இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
195௦ ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது முகப்புரையில் (Preamble) இந்தியா ஒரு இறையாண்மையுடைய (Sovereign) ஜனநாயக (Democratic) குடியரசு (republic) என்று குறிப்பிட்டிருந்தது.
விடுதலை பெறுவதற்கு முன் இந்தியா பிரிட்டிஷ் ஏகாத்தியபத்தியத்துக்கு கட்டுப்பட்ட டொமினியனாக இருந்தது. சுதந்திரம் பெற்ற இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு, தன தலைவிதியைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் இறையாண்மை பெற்ற நாடாயிற்று.
மத்திய அரசு வெளியுறவுக் கொள்கையை எந்த நாட்டையும் சாராமல் சுதந்திரமாகத் தீர்மானித்துக் கொள்ளும். இதே போன்று மத்திய மாநில அரசுகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும். இச்செயல் சுதந்திரத்தை (freedom) வலியுறுத்தும் பொருட்டே இறையாண்மை என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
உலகில் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகள் இருந்தன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது இங்கிலாந்தில் நாடாளுமன்ற ஜனநாயகமும் (parliamentary democratic), அமெரிக்காவில் கூட்டாட்சியும் (Federalism), ஜெர்மனியில் நாசிச முறையும்,இத்தாலியில் பாசிச முறையும், இரஷ்யாவில் சோசியலிசமும் (Socialism), சீனாவில் கம்யுனிசமும் (Communism) பிரதானமாக இருந்தன. இவற்றுள் இந்தியா, ஜனநாயக பாதையில் செல்வதை அறிவிக்க ஜனநாயகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
இந்தியா விடுதலை அடைந்த போது பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் இருந்தது. விடுதலைக்குப் பின் இந்தியா குடியாட்சியாகி விட்டது என்பதற்காக இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இந்தியக் குடியாட்சியின் சிறப்புகள் மூன்று. அவை, இந்தியக் குடியரசுத் தலைவர் எந்த அரச குடும்பத்தையும் சேர்ந்தவர் அல்லர். இவருக்கென பொறுப்புகள் உண்டு. இவர் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
எனவே இந்தியக் குடியரசுத் தலைவர், இங்கிலாந்து அரசர் அல்லது அரசியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார். இந்த மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்ட குடியரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை
- INDEPENDENT BODIES / தன்னாட்சி அமைப்புகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்
- THREE TIER GOVERNMENT / மூன்றடுக்கு அரசாங்க முறை
- CO-OPERATIVE SOCIETIES / கூட்டுறவு அமைப்புகள்