எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
மோனைத்தொடை:
- முதல் எழுத்து ஒன்றி வருவது
- ஓர் எழுத்துக்கு மோனையாக அதன் இன எழுத்தும்
வரலாம்.
அடிமோனை:
- செய்யுள் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்த
அடிகளின் முதல் எழுத்தாக வருவது அடிமோனை ஆகும். - இன எழுத்தும் மோனையாக அமையும்.
எ.கா:
நாணால் உயிரைத் துறப்பார்
நாண் துறவார்
சீர்மோனை:
1. இணை மோனை:
- அளவடியில் 1,2 சீர்கள் முதல் எழுத்து ஒன்றி வருவது
- இன எழுத்தும் மோனையாக அமையும்
எ.கா: கமழத் கமழத் தமிழிசை பாடினாள்.
2. பொழிப்பு மோனை:
- அளவடியில் 1, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது
எ.கா: நண்பற்றா ராகி நயமில் செய்தார்க்கும்
3. ஒருஉ மோனை
- அளவடியில் 1,4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா: அணியன்றோ நானுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
4. கூழை மோனை
- அளவடியில் 1, 2, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா.: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
5. மேற்கதுவாய் மோனை
- அளவடியில் 1, 3, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி
வருவது.
எ.கா. பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
6. கீழ்க்கதுவாய் மோனை
- அளவடியில் 1, 2, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது
எ.கா.: அவிர்மதி அனைய திருநுதல் அரிவை
7. முற்று மோனை:
- அளவடியில் 1, 2, 3, 4 சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்றுமோனை எனப்படும்.
- அனைத்துச் சீர்களிலும் மோனை இருக்கும்.
எ.கா. கண்ணும் கருத்துமாய் கலைகளைக் கற்றான்
எதுகைத் தொடை
- இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
அடி எதுகை:
செய்யுள் அடிகளின் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடிஎதுகை எனப்படும்.
எ.கா:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன்
சீர் எதுகை
1. இணை எதுகை:
அளவடியில் 1, 2 சீர்களில் முதல் எழுத்து
அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா.: காற்றாரைக் கற்றது உணரார்……
2. பொழிப்பு எதுகை:
அளவடியில் 1, 3 சீர்களில் முதல் எழுத்து
அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா.: வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வகை
3. ஒருஉ எதுகை: (1, 4)
எ.கா.: ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
4. கூழை எதுகை: (1, 2, 3)
எ.கா.: நன்னிற மென்முகை மின்னிடை வருத்தி
5. மேற்கதுவாய் எதுகை: (1, 3, 4)
எ.கா.: என்னையும் இடுக்கண் துன்னுவித் தின்னிசை
6. கீழ்க்கதுவாய் எதுகை: (1, 2, 4)
எ.கா.: இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
7. முற்று எதுகை: (1, 2, 3, 4)
(அனைத்துச் சீர்களிலும் எதுகை இருக்கும்)
எ.கா.: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
இயைபுத்தொடை
செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத்தொடை எனப்படும்.
சீர் இயைபுத் தொடை வகைகள் காணும்பொழுது
அளவடியில் இறுதிச்சீரே முதற்சீராகக் கொண்டு வழங்கப்படும்.
எ.கா:
வாழிய தேவ பிரான்
எங்கும் நிறைந்த பிரான் – அடி இயைபு
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – பொழிப்பு இயைபு
அன்புக்கோர் உரைக்கல்லாய் அருளுக்கோர் நிலையில்லாய் – பொழிப்பு இயைபு