சீறாப்புராணம்
உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு
- சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர்.
- இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
- அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
- நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
- அவருக்குப்பின், அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
- உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவுகூர்ந்து போற்றுகிறார்.
- இவர் எண்பது பாக்களால் ஆகிய முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
- இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சீறாப்புராணம் நூல் குறிப்பு
- இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் சீறாப்புராணம்.
- சீறா – வாழ்க்கை, புராணம் – வரலாறு எனப் பொருள்படும்.
- இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது;
- ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆனது.
புலி வசனித்த படலம்
- சீறாப்புராணத்தில் “புலி வசனித்த படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = விலாதத்துக் காண்டம்.
சொற்பொருள்
- தெண்டிரை – தெளிந்த அலைகள்
- தடக்கரி – பெரிய யானை
- தாரை – வழி
- உழுவை – புலி
- வெள்ளெயிறு – வெண்ணிறப் பற்கள்
- வள்ளுகிர் – கூர்மையான நகம்
- நிணம் – கொழுப்பு
- கிரி – மலை
- தொனி – ஓசை
- கவை – பிளந்த
- எண்கு – கரடி
- எழில் – அழகு
- இடர் – துன்பம்
- மாத்திரம் – மலை
- புளகிதம் – மகிழ்ச்சி
- பூதரம் – மலை
- திறல் – வலிமை
- மந்தராசலம் – மந்தரமலை
- சிரம் – தலை
- உன்னி – நினைத்து
- கான் – காடு
- திரள் – கூட்டம்
- அடவி – காடு
- கனல் – நெருப்பு
- வனம் – காடு
- மடங்கள் – சிங்கம்
- கோடு – தந்தம்
- உரும் – இடி
- மேதி – எருமை
- கேழல் – பன்றி
- மரை – மான்
- புயம் – தோள்
- வேங்கை – புலி
- கேசரி – சிங்கம்
- கவின் – அழகு
- தெரிசனம் – காட்சி
- புந்தி – அறிவு
- சந்தம் – அழகு
- செகுதிடுவது – உயிர்வதை செய்வது
- தெளிந்தார் – தெளிவு பெற்றார்
இலக்கணக்குறிப்பு
- படர்ந்த தெண்டிரை – பெயரெச்சம்
- தொழுது அறைகுவன் – வினையெச்சம்
- நெடுநீர் – பண்புத்தொகை
- புடைத்து, நிமிர்ந்து – வினையெச்சம்
- வெள்ளெயிறு – பண்புத்தொகை
- முதிர்ந்தமேதி – பெயரெச்சம்
- செவிபுக – ஏழாம் வேற்றுமைத்தொகை
- செங்கதிர், பெருவரி – பண்புத்தொகை
- வால்குழைத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- எழுந்து, புதைத்து, வணங்கி – வினையெச்சம்
- சிரமுகம் – உம்மைத்தொகை
- புகுக – வியங்கோள் வினைமுற்று
- நன்று நன்று – அடுக்குத்தொடர்
- நதிப்பரப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
- தடக்கரி – உரிச்சொற்றொடர்
- பொருந்தி – வினையெச்சம்
- கால் மடித்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- பெருங்கரி – பண்புத்தொகை
- பொதிந்தமெய் – பெயரெச்சம்
- நின்ற வேங்கை – பெயரெச்சம்
- பூதரப்புயம் – உவமைத்தொகை
- பெருஞ்சிரம், தண்டளி – பண்புத்தொகை
- நனிமனம் – உரிச்சொற்றொடர்
- உயிர்செகுத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- மலரடி – உவமைத்தொகை
- கொலைப்புலி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பிரித்தறிதல்
- பணிந்திவர் = பணிந்து + இவர்
- சிரமுகம் = சிரம் + முகம்
- பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
- தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்
- திண்டிறல் = திண்மை + திறல்
- எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
- வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
- கரிக்கோடு = கரி + கோடு
- பெருங்கிரி = பெருமை + கிரி
- இருவிழி = இரண்டு + விழி
- வெள்ளெயிறு = வெண்மை + எயிரு
- உள்ளுறை = உள் + உறை
- நெடுநீர் = நெடுமை + நீர்
- அவ்வழி = அ + வழி
- தெண்டிரை = தெண்மை + திரை