திருமந்திரம்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே -திருமூலர் |
சொற்பொருள்:
- திடம் – உறுதி
- மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு
- உபாயம் – வழிவகை
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று.
- காலம் – ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.
நூல் குறிப்பு:
- சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை திருமந்திரம்.
- இதற்குத் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேருபெயரும் உண்டு.
- இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
- “ஒன்றே குளம் ஒருவனே தேவன்” என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.