அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டவர்.
இளமை காலம்:
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1833ஆம் ஆண்டு பிறந்தார்.
தேவதாசி குடியில் பிறந்தார்.
தேவதாசி குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன. ஆனால், இவரது பெற்றோர் அவருக்கு அவற்றைக் கற்றுத்தர மறுத்தால், இவரின் குடும்பத்தை அவ்வினத்தார் ஒதுக்கி வைத்தனர்.
வறுமையின் காரணமாக அம்மையாரின் தந்தை கிருஷ்ணசுவாமி மகளையும், மனைவியையும் விட்டு சென்றார்.
அம்மையாரின் தாயார் இவருக்கு ஐந்து வயதாகும் பொது பத்து ரூபாய்க்கு தேவதாசி ஒருவரிடம் விற்றுவிட்டார்.
சுயம்பு:
தனக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
சுயம்பு, அம்மையாரின் அணைத்து போராட்டங்களுக்கும் துணைப் புரிந்தார்.
முதல் போராட்டம்:
1917இல் தனது முதல் போராட்டத்தை மயிலாடுதுறையில் தொடங்கினார்.
அதேவதாசி முறையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
காந்தி மீது பற்று:
அம்மையார் காந்தியடிகள் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார்.
ஆங்கிலேயர்களின் தடை உத்தரவு காரணமாக தான் பேசாமல் தனது கருத்துக்களை “கரும்பலகையில்” எழுதி வெளிப்படித்தினார்.
மூவர்ணக் கொடி ஆடை:
காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு, இந்திய திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார்.
அம்மையார் மூவர்ணக் கோடியை ஆடையாக உடுத்தினார்.
குடிசையில் வாழ்தல்:
காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழ வேண்டும் என காந்தியடிகள் கூறியதை அடுத்து, அம்மையார் தனது ஓட்டு வீட்டை விட்டு குடிசையில் குடியேறினார்.
அக்குடிலின் வெளியே, கரும்பலகையில் “காதர் அணிந்தவர்கள், உள்ளே வரவும்” என எழுதி இருந்தார்.
மொழிப்போர் பேரணி:
1938ஆம் ஆண்டு நடந்த மொழிப்போர் பேரணியில் உறையூர்(திருச்சி) முதல் சென்னை வரை 42 நாள், 577 மைல் நடைபயணம் மேற்கொண்டார்.
இன்நடைப்பயணத்தின் பொது 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.
அப்பேரணியில் நடந்து வந்த ஒரே பெண் அம்மையார் மட்டுமே.
விடிவெள்ளி:
அம்மையார், பெண் உரிமைக்குப் பாடுபட்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் ஈடுபட்டுத் தனது 80 வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
திருமண உதவித் திட்டம்:
1989ஆம் ஆண்டு மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரால் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை தமிழக அரசு வழங்கி வருகிறது.