அனைவருக்கும் வாக்குரிமை

அனைவருக்கும் வாக்குரிமை

அனைவருக்கும் வாக்குரிமை

அனைவருக்கும் வாக்குரிமை

                இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Constitution of India), வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை (Universal Adult Franchise) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வறுமை, எழுத்தறிவின்மை, அரசியல் அனுபவமின்மை மிக்க மக்களைக் கொண்ட இந்தியாவில் கல்வி, வருமானம், சொத்து, பால் வேறுபாடு போன்ற பாகுபாடின்றி வாக்குரிமை வழங்கப்பட்டது இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவாளர்கள் செய்த மகத்தான மாற்றமாகும்.

       ஜாதி, மதம், இனம், பால், எழுத்தறிவு, செல்வம் போன்ற எவ்வித காரணங்களுக்கும் பாகுபாடு இன்றி, 18 வயது பூர்த்தி ஆன அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

                இந்திய விடுதலையின் பொழுது, இந்திய மக்களின் வாக்களிக்க குறைந்த பட்ச வயது 21-ஆக இருந்தது. இதனை 1989-ம் ஆண்டு, “61-வது சட்டத்திருத்தும்,1988” (61st Amendment Act) படி 18 வயதாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் படித்தவர்களும், பாமரர்களும் எவ்வித முன் நிபந்தனையும் இன்றி ஜனநாயகத்தில் பங்கேற்கும் உரிமையையும், வாய்ப்பையும் பெற்றனர்.

அனைவருக்கும் வாக்குரிமை

       மிகப்பெரிய பரந்து விரிந்த நாடு, அதிக மக்கள்தொகை, அதிக வறுமை, சமூக சமத்துவமின்மை, பெரும் கல்வியறிவின்மை போன்ற காலக்கட்டத்தில் இருந்த போதும், இந்திய மக்களில் பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை உணர்ந்து, தேசத் தலைவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி உள்ளார்கள்.

அனைவருக்கும் வாக்குரிமை – குறிப்பு

அனைவருக்கும் வாக்குரிமை

  • 1932-ம் ஆண்டு அமைக்கப்பட்ட “லோத்தியன் பிரபு” (Lord Lothian) தலைமையிலான “வாக்குரிமை குழு” (Franchise Committee), வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்குவது பற்றி பரிசீலித்தது
  • இந்திய அரசுச் சட்டம் 1935-ன் (Government of India Act 1935) படி இந்திய மக்களில் 1௦% பேருக்கு வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • கே.எம்.பணிக்கர் = “இந்த உரிமை நூற்றாண்டுகளாக மனத் தேக்கமுற்றுக் கிடந்த மக்களை விடுவித்தது” என்றார்
  • நேரு = “வயது வந்தோருக்கு வாக்குரிமை என்பது சமுதாயப் புரட்சியின் தூண்” என்றார்.

Leave a Reply