ஒழுங்குமுறைச் சட்டம் 1773

ஒழுங்குமுறைச் சட்டம் 1773

ஒழுங்குமுறைச் சட்டம் 1773

ஒழுங்குமுறைச் சட்டம் 1773, அதன் சிறப்பியல்புகள், சட்டம் உருவாகக் காரணமாக அமைந்தவை, அதனால் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை பற்றி இங்கு காண்போம்.

ஒழுங்குமுறைச் சட்டம் 1773

  • ஒழுங்குமுறைச் சட்டம் 1773 படி, ஆங்கிலேய அரசு, கம்பெனியின் அதிகாரம் மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தது. கம்பெனியின் அரசியல் மற்றும் நிர்வாக செயல்முறைகளை ஆங்கிலேய அரசு அனுமதித்தது.
  • கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய் வெகுவாக குறைந்தது
  • 1772ம் ஆண்டு நிதிச்சுமை காரணமாக பிரிட்டிஷ் அரசிடமிருந்து 1 மில்லியன் பவுண்டை கடனாக கம்பெனி பெற்றது
  • கம்பெனி அதிகாரிகள் இடையே அதிகார யுத்தமும், இலஞ்சமும் தலைத்தூக்கியது
  • வங்காளத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால், பஞ்சமும் ஏற்பட்டது

ஒழுங்குமுறைச் சட்டம் 1773

  • இராபர்ட் கிளைவ் கொண்டுவந்த “இரட்டை அரசு” (Dual System of Governaance) ஆட்சி முறையில் ஏற்பட்ட பிரச்சனைகளால், பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரிட்டிஷ் அரசிடம் தெரிவிக்கப்பட்டது
  • வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது

ஒழுங்குமுறைச் சட்டம் 1773

  • 1769 ம் ஆண்டு மைசூரின் ஹைதர் அலிக்கு எதிரான “முதலாம் மைசூர் போரில்” (First Anglo Mysore War) ஏற்பட்ட தோல்வி

ஒழுங்குமுறைச் சட்டம் 1773 சிறப்பியல்புகள்

  • முதன் முதலாக ஆங்கிலேய பாராளுமன்றத்தின் அதிகாரம் இந்தியாவின் அதிகாரத்திலும், கம்பெனியின் நிர்வாகத்திலும் நுழைந்தது.
  • “வங்கத்தின் கவர்னர்” (Governor of Bengal) என்ற பதவியை “வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் (அல்லது) வங்காளத்தின் தலைமை ஆளுநர்” (Governor General of Bengal) என மாற்றியது. இதன் மூலம் வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் ஆக பதவி வகித்தவர், “வாரன் ஹேஸ்டிங்ஸ்” (First Governor General of Bengal, Warren Hastings) ஆவார். இவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

ஒழுங்குமுறைச் சட்டம் 1773

  • வங்காளத்தின் கவர்னர் ஜெனரலக்கு நிர்வாக ஆட்சியில் உதவி புரிவதற்காக நான்கு உறுப்பினர்களை கொண்ட “நிர்வாகக் குழு” (Executive Council) உருவாக்கப்பட்டது. நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நான்கு ஆண்டுகளுக்கு குறைத்தது. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இடையே அதிக ஆதரவு பெரும் விவகாரங்கள் ஏற்பளிப்பு செய்யப்பட்டன.
  • நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர்கள் மறுமுறை தேர்வு செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது.
  • வாக்களிக்கும் நிர்வாகிகளின் தகுதி உயர்த்தப்பட்டது
  • நிர்வாகக் குழுவில் இடம்பெற்ற நான்கு பேர்
    • ஜான் க்லாவேரிங்
    • ஜார்ஜ் மான்சன்
    • ரிச்சர்ட் பார்வெல்
    • பிலிப் பிரான்சிஸ்
  • “வெளியுறவு கொள்கை” அடிப்படையில் தனித்தனி ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்ட பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணங்கள், “வங்காளத்தின் தலைமை ஆளுநரின்” கீழ் “துணை ஆளுநர்களாக” கொண்டு வரப்பட்டனர். வங்காள தலைமையின் அனுமதி இன்றி பம்பாய் மற்றும் மதராஸ் மாகாண ஆளுநர்கள் இந்தியாவில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என அறிவிக்கப்பட்டது.
  • 1974ம் ஆண்டு வங்காளத்தில் “உச்ச நீதிமன்றம்” (Supreme Court) தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு ஒரு தலைமை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர்.
  • வங்காள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக (First Chief Justice of Supreme Court of Bengal) பதவி ஏற்றவர் = சர் எலிஜா இம்பே (Sir Elijah Impey).
  • 3 கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள்
    • சேம்பர்ஸ்
    • லீமிஸ்டர்
    • ஹைட்
  • இந்த உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டங்கள் இயற்றவும், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்கவும் கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
  • கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரியும் எந்த ஊழியரும் தனியாக வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது எனவும், யாரிடமும் இருந்து அன்பளிப்போ அல்லது இலஞ்சமோ பெறக்கூடாது எனவும் இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது
  • இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய், நீதி, இராணுவ நடவடிக்கைகளை இங்கிலாந்தில் உள்ள கம்பெனியின் “இயக்குனர்கள் மன்றத்திற்கு” (Court of Directors) விரிவான அறிக்கையாக வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பு

  • எட்மன்ட்பர்க் = “ஒழுங்குபடுத்தும் சட்டம் கம்பெனி பதிவுச் சட்டத்திற்கு விரோதமானதும் தனிநபர் உரிமையை பறிப்பதுவும் ஆகும்”
  • பி.ஈ.ராபர்ட்ஸ் = “ஒழுங்குபடுத்தும் சட்டம் தெளிவற்ற ஓர் அரைகுறையான சட்டம்”

 

 

 

Leave a Reply