குடியுரிமையை பறித்தல்

குடியுரிமையை பறித்தல்

குடியுரிமையை பறித்தல்
குடியுரிமையை பறித்தல்

குடியுரிமையை பறித்தல்

இந்திய அரசியல் சட்டத்தின் (Indian Constitution) பகுதி 2-ல் உள்ள “குடியுரிமை” (Citizenship) பிரிவில், இந்தியக் குடிமக்களில் யார் யாருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை சட்டம், 1955 (Indian Citizenship Act, 1955) படி, இந்தியக் குடியுரிமை எந்தெந்த வகைகளில் வழங்கப்படுகிறது (Acquisition of Citizenship) மற்றும் எவ்வகைகளில் துறக்கப்படுகிறது (Termination of Citizenship) என்பதையும் வரையறை செய்துள்ளது. இதன் படி, இந்தியக் குடியுரிமை கீழ்காணும் நிலைகளில், ஒருவரின் குடியுரிமை பறிக்கப்படுகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

குடியுரிமை பறித்தல் (Deprivation of Citizenship)

       இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி 1௦-ன் (Article 10) கீழ் ஒரு குடிமகனின் குடியுரிமை உரிமையைப் பறித்துக் கட்டளை பிறப்பிப்பதற்கு மத்திய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனால் இந்த அதிகாரத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிராக மத்திய அரசால் பயன்படுத்த முடியாது. “சலுகைகள் மூலம் குடியுரிமை” பெற்றவர், சட்ட விதி 5 படி (இப்பிரிவின் கீழ் குடியுரிமை பெற்றவர் அல்லது பதிவு செய்துக் கொண்டமையால் உரிமை பெற்றவர்) ஆகியோருக்கு எதிராகவே இதனை பயன்படுத்த முடியும். குடியுரிமை பறிக்கப்படும் (Deprivation of Citizenship) சூழ்நிலைகள்,

  1. மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது உண்மையை மறைத்தல் மூலம் இயற்கைமயமாக்கலின் (வெளிநாட்டவருக்கு குடியுரிமை) பதிவு அல்லது சான்றிதழ் பெறப்பட்டால் (the registration or certificate of naturalisation was obtained by means of fraud, false representation or the concealment of any material fact)
  2. ஒருவர் தனது செயலால் அல்லது பேசிச்னால் இந்திய அரசமைப்பு சட்டத்தின்பால் விசுவாசமற்று இருப்பதை அல்லது விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவது (that citizen has shown himself by act or speech to be disloyal or disaffected towards the Constitution of India as by law established)
  3. இந்தியாவிற்கு எதிராக போர், சட்டவிரோத வணிகம் போன்ற செயல்களை செய்யும் நாடுகளுக்கு உதவுதல், தொடர்பு கொள்ளுதல், வணிகம் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், உரிமை இரத்து செய்யப்படும் (that citizen has, during any war in which India may be engaged, unlawfully traded or communicated with an enemy or been engaged in, or associated with, any business that was to his knowledge carried on in such manner as to assist an enemy in that war)
  4. பதிவின் மூலம் அல்லது இயற்கைமயமாக்கல் மூலமோ குடியுரிமை பெற்று 5 ஆண்டுகளுக்குள், ஏதேனும் ஒரு வெளிநாட்டில் 2 ஆண்டுகள் குறையாமல் சிறையில் இருந்தால் உரிமை இரத்து செய்யப்படும் (that citizen has, within five years after registration or naturalisation, been sentenced in any country to imprisonment for a term of not less than two years)
  5. இந்தியக் குடிமகனாகத் தொடர்ந்து இருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் அயல்நாட்டில் தங்கி இருக்கும்பொழுது (that citizen has been ordinarily resident out of India for a continuous period of seven years)

குடியுரிமையை பறித்தல்

  • இந்தியக் குடிமகனாகத் தொடர்ந்து இருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் அயல்நாட்டில் தங்கி இருக்கும் பொழுது, ஆனால் அவர் வெளிநாட்டில் உள்ள மாணவராக இருந்தால், அல்லது இந்தியாவில் உள்ள ஒரு அரசாங்கத்தின் சேவையில் அல்லது இந்தியா உறுப்பினராக உள்ள ஒரு சர்வதேச அமைப்பில் இருந்தால் அல்லது தனது இந்திய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் ஒரு இந்திய தூதரகத்தில் ஆண்டுதோறும் பதிவு செய்திருந்தால் இது பொருந்தாது (that citizen has been ordinarily resident out of India for a continuous period of seven years, and during that period, has neither been at any time a student of any educational institution in a country outside India or in the service of a Government in India or of an international organisation of which India is a member, not registered annually in the prescribed manner at an Indian consulate his intention to retain his citizenship of India)

 

 

 

 

Leave a Reply