சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடகக்கலை

நாடகக்கலை

நாடகம் – பொருள் விளக்கம்:

  • நாடு + அகம் = நாடகம்
  • நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்.
  • நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது.
  • நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.
  • கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.
  • இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு.

நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:

  • தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்.
  • நாடகம் என்பது “போலச் செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக கொண்டது.
  • பிறர் செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
  • மரப்பாவைக்கூத்து->பொம்மலாட்டம்->தோல்பாவைக்கூத்து->நிழற்பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்தது.

இலக்கியங்களில் நாடகம்:

  • தொல்காப்பிய மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
  • “கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே” என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி அறியலாம்.
  • சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று மாதவியை குறிப்பிடுகிறார்.

கூத்து:

  • தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளார்.
  • நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவாகக் “கூத்து” என்ற சொல்லே வழக்கில் இருந்தது.

அடியார்க்கு நல்லார்:

  • சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்.
  • இவர் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் கூறியுள்ளார்.

நாடக நூல்கள்:

  • முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.

நாடகவியல்:

  • பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி கூறியுள்ளார்.

நாடக ஆராய்ச்சி நூல்கள்:

  • சுவாமி விபுலானந்தர் = மதங்க சூளாமணி
  • மறைமலையடிகள் = சாகுந்தலம்
  • இவ்விரண்டு நூல்களும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.

தொழில்முறை நாடக அரங்குகள்:

  • பம்மல் சம்பந்தனார், “நாடகத்தமிழ்” என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.

காலம்தோறும் நாடகக்கலை:

  • ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் “மத்தவிலாசம்” என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
  • பதினொன்றாம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் “இராசராசேச்சுவர நாடகம்” நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
  • பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.

கட்டியங்காரன் உரையாடல்:

  • பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.

சமுதாய சீர்திருத்த நாடகங்கள்:

  • காசி விஸ்வநாதரின் “டம்பாச்சாரி விலாசம்”.
  • பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணியம்”.

தேசிய நாடகங்கள்:

  • “கதரின் வெற்றி” நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
  • இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.

சிறப்பிடம் பெற்றவர்கள்:

  • பரிதிமாற் கலைஞர் – தமிழ் நாடக பேராசிரியர்
  • சங்கரதாசு சுவாமிகள் – தமிழ் நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடக பேராசிரியர்
  • பம்மல் சம்பந்தனார் – தமிழ் நாடக தந்தை
  • கந்தசாமி – தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை

கவிமணியின் கூற்று:

  • “நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்ற கவிமணியின் கூற்றிற்குஏற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக் கவரும் வகையிலும் நாடகங்கள் கதை அழகோடு கவிதை அழகையும் கொண்டு வாழ்வைத் தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்.

 

Leave a Reply