ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை

                இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், இந்தியாவில் ஆட்சி நிர்வாகமானது கூட்டாட்சி (Federal) முறையில் நடைபெறுகிறது. அதாவது மத்தியில் மத்திய அரசும், அந்தந்த மாநிலங்களில் மாநில அரசும் ஆட்சி செய்கின்றன. இந்திய மக்கள் இரண்டு வகை ஆட்சியின் கீழ் இருந்தாலும், இந்திய மக்கள் அனைவருக்கும் “ஒற்றைக் குடி உரிமை” (Single Citizenship) முறை தான் வழங்கப்பட்டுள்ளது.

       ஆனால் அமெரிக்க (America) போன்ற நாடுகளில், இரட்டை குடி உரிமை (Double Citizenship) முறை உள்ளது. நாட்டிற்கு தேசிய குடி உரிமையும், அந்தந்த மாநிலத்திற்கு என்று தனி குடி உரிமையும் உள்ளது.

ஒற்றைக் குடியுரிமை

       இந்தியக் குடிமகன் எந்த மாநிலத்தை சார்ந்தவனாக இருந்தாலும், ஒற்றைக் குடியுரிமை கொண்ட இந்தியக் குடிமகனே ஆவான். மாநிலத்திற்கு என்று தனி குடியுரிமை இந்தியாவில் இல்லை. இதனால் இந்தியக் குடிமக்கள் இடையே எந்த ஏற்றத்தாழ்வும் எழவில்லை. அனைவரும் குடிமக்களே ஆவர். ஒற்றைக் குடியுரிமை நாட்டிற்கு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கிறது. பிரிவினைப் போக்குகளைத் தடுக்கிறது. குழப்பத்தை தவிர்க்கிறது. இக்குடி உரிமை இந்தியாவின் ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்துகிறது.

       ஒற்றைக் குடியுரிமை என்பது இந்திய ஒன்றியத்துக்கு கடமைபட்டிருப்பதாகும். பற்றும் பாசமும் வைத்திருக்க வேண்டும். நன்றியுடையவராக இருக்க வேண்டும். பிராந்தியப் பற்றை விட தேசப்பற்று மேலோங்கி இருக்க வேண்டியது இன்றியமையாதது. அதனால் தான் எவ்வித வேறுபாடும் இன்றி இந்திய மக்கள் அனைவருக்கும் குடி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமகன் எவரும் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று குடியேறலாம் (விதி 19). இந்த இயக்க சுதந்திரம் (Freedom of Movement) அனைவருக்கும் உண்டு.

ஒற்றைக் குடியுரிமை

 

Leave a Reply