- பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970
- கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977
- இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978
- இலக்கிய ஓவியங்கள் 1979
பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள்
- சிறுவர் சிற்றிலக்கணம்
- பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும்
- பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி-2)
ஆங்கில நூல்
- The Development of Saivism in South India 1964
மா இராசமாணிக்கனார் பார்வைக்குக் கிடைக்காத நூல்கள்
- பதிற்றுப்பத்துக் காட்சிகள்
- செந்தமிழ்ச் செல்வம்
- தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள்
- பள்ளித் தமிழ் இலக்கணம்
- செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்)
- செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)
மா இராசமாணிக்கனார் குறிப்புக்கள்
- எட்டு ஆண்டுகள் தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936ஆம் ஆண்டு முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்று பி.ஓ.எல், எல்.டி., எம்.ஓ.எல் ஆகிய பட்டங்களை முறையே 1939, 1944, 1945 ஆகிய ஆண்டுகளில் பெற்றார்
- 1947 முதல் 1953 வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்
- 1953ல் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராகவும் தலைமை பேராசிரியராகவும் பொறுப்பேற்றார்
- 1959 முதல் 1967 வரை சென்னைப் பல்கலைக்கழக துணைத்தமிழ் பேராசிரியராகவும் மா இராசமாணிக்கனார் பணியாற்றியுள்ளார்
- மா இராசமாணிக்கனாரின் முதல் நூல் = நாற்பெரும் வள்ளல்கள்
- மா இராசமாணிக்கனாரின் முதல் பாடநூல் = பொற்கால வாசகம்
மா இராசமாணிக்கனார் சிறப்புகள்
- 1935இல் இராசமாணிக்கனார் வித்துவான் பட்டம் பெற்றார்
- இவர் முனைவர் பட்டம் பெற காரணமாக இருந்த நூல் = சைவ சமய வளர்ச்சி
- 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
- தருமபுர ஆதினம் இவரது “சைவ சமய வளர்ச்சி” என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டனர்
- தமிழில் முதன் முதலாக சிந்துவெளி நாகரிகம் பற்றி நூல் எழுதியவர் மா இராசமாணிக்கனார். இவரின் நூல் = மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்
- முதன் முதலில் தமிழில் சங்க காலம் தொடங்கி, பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ச்சி நோக்கில் எழுதியவர் மா இராசமாணிக்கனார்.
- ஹீராஸ் பாதிரியார் = “தென்னிந்திய வரலாறு பற்றியும் இலக்கியம் பற்றியும் வித்துவான் மா. இராசமாணிக்கம் எழுதியுள்ள நூல்கள் பலவும் அவரது மகத்தான சாதனைகளாகும். பல்லவர், சோழர் வரலாறுகளின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றி அவர் இயற்றிய இந்த நூல்கள் அயராத அவர் உழைப்புக்கு அழியாச் சின்னங்களாகும்” என்றார்
- இராசமாணிக்கனாரின் மாணவர் ஐராவதம் மகாதேவன் = இராசமாணிக்கனார் ஒரு தலைசிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல; சிறந்த பண்பாளர்; நிதானப் போக்குப் படைத்தவர்; மாணவர்களிடம் அவர் காட்டிய பரிவையும் மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பையும் நான் நேரில் அறிவேன். சமூக சீர்திருத்தங்களைப் பற்றிய அவரது கொள்கைகள் தீவிரமானவை; அவற்றைத் தம் வாழ்வில் கடைபிடித்தார், ஆனால் பிறர் மீது திணிக்க முயலவில்லை. அவரது தமிழறிவும் சீரிய வாழ்வும் இராசமாணிக்கனாருக்கு அழியாப் புகழைத் தேடி தந்துள்ளன.
- திரு.வி.க = இராசமாணிக்கத்தின் உரைநடை எளிமையானது; ஆராய்சிக்கு ஏற்றது. அதில் வெற்றுரையோ சொல்லடுக்கோ பொருளற்ற மொழியோ கிடையாது.
- கவிஞர் ஈரோடு தமிழன்பன் = தலைமைப் புலமை நிலையம் தமிழ் மொழிக்குத் தக்க பாதுகாப்பு வளையம்