உலா இலக்கியம்
உலா இலக்கியம்
- “ஊரொடு தோற்றமும் உரிதென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய இலக்கியம் உலா இலக்கியம்
- உலாவின் வேறு பெயர்கள் = பவனி, பெண்பாற் கைக்கிளை
- உலா வர பயன்படுவன = தேர், குதிரை, யானை
- உலாவில் முன்னிலைப் பகுதி, பின்னிலைப் பகுதி என இரு பகுதிகள் உண்டு
- தசாங்கம் உலா இலக்கியத்தில் இடம் பெரும்
- முதல் உலா நூல் = திருக்கைலாய ஞானஉலா(ஆதி உலா அல்லது தெய்வீக உலா)
- உலாவின் பாவகை = கலிவெண்பா
- உலா பாடுவதில் வல்லவர் = ஒட்டக்கூத்தர். “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்”
உலாவின் முன்னிலைப் பகுதி
- முன்னிலைப் பகுதியில் தலைவனின் சிறப்புக் கூறப்படும்
- ஏழு வகைப் பருவன் ஆண்கள் கூறப்படுவர்
-
- பாலன் = 1-7 வயது
- மீளி = 8-10 வயது
- மறவோன் = 11-14 வயது
- திறலோன் = 15 வயது
- காளை = 16 வயது
- விடலை = 17-30 வயது
- முதுமகன் = 30 வயதிற்கு மேல்
உலாவின் பின்னிலைப் பகுதி
- பின்னிலைப் பகுதியில் ஏழு பருவப் பெண்களின் காமம் கூறப்படும்.
- ஏழு வகைப் பருவ மகளிர்
-
- பேதை = 5-7 வயது
- பெதும்பை = 8-11 வயது
- மங்கை = 12-13 வயது
- மடந்தை = 14-19 வயது
- அரிவை = 20-25 வயது
- தெரிவை = 26-32 வயது
- பேரிளம் பெண் = 33-40 வயது
உலா நூல்கள்
திருக்கைலாய ஞான உலா |
சேரமான் பெருமாள் நாயனார் |
மூவருலா |
ஒட்டக்கூத்தர் |
ஆளுடைய பிள்ளை திரு உலா மாலை |
நம்பியாண்டார் நம்பி |
ஏகாம்பரநாதர் உலா |
இரட்டையர்கள் |
திருவாரூர் உலா |
அந்தக்கவி வீரராகவர் |
திருக்கழுகுன்ற உலா |
அந்தக்கவி வீரராகவர் |
திருகுற்றாலனாதர் உலா |
திரிகூட ராசப்ப கவிராயர் |
தில்லை உலா |
ஒட்டக்கூத்தர் |
சிவந்த்தெழுந்த பல்லவராயன் உலா |
படிக்காசுப் புலவர் |
மூவருலா
- இந்நூலின் ஆசிரியர் = ஓட்டக்கூத்தர்
- “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர் “ எனச் சிறப்பிக்கப்படுபவர்.
- மூவருலா என்பது மூன்று சோழ மன்னர்களை பற்றியது.
- இதில் விக்ரமசோழ உலா, குலோத்துங்க சோழ உலா, இராசராசசோழன் உலா ஆகிய மூன்று உலாக்கள் உள்ளன.
விக்ரமசோழன் உலா
- முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
- அவனின் தயார் மதுராந்தகி.
- இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.
திருக்கைலாய ஞான உலா
- இதன் ஆசரியர் சேரமான் பெருமாள் நாயனார்
- இந்நூலை “தெய்வீக உலா, ஆதி உலா” என்றும் கூறுவர்.
- உலா நூல்களில் இதுவே முதல் நூல்.