TNPSC INDIAN POLITY – HISTORICAL BACKGROUND

TNPSC INDIAN POLITY – HISTORICAL BACKGROUND

                      TNPSC INDIAN POLITY – HISTORICAL BACKGROUND

TNPSC INDIAN POLITY – HISTORICAL BACKGROUND – வரலாற்றுப் பின்னணி – ஆங்கிலேயர்கள் இந்திய வருகையின் பிறகு, அவர்களால் இந்திய அரசியலில் ஏற்படும் மாற்றங்களின் துவக்கம்.

 

TNPSC INDIAN POLITY - HISTORICAL BACKGROUND

  • முதலாம் எலிசபெத் அரசியின் ஆணையின் அடிப்படையில் கி.பி.16௦௦ டிசம்பர் 31-ம் தேதி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்டு, வணிக நோக்கில் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் வந்தனர்.
  • இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்
    • 16௦௦ – 1765 = இந்தியாவின் ஆங்கிலேயர்களின் துவக்கம்
    • 1765 – 1858 = ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி
    • 1858 – 1947 = பிரிட்டிஷ் அரசியின் நேரடி கட்டுப்பாட்டில் ஆட்சி
  • போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோரை வர்த்தகப் போட்டிகளில் வென்று ஆங்கிலேயர்கள் பம்பாய், மதராஸ், கல்கத்தா ஆகிய இடங்களில் தங்களது வர்த்தக கிடங்குகளை ஏற்படுத்தினர்.
  • 1647ல் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியால் 23 வர்த்தக கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தது

TNPSC INDIAN POLITY - HISTORICAL BACKGROUND

  • 1757ம் ஆண்டு நடைபெற்ற “பிளாசிப் போரில்” (Battle of Plassey), ஜூன் 23ம் நாள் வங்காள நவாப் சிராஜ்யுத் தௌலாவை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தோற்கடித்தது. பிளாசிப் போரில் வெற்றி பெற்ற “இராபர்ட் கிளைவ்” (Robert Clive), முதன் முதலில் ஆங்கிலேய கம்பனியின் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தார்.
  • பிளாசிப் போரின் வெற்றியால் நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளம், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிற்கு மாறியது
  • கம்பெனியின் வர்த்தக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய போர் = பக்சார் போர் (Battle of Buxar) ஆகும்.

TNPSC INDIAN POLITY - HISTORICAL BACKGROUND

  • 1764ம் ஆண்டு நடைபெற்ற பக்சார் போரில், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்று, வங்காளத்தில் “வரி வசூல் மற்றும் சிவில் நீதி” (Revenue Rights and Civil Justice) ஆகியவற்றை கையாளும் “திவானி” (Diwani) உரிமையை பெற்றது.
  • இதன் மூலம் கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தில் “ஆள்நில அதிகாரத்தை” (Territorial Power) பெற்று வங்கத்தை ஆட்சி செய்யும் உரிமையை உறுதி செய்தது
  • அப்போதைய முகலாயப் பேரரசராக இருந்த “இரண்டாம் ஷா ஆலம்” (Mughal Emperor Shah Alam II), “அலகாபாத் உடன்படிக்கையின்” (Treaty of Allahabad) மூலம் ஆங்கிலேயருக்கான “திவானி” உரிமையை உறுதி செய்தார்.

TNPSC INDIAN POLITY - HISTORICAL BACKGROUND

  • வங்காளம், பீகார் மற்றும் ஓடிஸா ஆகிய மூன்று பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றனர்.
  • 1765 முதல் 1773 வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேய கம்பெனியின் அதிகாரிகளும், அலுவலர்களும் தங்களது வருவாயை பெருக்கிக்கொள்ள தனி வர்த்தகத்தில் ஈடுபட்டனர்
  • இதனை தடுக்கும் வகையில் ஆங்கிலேய பிரிட்டிஷ் அரசு, கம்பெனியின் நிர்வாகத்தில் தலையிட்டது.

 

 

 

Leave a Reply