குடியுரிமை சட்ட விதிகள்
குடியுரிமை சட்ட விதிகள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதி 2-ல் “குடியுரிமை” என்ற தலைப்பின் கீழ் விதி 5 – 11 வரையிலான விதிகள் உள்ளன.
குடியுரிமை சட்ட விதி 5
அரசமைப்பின் தொடக்கநிலையில் குடியுரிமை (Citizenship at the commencement of the Constitution):
இந்திய அரசியலமைப்பு சட்டம் செயல்பாட்டிற்கு வந்த நாளில், இந்தியாவில் தொடர்ந்து வாழும் ஒருவர்,
- இந்திய நிலப்பகுதியில் பிறந்தவர், அல்லது
- அவருடைய பெற்றோர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருப்பின், அல்லது
- இந்த ரசியல் அமைப்பு சாசன சட்டம், நடைமுறைப்படுத்துவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு குறைவ்வில்லாமல் இந்தியாவில் வசித்து வரும் ஒரு நபர் இந்தியக் குடிமகன் ஆவார் (who has been ordinarily resident in the territory of India for not less than five years immediately preceding such commencement)
குடியுரிமை சட்ட விதி 6
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடி பெயர்ந்துள்ள குறித்த சிலரின் குடிமை உரிமைகள் (Rights of citizenship of certain persons who have migrated to India from Pakistan)
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
குடியுரிமை சட்ட 5-ல் எப்படிக் கூறப்பட்டிருப்பினும் பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பகுதிக்கு குடியேறியவர்கள் உட்பட தற்போது இந்தியாவில் உள்ளவர்கள், இந்தியக் குடிமகனாக கருதப்படுவர்.
- இந்திய அரசுச் சட்டம் 1935-ல் கூறப்படுள்ளப்படி, ஒருவர் அல்லது அவருடைய பெற்றோர்களில் ஒருவர் அல்லது அவருடைய தாத்தா, பாதியில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அல்லது (he or either of his parents or any of his grand-parents was born in India as defined in the Government of India Act, 1935)
- ஜூலை மாதம் 19-ம் தேதி, 1948 நாளிற்கு முன் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து அந்நாளிலிருந்து இங்கேயே வசித்து வருபவர், அல்லது (in the case where such person has so migrated before the nineteenth day of July, 1948, he has been ordinarily resident in the territory of India since the date of his migration)
- அப்படி 1948-ம் ஆண்டு ஜூலை 19-ம் நாளில் அல்லது அதற்குப் பிறகு இங்கே குடிபெயர்ந்து, இந்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலரிடம் குடிமகனாய் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பத்தை அளித்து பதிவு செய்து கொண்டிருக்கும் ஒரு நபர் இந்தியக் குடிமகனாய் கருதப்படுவர்
எனினும், அப்படி விண்ணப்பிப்பதற்கு 6 மாதம் முன்பிருந்தே இந்தியாவில் குடியிராத எந்த நபரையும் அவ்வாறு பதிவு செய்யக்கூடாது (Provided that no person shall be so registered unless he has been resident in the territory of India for at least six months immediately preceding the date of his application)
குடியுரிமை சட்ட விதி 7
பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்த சிலரின் குடிமை உரிமைகள் (Rights of citizenship of certain migrants to Pakistan)
விதி 5, 6-ல் எப்பை கூறப்பட்டிருப்பினும் 1947-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதிக்கு (the first day of March, 1947 ) பிறகு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நிலப்பகுதியில் குடியேறியுள்ள எவரும் இந்தியக் குடிமகனாய் கருதப்பட மாட்டார்.
அனால், அப்படி பாகிஸ்தான் நிலப்பகுதியில் குடியேறிய ஒருவர் பிறகு இந்தியப் பகுதிக்குத் திரும்பி வந்து இங்கேயே நிரந்தரமாய் குடியேறுவதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரியிடம் பெற்று இந்தியாவில் வசித்து வருபவர்க்கு இந்த விதி பொருந்தாது. அத்தகைய நபர் விதி 6(b) படி, 1948-ம் ஆண்டு ஜூலை 19-ம் நாளில் (nineteenth day of July, 1948) பிறகு இந்தியாவில் குடியேறியவராய் கருதப்பட வேண்டும்.
குடியுரிமை சட்ட விதி 8
இந்தியாவுக்கு வெளியே குடியிருந்துவரும் குறித்த சில இந்திய மரபினரின் குடிமை உரிமைகள் (Rights of citizenship of certain persons of Indian origin residing outside India)
பிரிவு 5-ல் எப்படிக் கூறப்பட்டிருந்தாலும், இந்திய அரசுச் சட்டம் 1935-ம் (Government of India Act, 1935 ) ஆண்டில் விவரிக்கப்பட்டுள்ளப்படி பிறந்துள்ள ஒவ்வொருவரும் அல்லது அவருடைய பெற்றோர்களில் ஒருவர் அல்லது தாத்தா பாட்டி இவர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருப்பின் அவர் இந்தியாவிற்கு வெளியே எந்த நாட்டில் வசித்து வந்தாலும் இந்தியராகவே கருதப்படுவார். அப்படிக் கருதப்படுவதற்கு தாம் வசிக்கும் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அல்லது பிரதிநிகள் அலுவலகத்தில் (diplomatic or consular representative of India ) இந்தியக் குடிமகனாய் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். உரிய விண்ணப்பத்தில், இந்திய அரசு குறிப்பிடும் விதிமுறைகளின் படி அரசியல் சாசனம் துவக்கப்பட்டதற்கு முன்போ, பின்போ அப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
குடியுரிமை சட்ட விதி 9
ஓர் அயல்நாட்டு அரசின் குடிமையினைத் தம் விருப்பாகப் பெற்றுள்ளவர்கள் குடிமக்கள் ஆவதில்லை (Persons voluntarily acquiring citizenship of a foreign state not to be citizens)
ஒருவர் தன்னார்வத்துடன் தானே முன் சென்று வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அத்தகைய நபர் விதி 5 அல்லது விதி 6 அல்லது விதி 8-ன் படி இந்தியக் குடிமகனாய் கருதப்பட மாட்டார் (No person shall be a citizen of India by virtue of article 5, or be deemed to be a citizen of India by virtue of article 6 or article 8, if he has voluntarily acquired the citizenship of any foreign State)
குடியுரிமை சட்ட விதி 1௦
குடிமை உரிமைகள் தொடர்ந்திருத்தல் (Continuance of the rights of citizenship)
இப்பகுதியின் முந்தைய விதிமுறைகளில் சொல்லப்பட்டப்படி இந்தியக் குடிமகனாய் இருக்கிற அல்லது கருதப்படுகிற ஒருவர் பாராளுமன்றம் உருவாக்கும் எந்த விதிமுறைக்கும் உட்பட்டு குடிமகனாய் தொடர்வார் (Every person who is or is deemed to be a citizen of India under any of the foregoing provisions of this Part shall, subject to the provisions of any law that may be made by Parliament, continue to be such citizen)
குடியுரிமை சட்ட விதி 11
நாடாளுமன்றம் சட்டத்தினால் குடிமை உரிமையை ஒழுங்குறுத்துதல் (Parliament to regulate the right of citizenship by law)
இப்பகுதியில் கூறப்பட்ட விதிமுறைகளில் எதுவும் குடியுரிமையை வழங்குவதற்கும், ரத்து செய்வதற்கும் மற்றும் குடியுரிமை விவகாரங்கள் தொடர்பாய் விதிமுறைகளை உருவாக்குவதற்கும் பாராளுமன்றத்குரிய அதிகாரத்தை குறைகிறது (Nothing in the foregoing provisions of this Part shall derogate from the power of Parliament to make any provision with respect to the acquisition and termination of citizenship and all other matters relating to citizenship)
- ஒன்றிய அரசு / UNION OF STATES
- குடியுரிமை சட்ட விதிகள்
- புதிய மாநிலங்களை உருவாக்குதல் / FORMATION OF NEW STATES
- மாநிலங்கள் மறுசீரமைப்பு / REORGANISATION OF STATES
- குடியுரிமை சட்ட விதிகள்
- இந்திய நிலபரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் / EXCHANGE OF TERRITORIES WITH FOREIGN NATIONS
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் / EXCHANGE OF TERRITORIES WITH BANGLADESH
- குடியுரிமை சட்ட விதிகள்
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் / INTEGRATION OF PRINCELY STATES
- தார் கமிசன் / DHAR COMMISSION
- ஜேவிபி குழு / JVP COMMITTEE
- குடியுரிமை சட்ட விதிகள்
- பசல் அலி கமிசன் / FAZAL ALI COMMISSION
- 1956 பிறகு புதிய மாநிலங்கள் / STATES AFTER 1956
- குடியுரிமை சட்ட விதிகள்
- ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் / JAMMU KASHMIR AND LADAKH
- மாநிலங்களின் பெயர் மாற்றம் / RENAMING OF STATES
- குடியுரிமை சட்ட விதிகள்