சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீறாப்புராணம்

சீறாப்புராணம்

சொற்பொருள்:

தெண்டிரை – தெளிந்த அலைகள் கான் – காடு
தடக்கரி – பெரிய யானை திரள் – கூட்டம்
தாரை – வழி அடவி – காடு
உழுவை – புலி கனல் – நெருப்பு
வெள்ளெயிறு – வெண்ணிறப் பற்கள் வனம் – காடு
வள்ளுகிர் – கூர்மையான நகம் மடங்கள் – சிங்கம்
நிணம் – கொழுப்பு கோடு – தந்தம்
கிரி – மலை உரும் – இடி
தொனி – ஓசை மேதி – எருமை
கவை – பிளந்த கேழல் – பன்றி
எண்கு – கரடி மரை – மான்
எழில் – அழகு புயம் – தோள்
இடர் – துன்பம் வேங்கை – புலி
மாத்திரம் – மலை கேசரி – சிங்கம்
புளகிதம் – மகிழ்ச்சி கவின் – அழகு
பூதரம் – மலை தெரிசனம் – காட்சி
திறல் – வலிமை புந்தி – அறிவு
மந்தராசலம் – மந்தரமலை சந்தம் – அழகு
சிரம் – தலை செகுதிடுவது – உயிர்வதை செய்வது
உன்னி – நினைத்து தெளிந்தார் – தெளிவு பெற்றார்

இலக்கணக்குறிப்பு:

படர்ந்த தெண்டிரை – பெயரெச்சம் நதிப்பரப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
தொழுது அறைகுவன் – வினையெச்சம் தடக்கரி – உரிச்சொற்றொடர்
நெடுநீர் – பண்புத்தொகை பொருந்தி – வினையெச்சம்
புடைத்து, நிமிர்ந்து – வினையெச்சம் கால் மடித்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
வெள்ளெயிறு – பண்புத்தொகை பெருங்கரி – பண்புத்தொகை
முதிர்ந்தமேதி – பெயரெச்சம் பொதிந்தமெய் – பெயரெச்சம்
செவிபுக – ஏழாம் வேற்றுமைத்தொகை நின்ற வேங்கை – பெயரெச்சம்
செங்கதிர், பெருவரி – பண்புத்தொகை பூதரப்புயம் – உவமைத்தொகை
வால்குழைத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை பெருஞ்சிரம், தண்டளி – பண்புத்தொகை
எழுந்து, புதைத்து, வணங்கி – வினையெச்சம் நனிமனம் – உரிச்சொற்றொடர்
சிரமுகம் – உம்மைத்தொகை உயிர்செகுத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
புகுக – வியங்கோள் வினைமுற்று மலரடி – உவமைத்தொகை
நன்று நன்று – அடுக்குத்தொடர் கொலைப்புலி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

பிரித்தறிதல்:

 • பணிந்திவர் = பணிந்து + இவர்
 • சிரமுகம் = சிரம் + முகம்
 • பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
 • தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்
 • திண்டிறல் = திண்மை + திறல்
 • எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
 • வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
 • கரிக்கோடு = கரி + கோடு
 • பெருங்கிரி = பெருமை + கிரி
 • இருவிழி = இரண்டு + விழி
 • வெள்ளெயிறு = வெண்மை + எயிரு
 • உள்ளுறை = உள் + உறை
 • நெடுநீர் = நெடுமை + நீர்
 • அவ்வழி = அ + வழி
 • தெண்டிரை = தெண்மை + திரை

ஆசிரியர் குறிப்பு:

 • சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
 • இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
 • அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புராணம் இயற்றினார்.
 • நூல் முற்றும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
 • அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் இந்நூல் நிறைவு பெற்றது.
 • இவர் எண்பது பாக்களால் ஆன முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்துள்ளார்.
 • இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:

 • சீறா = வாழ்க்கை, புராணம் = வரலாறு.
 • இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
 • 5027 விருதப்பாக்களால் ஆனது.

Leave a Comment

Your email address will not be published.