TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 16, 2021

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 16, 2021

 

       TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 16, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 16, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது. 

ஒலிம்பிக்கிற்கு இந்தியாவின் 228 பேர் தயார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       32-வது ஒலிம்பிக் போட்டியான டோக்கியோ ஒலிம்பிக்கில் 119 விளையாட்டு வீரர்கள் உட்பட 228 பேர் கொண்ட குழுவை அனுப்ப இந்தியா தயாராக உள்ளது. 119 விளையாட்டு வீரர்களில், 67 ஆண்கள் மற்றும் 52 பெண் பங்கேற்பாளர்கள். 22 மாநிலங்களைச் சேர்ந்த 119 விளையாட்டு வீரர்கள் 18 விளையாட்டு பிரிவுகளில் 85 பதக்க போட்டிகளுக்காக இந்தியா பதக்கத்தை கைப்பற்ற இந்தியா விளையாட உள்ளது.

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JULY 15, 2021 – HERE

அருண் நீர்மின் திட்டம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இந்தியா மற்றும் நேபாளம் இடையே, நேபாளத்தில் 679 மெகாவாட் உற்பத்தி செய்யும் புதிய நீர்மின் திட்டத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்ம் மேற்கொள்ளப்பட்டது. “அருண் நீர்மின் திட்டம்” (Arun Hydropower Project) என்ற இத்திட்டம், இந்தியாவின் “சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம்” நிறுவனம் சார்பில் அமைக்கப்படுகிறது. இத்திட்டம், “BOOT” (Build, Own, Operate and Transfer) மாதிரியான உருவாக்க, சொந்த, இயக்க மற்றும் பரிமாற்ற முறையில் உருவாக்கப்படுகிறது. நேபாளத்தின் அருண் நதி (Arun River), நேபாளத்தை கடந்து செல்லும் மிகப்பெரிய டிரான்ஸ்-இமயமலை நதி ஆகும்.

முத்தரப்பு பயிற்சி செயலமர்வு டி.டி.எக்ஸ் 2௦21:

       இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளின் கடற்படை அதிகாரிகள், வீரர்கள் கலந்துக்கொண்ட முத்தரப்பு பயிற்சி செயலமர்வு டி.டி.எக்ஸ் 2௦21 (Trilateral Table Top Exercise 2021 (TTX – 2021) என்ற நிகழ்ச்சி, மெய்நிக்ரா முறையில் நடைபெற்றது. மும்பையில் உள்ள கடல்சார் போர்முனை மையத்தினால் (Maritime Warfare Centre, Mumbai) இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. “கடல்சார் பாதுகாப்பு” (Maritime Security) தொடர்பாக இக்கூட்டம் நடைபெற்றது.

       “சாகர் ஆரக்ஸா நடவடிக்கை” (Operation Sagar Aaraksha) = சமிபத்தில் கொழும்பு நகருக்கு அருகே கச்சா எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், கடலில் ஏற்பட்ட மாசுவை, இந்திய கடலோரப்படை மற்றும் இலங்கை கடற்படை இணைந்து “சாகர் ஆரக்ஸா நடவடிக்கை” மூலம் சரி செய்தன. SAGAR = Security and Growth for All in the Region.

ஆஷா போனலு திருவிழா:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இரட்டை நகரங்களான தெலுங்கானாவின் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய நகரங்களில் கொண்டாடப்படும் பாரம்பரிய நாட்டுப்புற திருவிழாவான “ஆஷா போனலு” (Asha Bonalu’ is a traditional folk festival celebrated every year in the Telangana state) திருவிழா துவங்கியது. இது “மாநில விழாவாக” கடந்த அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி காலமானார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       புலிட்சர் விருது பெற்றுள்ள இந்தியாவை சேர்ந்த பிரபல புகைப்பட பத்திரிக்கையாளரான “டேனிஷ் சித்திக்” (Pulitzer Prize-winning Indian photojournalist Danish Siddiqui passes awa), ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போரில் மரணம் அடைந்தார். “ரீயுடர்ஸ்” என்ற உலக புகழ்பெற்ற செய்தி நிறுவனத்திற்காக இவர் பணிபுரிந்து வந்தார்.

தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி காலமானார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       சிறந்த நடிப்பிற்காக 3 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஹிந்தி நடிகை, சுரேகா சிக்ரி காலமானார். அவருக்கு வயது 75 ஆகும்.

கர்நாடக எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் – 2021:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       கர்நாடக மாநில அரசின் சார்பில், கர்நாடக எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் – 2021 (Karnataka Electric Bike Taxi scheme-2021) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நகரத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட், ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு பயணிக்கும் போது பயண நேரம் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சிறப்பு திட்டம்.

துருவ அறிவியல்:

       துருவ உயிரியல் (POLAR BIOLOGY) துறையில் ஒத்துழைப்புக்காக பூமி அறிவியல் அமைச்சகம் (MoES – Ministry of Earth Sciences) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT – Department of Biotechnology) இடையே ஒப்பந்தம் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்தானது. அண்டார்டிக், ஆர்க்டிக், தெற்கு பெருங்கடல் மற்றும் இமயமலை ஆகியவற்றை உள்ளடக்கிய போலார் பகுதி ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பாக இருப்பதால், அதன் தீவிர காலநிலை காரணமாக உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரும் ஆர்வத்தை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் பங்களித்திருந்தாலும், POLAR பகுதி இன்னும் ஆராயப்படாத சுற்றுச்சூழல் அமைப்பு என அறியப்படுகிறது.

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JULY 14, 2021 – HERE

தேசிய பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் தேதி, “தேசிய பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை தினம்” (National Plastic Surgery Day, July 15), கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சர் நிபுணர்கள் இணைந்து, ஜூலை 15 ஆம் தேதியை “உலக பிளாடிக் அறுவை சிகிச்சை தினமாக” (World Plastic Surgery Day, July 15) அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஜூலை 15, 2௦21 ஆம் ஆண்டு “முதல் உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள்” (First ever World Plastic Surgery Day), கொண்டாடப்பட்டது.

ஜம்மு காஸ்மீரில் “தோட்டக்கலை வாரம்”:

       ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க “தோட்டக்கலை வாரம்” (Horticulture Week) நிகழ்ச்சி துவங்கப்பட்டது. பிரதமரின் கனவான, 2௦22 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் படி, இத்திட்டம் துவங்கப்பட்டது. அதிக அடர்த்தி கொண்ட 25 லட்ச தாவரங்கள் பயிரிட (25 lakh high density plants) இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு வேளாண் வணிகர்களுக்காக “பர்வஸ்” (Mobile App PARVAZ) என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

புத்தகம் “இந்தியா எதிர் சீனா”:

       இந்தியா மற்றும் சீனா இடையேயான பிரச்சனைகள், வித்தியாசங்கள் போன்றவற்றை எடுத்துக்கூறும் “INDIA VERSUS CHINA : WHY THEY ARE NOT FRIENDS” என்ற புத்தகத்தை “கந்தி பாஜ்பாய்” என்பவர் எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் இருநாட்டு உறவுகளை பாதிக்கும் நான்கு முக்கிய கூறுகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

ஓய்வூதியர்களுக்கான “முகம் அடையாளம் காட்டும்” மொபைல் செயலி:

       மேகாலயா மாநில முதல்வர், அம்மாநில அரசின் ஓய்வூதியர்களுக்கு, வாழ்நாள் சான்றினை வழங்குவதற்காக, “முகத்தை அடையாளம் காட்டும் மொபைல் செயலியை” அறிமுகம் செய்துள்ளது. இதற்காக “PENSIONER’S LIFE CERTIFICATION VERIFICATION” என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மாண்டுவாடி ரயில் நிலையம், “பனாரஸ்” என்று பெயர் மாற்றப்பட்டது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள “மாண்டுவாடி ரயில் நிலையத்தை”, “பனாரஸ் ரயில் நிலையம்” (Manduadih railway station renamed as Banaras) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சமீபத்திய வசதிகளுடன் கூடிய மாண்டுவாடி ரயில் நிலையம் ஒரு விமான நிலையத்திற்கு எந்தவகையிலும் குறைவில்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பாட் டாக்சி சேவை:

       இந்தியாவின் முதல் பாட் டாக்சி சேவை ( India’s first pod taxi to operate between Noida Airport and Film City), உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள நொய்டா விமான நிலையம் முதல் பிலிம் சிட்டி வரை அமைக்கப்பட உள்ளது. 862 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது இத்திட்டமானது 14 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். இதனை இந்திய துறைமுக ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேசன் அமைக்க உள்ளது.

மின்சார வாகன கொள்கை 2௦21:

       மகாராஷ்டிரா மாநில அரசு “புதிய மின்சார வாகன கொள்கை – 2021” (New Electric Vehicle Policy – 2021) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் பேட்டரி மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும். மகாராஷ்டிராவை “இந்தியாவில் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதலிடம் வகிக்கும் நோக்கத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் ஆலை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       உலகின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் பேனல் பண்ணைகளில் (One of World’s Largest Solar Floating Panel Farms) ஒன்றை சிங்கப்பூர் உருவாக்கி உள்ளது. மேற்கு சிங்கப்பூரில் ஒரு நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள, 60 மெகாவாட்-உச்ச சூரிய ஒளிமின்னழுத்த பண்ணை ஆகும். 45 ஹெக்டேர் பரப்பளவில் 122௦௦௦ சூரிய தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஸ்மீரில் நிகழ்நேர காற்று தர கண்காணிப்பு மையம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       ஜம்மு காஸ்மீர் யூனியன் பிரதேசத்தில், முதன் முறையாக “நிகழ்நேர காற்று தர கண்காணிப்பு நிலையம்” (Jammu & Kashmir has got its first real-time air-quality monitoring station) அமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீநகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் உறுதிமொழி எடுப்போரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், துவக்க நாளில் உறுதிமொழி எடுப்போரின் எண்ணிக்கை 3 இல் இருந்து 6 ஆக (The number of oath-takers at the Tokyo 2020 Olympic Games Opening Ceremony has been doubled from three to six to ensure gender parity) உயர்த்தப்பட்டுள்ளது. “பாலின சமத்துவத்தை” எடுத்துரைக்கும் வகையில் இம்மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் உறுதிமொழி ஏற்ப்பில் புதிதாக “சேர்த்தல் மற்றும் சமத்துவம்” (inclusion and equality) என்ற இரு வார்த்தை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

கால்நடை பாதுகாப்பு மசோதாவை கொண்டுவந்த இந்தியாவின் முதல் வடகிழக்கு மாநிலம்:

               “கால்நடை பாதுகாப்பு மசோதா 2௦21” (Assam Cattle Preservation Bill, 2021) என்ற பெயரில், கால்நடைகளை பாதுகாக்கும் மசோதாவை கொண்டுவந்துள்ள இந்தியாவின் முதல் வடகிழக்கு மாநிலம் (he first north-eastern state to propose legislation to protect cattle) என்ற சிறப்பை அசாம் பெற்றுள்ளது. மேலும் மாநிலத்தில் இருந்து வெளியேயும், வெளியில் இருந்து உள்ளேயும், கால்நடைகளை எடுத்து செல்வதை தடை செய்துள்ளது.

அமெரிக்காவின் எம்.எச்.-6௦ ஆர் ஹெலிகாப்டர்கள்:

       இந்தியா மற்றும் அமெரிக்க இடையேயான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் எம்.எச்.-6௦ ஆர் வகை 2 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கபட்டன. MH-60R (MH 60 ROMEO HELICOPTERS) ஹெலிகாப்டர் அனைத்து வானிலை சமாளிக்கும் கடல் ஹெலிகாப்டர் ஆகும், இது அதிநவீன ஏவியோனிக்ஸ் மூலம் பல பயணங்களை ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து மொத்தம் 24 எம்.எச்.6௦ஆர் ஹெலிகாப்டர்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் தடுப்பூசி:

       பெங்களூரு இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, “வெப்பம் தானாகும் தன்மை கொண்ட கொரோனோ தடுப்பூசி”, SARS-CoV-2 உருமாறும் வகைகளுக்கும் ஏற்ற வகையில் செயல்புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “மின்வேக்ஸ்” (A heat-tolerant COVID-19 vaccine, MYNVAX)  எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி தொடர்ந்து 37 டிகிரி வெப்பநிலையில் ஒரு மாதத்திற்கு நிலைத்தன்மையில் இருப்பதாகவும், 1௦௦ டிகிரி வெப்பநிலையில் 9௦ நிமிடங்கள் நிலைத்தன்மையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பாம்பு தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       உலக பாம்பு தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ஆம் தேதி நடைபெறும் உலக பாம்பு தினம் (World Snake Day, July 16), உலகம் முழுவதும் உள்ள 3,500 க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பூஜ்ய கார்பன் உமிழ்வு:

       பிரிட்டன் அரசு, வருகின்ற 2௦3௦ ஆம் ஆண்டிற்குள், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் விற்பனையை தடை செய்ய உள்ளது. நாட்டின் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் 2040 aaஆம் ஆண்டிற்கு பிறகு பயன்படுத்த இயலது எனவும் அறிவித்துள்ளது.

2௦2௦ மில்லினியம் தொழில்நுட்ப விருது:

       இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை “பின்லாந்து தொழில்நுட்ப அகாடெமி” (Technology Academy Finland) சார்பில் வழங்கப்படும் இவ்விருது, “2௦2௦ ஆம் ஆண்டின் மில்லினியம் தொழில்நுட்ப விருது” (2020 Millennium Technology Award) இம்முறை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வேதியியல் ஆராய்ச்சியாளர்களான, “சங்கர் பாலசுப்ரமணியன்” மற்றும் “டேவிட் க்லேவர்மான்” என்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் “FIT FOR 55” திட்டம்:

       ஐரோப்பிய நாடுகளின் சார்பில், “FIT FOR 55”, என்ற திட்டம், காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது 199௦ ஆம் வருடத்தில் இருந்ததை காட்டிலும், வரும் 2௦3௦ ஆம் ஆண்டிற்குள், 55% மாசுக்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரோகினி கமிசன்:

       இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 340 படி அமைக்கப்பட்ட “OBC களின் துணை வகைப்படுத்தலின் சிக்கலை ஆராய்வதற்கான ஆணையத்தின்” காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்து மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக “ரோகினி” (ROHINI COMMISSION) அவர்கள் உள்ளார். மத்திய பட்டியலில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) துணை வகைப்பாடு குறித்த சிக்கலை ஆராய ஆணைக்குழு அமைக்கப்பட்டது (The Rohini Commission was constituted to examine the issue of Sub-categorization within Other Backward Classes (OBCs) in the Central List.

“துறவி பழம்”:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இந்தியாவில் முதல் முறையாக, ஹிமாச்சலப் பிரதேசத்தின் “குல்லு” என்னுமிடத்தில், சீன நாட்டின் “துறவி பழம்” பயிரிடப்பட்டுள்ளது (For the first time, the ‘monk fruit’ from China was introduced for field trials in Himachal Pradesh, Kullu). துறவி பழம் கலோரி அல்லாத இயற்கை இனிப்பானாக அதன் பண்புகளுக்கு அறியப்படுகிறது. மோக்ரோசைடுகள் எனப்படும் குக்குர்பிடேன்-வகை ட்ரைடர்பீன் கிளைகோசைடுகளின் ஒரு குழுவின் உள்ளடக்கம் தான் துறவி பழத்தின் இனிமையான சுவை. இது சுக்ரோஸ் அல்லது கரும்பு சர்க்கரையை விட 300 மடங்கு இனிமையானது. முதன் முதலில் புத்த துறவிகள் இப்பழத்தை பயிரிட்டதால் (Monk Fruit gets its name from the Buddhist monks who first used it) இப்பழத்திற்கு இப்பெயர்.

 

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 14.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 13.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 12.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 11.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 10.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 09.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 08.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 07.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 06.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 05.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 04.07.2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 03.07.2021

 

Leave a Reply