ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை
ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை

      இந்திய அரசியல் அமைப்பு (Indian Constitution) சட்டமானது, இந்தியாவில் கூட்டாட்சி (Federalism) மற்றும் இரட்டை அரசு (Dual Polity) முறையை கொண்டிருந்தாலும், இந்தியாவில் ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship) முறையை மட்டுமே அனுமதித்துள்ளது. இந்தியக் குடிமக்கள், இந்தியாவிற்கே விசுவாசமாக இருப்பார்கள், ஏனென்றால் அவர்களுக்கு தனி மாநில குடியுரிமை என்று ஒன்றில்லை. அனால் உலகின் மற்ற கூட்டாட்சி தத்துவத்தை கொண்டுள்ள நாடுகளாக அமேரிக்கா மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில், அந்நாட்டு மக்களுக்கு இரட்டை குடியுரிமை (Double Citizenship) முறை வழங்கப்பட்டுள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

       அமெரிக்காவில், ஒவ்வொரு நபரும் அமெரிக்காவின் குடிமகன் மட்டுமல்ல, அவர் சேர்ந்த குறிப்பிட்ட மாகாணத்திற்கும் அவர் குடிமகன் ஆவார். அதனால் அவர் நாட்டிற்கும், மாநிலத்திற்கும் சேர்ந்து விசுவாசமாக இருக்க வேண்டும். மேலும் அவருக்கு இரட்டை உரிமைகள் உள்ளன. ஒன்று மாநில உரிமைகள், மற்றொன்று தேசிய உரிமைகள். இந்த அமைப்பு பாகுபாடு மற்றும் இன சிக்கலை உருவாக்குகிறது, அதாவது, ஒரு அரசு தனது குடிமக்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும் உரிமை, பொது அலுவலகங்களை நடத்தும் உரிமை, தொழில்களைப் பயிற்சி செய்வதற்கான உரிமை மற்றும் பலவற்றில் பாகுபாடு காட்டக்கூடும். அனால் இந்தியாவில் உள்ள ஒற்றைக் குடியுரிமை முறை மூலம் இந்தமாதிரி சிக்கல்கள் எழாது.

       இந்தியாவில், அனைத்து குடிமக்களும் தாங்கள் எந்த மாநிலத்தில் பிறந்தாலும் அல்லது வசித்தாலும் நாடு முழுவதும் ஒற்றைக் குடியுரிமையின் அடிப்படையில் ஒரே அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு இடையே எந்த பாகுபாடும் உருவாகுவதில்லை (In India, all citizens irrespective of the state in which they are born or reside enjoy the same political and civil rights of citizenship all over the country and no discrimination is made between them). அனால் சில இடங்களில் பாகுபாடு ஏற்படுத்தும் சில விதிவிலக்கு சட்டங்களும் இந்தியாவில் உள்ளன. அவை,

  1. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 16-ல் (Indian Constitutional Article 16) கூறப்பட்டுள்ளவாறு, சில மாநிலங்கள் அலல்து யூனியன் பிரதேசங்களில், உள்ளூர் வேலை வாய்ப்புகளில், அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கே வேலை வழங்கப்படும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில், அரசிதழில் குறிப்பிடப்படாத பணியிடங்களுக்கு, அம்மாநில மக்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பினை வழங்கும் சட்டத்திற்கு, இந்திய பாராளுமன்றம் “பொது வேலைவாய்பு (குடியிருப்பு தேவை) சட்டம், 1957” (Public Employments (Requirements as to Residence) Act 1957) மூலம் நிறைவேற்றி, அரசமைப்பு சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. அனால் தற்போது இச்சட்டம், 1974-ம் ஆண்டு காலாவதி ஆனதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
  2. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 15-ல் (Indian Constitutional Article 15) கூறப்படுவதாவது, எந்தவொரு குடிமகனுக்கும் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்கிறது. ஆனால் குடியிருப்பு அடிப்படையில் கூறப்படவில்லை (prohibits discrimination against any citizen on grounds of religion, race, caste, sex or place of birth and not on the ground of residence). அதாவது, இந்திய அரசிலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளில், இடம்பெறாத விஷயங்களில், அந்தந்த மாநில அரசுகள் அம்மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கலாம் என்று இதன் பொருளாகும். எடுத்துக்காட்டாக, கல்விக் கட்டணத்தில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பு கட்டண சலுகை அளித்தல்.
  3. இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 19-ல் (Article 19 of the Indian Constitution) கூறப்படுவது, அட்டவணை பழங்குடியினரின் (Scheduled Tribes) இயக்கம் (Freedom of Movement) மற்றும் குடியிருப்பு சுதந்திரத்தை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது. அதாவது, பழங்குடியினரின் பகுதியில், புதிய நபர்கள் குடியேறுதல், நுழைதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அட்டவணை பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாரம்பரிய தொழில் மற்றும் சொத்துக்களை சுரண்டலுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கும் இது நடைமுறைப் படுத்தப்படுகிறது.

ஒற்றைக் குடியுரிமை

  • இதுபோன்ற சிறப்பு சலுகைகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 2௦19-ம ஆண்டு வரை இருந்தது. ஆனால், 2019 ஆம் ஆண்டில், “அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீருக்கான விண்ணப்பம்) உத்தரவு, 2019” (The Constitution (Application to Jammu and Kashmir) Order 2019) என்ற சட்டம், குடியரசுத் தலைவரின் (president of India) பேரில் அமுல்படுத்தப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு சலுகைகள் இரத்து செய்யப்பட்டது.

 

 

Leave a Reply