மா இராசமாணிக்கனார்

மா இராசமாணிக்கனார்

மா இராசமாணிக்கனார்

மா இராசமாணிக்கனார் வரலாறு

  • இயற் பெயர் = இராசமாணிக்கம்
  • பெற்றோர் = மாணிக்கம் – தாயாரம்மாள்
  • மனைவி = கண்ணம்மாள்
  • சகோதரர் = இராமகிருஷ்ணன்
  • காலம் = மார்ச் 12, 1907 – 26 மே, 1967

கல்வி பயில்தல்

  • இவர் தற்போதைய ஆந்திர மாநிலம் கர்னூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை பயின்றார்
  • இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார்
  • தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்

மா இராசமாணிக்கனார் பெற்ற சைவத் தமிழ் பட்டங்கள்

  • சைவ சமயத்தில் இவர் ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து இவருக்குச் சைவ சமயத் தலைவர்களின் வாயிலாகப் பல பட்டங்கள் வழங்கப்பட்டன. அவை,
    1. சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் – 1951ல் திருவாடுதுறை ஆதீனம் வழங்கினார்.
    2. ஆராய்ச்சிக் கலைஞர் – 1955ல் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் வழங்கினார்.
    3. சைவ இலக்கிய பேரறிஞர் – 1963ல் தருமபுர ஆதீனம் வழங்கினார்.
    4. சைவ நெறிக் காவலர் – சைவ சித்தாந்த சமாஜ்.

இராசமாணிக்கனார்

மா இராசமாணிக்கனார் படைப்புகள்

  • நாற்பெரும் வள்ளல்கள் (முதல் நூல்)
  • பொற்கால வாசகம் (முதல் பாடநூல்)
  • ஹர்ஷவர்த்தனன் (1930)
  • முடியுடை மூவேந்தர் (1931)
  • பொற்கால வாசகம் (1932) பாடநூல்.
  • ஏப்ரஹாம் லிங்கன் (1934)
  • முசோலினி (1934)
  • பெரியபுராண ஆராய்ச்சி
  • பல்லவர் வரலாறு
  • பல்லவப் பேரரசர்
  • சோழர் வரலாறு
  • தமிழர் திருமண நூல்
  • பத்துப்பாட்டு ஆராய்ச்சி
  • சங்க காலத் தமிழ்ச் சமுதாயம்
  • இலக்கிய அமுதம்
  • கால ஆராய்ச்சி
  • புதிய தமிழகம்
  • சேக்கிழார் – ஆராய்ச்சி நூல்
  • சேக்கிழார்
  • சைவ சமய வளர்ச்சி
  • சைவ சமயம்
  • சிலப்பதிகாரக் காட்சிகள்
  • மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்
  • தமிழ் அமுதம்
  • தமிழ் இனம்
  • தமிழ்நாட்டு வட எல்லை
  • தமிழ்மொழி இலக்கிய வரலாறு
  • தமிழக ஆட்சி
  • தமிழகக் கலைகள்
  • தமிழர் திருமணத்தில் தாலி

மா இராசமாணிக்கனார்

மா இராசமாணிக்கனார் நூல்கள்

  1. நாற்பெரும் வள்ளல்கள் 1930
  2. ஹர்ஷவர்த்தனன் 1930
  3. முடியுடை வேந்தர் 1931
  4. நவீன இந்திய மணிகள் 1934
  5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934
  6. முசோவினி 1934
  7. ஏப்ரஹாம் லிங்கன் 1934
  8. அறிவுச்சுடர் 1938
  9. நாற்பெரும் புலவர்கள் 1938
  10. தமிழர் திருமண நூல் 1939
  11. தமிழர் திருமண இன்பம் 1939
  12. மணிமேகலை 1940
  13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941
  14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941
  15. பல்லவர் வரலாறு 1944
  16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944
  17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945
  18. இரண்டாம் குலோத்துங்கள் 1945
  19. கட்டுரை மாலை 1945
  20. செய்யுள் – உரைநடைப் பயிற்சி நூல் 1945
  21. முத்தமிழ் வேந்தர் 1946
  22. காலியம் செய்த கவியரசர் 1946
  23. விசுவநாத நாயக்கர் 1946
  24. சிவாஜி 1946
  25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946
  26. இராஜேந்திர சோழன் 1946
  27. பல்லவப் பேரரசர் 1946
  28. கட்டுரைக் கோவை 1946
  29. சோழர் வரலாறு 1947
  30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947
  31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947
  32. வீரத் தமிழர் 1947
  33. இருபதாம் நூற்றாண்டுப் புலவர் பெருமக்கள் 1947
  34. இந்திய அறிஞர் 1947
  35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948
  36. பெரியபுராண ஆராய்ச்சி 1948
  37. கதை மயர் மாலை (மலர் ஒன்று) 1948
  38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948
  39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி ஒன்று) 1949
  40. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி இரண்டு) 1949
  41. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி மூன்று) 1949
  42. மேனாட்டுத் தமிழறிஞர் 1950
  43. தென்னாட்டுப் பெருமக்கள் 1950
  44. இந்தியப் பெரியார் இருவர் 1950
  45. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950
  46. நாற்பெரும் புலவர் 1950
  47. மறைமலையடிகள் 1951
  48. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951
  49. சங்கநூற் காட்சிகள் 1952
  50. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953
  51. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953
  52. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953
  53. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954
  54. திருவள்ளுவர் காலம் யாது? 1954
  55. சைவ சமயம் 1955
  56. கம்பர் யார்? 1955
  57. வையை 1955
  58. தமிழர் திருமணத்தில் தாலி 1955
  59. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955
  60. இலக்கிய அறிமுகம் 1955
  61. அருவிகள் 1955
  62. தமிழ் மொழிச் செல்வம் 1956
  63. பூம்புகார் நகரம் 1956
  64. தமிழ் இனம் 1956
  65. தமிழர் வாழ்வு 1955
  66. வழிபாடு 1957
  67. இல்வாழ்க்கை 1957
  68. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957
  69. வழியும் வகையும் 1957
  70. ஆற்றங்கரை நாகரிகம் 1957
  71. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957
  72. என்றுமுள தென்றமிழ் 1957
  73. சைவ சமய வளர்ச்சி 1958
  74. பொருநை 1958
  75. அருள்நெறி 1958
  76. தமிழரசி 1958
  77. இலக்கிய அமுதம் 1958
  78. எல்லோரும் வாழவேண்டும் 1958
  79. தமிழகக் கலைகள் 1959
  80. தமிழக ஆட்சி 1959
  81. தமிழக வரலாறு 1959
  82. தமிழர் நாகரிகமும் பண்பாடும் 1959
  83. தென்பெண்ணை 1959
  84. புதிய தமிழகம் 1959
  85. நாட்டுக்கு நல்லவை 1959
  86. தமிழ் அமுதம் 1959
  87. பேரறிஞா இருவர் 1959
  88. துருக்கியின் தந்தை 1959
  89. தமிழகக் கதைகள் 1959
  90. குழந்தைப் பாடல்கள் 1960
  91. கட்டுரைச் செல்வம் 1960
  92. தமிழகப் புலவர் 1960
  93. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963
  94. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1954
  95. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965
  96. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969
  97. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970
  98. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977
  99. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978
  100. இலக்கிய ஓவியங்கள் 1979

 

மா இராசமாணிக்கனார்

பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள்

  1. சிறுவர் சிற்றிலக்கணம்
  2. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும்
  3. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி-2)

ஆங்கில நூல்

  1. The Development of Saivism in South India 1964

மா இராசமாணிக்கனார் பார்வைக்குக் கிடைக்காத நூல்கள்

  1. பதிற்றுப்பத்துக் காட்சிகள்
  2. செந்தமிழ்ச் செல்வம்
  3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள்
  4. பள்ளித் தமிழ் இலக்கணம்
  5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்)
  6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)

மா இராசமாணிக்கனார் குறிப்புக்கள்

  • எட்டு ஆண்டுகள் தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936ஆம் ஆண்டு முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்று பி.ஓ.எல், எல்.டி., எம்.ஓ.எல் ஆகிய பட்டங்களை முறையே 1939, 1944, 1945 ஆகிய ஆண்டுகளில் பெற்றார்
  • 1947 முதல் 1953 வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்
  • 1953ல் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராகவும் தலைமை பேராசிரியராகவும் பொறுப்பேற்றார்
  • 1959 முதல் 1967 வரை சென்னைப் பல்கலைக்கழக துணைத்தமிழ் பேராசிரியராகவும் மா இராசமாணிக்கனார் பணியாற்றியுள்ளார்
  • மா இராசமாணிக்கனாரின் முதல் நூல் = நாற்பெரும் வள்ளல்கள்
  • மா இராசமாணிக்கனாரின் முதல் பாடநூல் = பொற்கால வாசகம்

மா இராசமாணிக்கனார் சிறப்புகள்

  • 1935இல் இராசமாணிக்கனார் வித்துவான் பட்டம் பெற்றார்
  • இவர் முனைவர் பட்டம் பெற காரணமாக இருந்த நூல் = சைவ சமய வளர்ச்சி
  • 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
  • தருமபுர ஆதினம் இவரது “சைவ சமய வளர்ச்சி” என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டனர்
  • தமிழில் முதன் முதலாக சிந்துவெளி நாகரிகம் பற்றி நூல் எழுதியவர் மா இராசமாணிக்கனார். இவரின் நூல் = மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்
  • முதன் முதலில் தமிழில் சங்க காலம் தொடங்கி, பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ச்சி நோக்கில் எழுதியவர் மா இராசமாணிக்கனார்.
  • ஹீராஸ் பாதிரியார் = “தென்னிந்திய வரலாறு பற்றியும் இலக்கியம் பற்றியும் வித்துவான் மா. இராசமாணிக்கம் எழுதியுள்ள நூல்கள் பலவும் அவரது மகத்தான சாதனைகளாகும். பல்லவர், சோழர் வரலாறுகளின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றி அவர் இயற்றிய இந்த நூல்கள் அயராத அவர் உழைப்புக்கு அழியாச் சின்னங்களாகும்” என்றார்
  • இராசமாணிக்கனாரின் மாணவர் ஐராவதம் மகாதேவன் = இராசமாணிக்கனார் ஒரு தலைசிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல; சிறந்த பண்பாளர்; நிதானப் போக்குப் படைத்தவர்; மாணவர்களிடம் அவர் காட்டிய பரிவையும் மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பையும் நான் நேரில் அறிவேன். சமூக சீர்திருத்தங்களைப் பற்றிய அவரது கொள்கைகள் தீவிரமானவை; அவற்றைத் தம் வாழ்வில் கடைபிடித்தார், ஆனால் பிறர் மீது திணிக்க முயலவில்லை. அவரது தமிழறிவும் சீரிய வாழ்வும் இராசமாணிக்கனாருக்கு அழியாப் புகழைத் தேடி தந்துள்ளன.
  • திரு.வி.க = இராசமாணிக்கத்தின் உரைநடை எளிமையானது; ஆராய்சிக்கு ஏற்றது. அதில் வெற்றுரையோ சொல்லடுக்கோ பொருளற்ற மொழியோ கிடையாது.
  • கவிஞர் ஈரோடு தமிழன்பன் = தலைமைப் புலமை நிலையம் தமிழ் மொழிக்குத் தக்க பாதுகாப்பு வளையம்

Leave a Reply