சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மணிமேகலை

மணிமேகலை

சொற்பொருள்:

  • ஆயம் – தோழியர் கூட்டம்
  • ஆசனம் – இருக்கை
  • நாத்தொலைவில்லை – சொல் சோர்வின்மை
  • யாக்கை – உடல்
  • பிணி நீங்கா – நீங்கா நோய்
  • பேதைமை – அறியாமை
  • செய்கை – இருவினை
  • உணர்வு – அறிவியல் சிந்தனை
  • அரு – உருவமற்றது
  • உறு – வடிவம்
  • வாயில் – ஐம்பொறிகள்
  • வேட்கை – விருப்பம்
  • பவம் – பயன் நோக்கிய செயல்
  • கொடு – கொம்பு
  • அலகில – அளவற்ற
  • தொக்க விலங்கு – விலங்குத்தொகுதி
  • குரலை – புறம் பேசுதல்
  • வெஃகல் – விரும்புதல்
  • வெகுளல் – சினத்தல்
  • சீலம் – ஒழுக்கம்
  • தானம் – கொடை
  • கேண்மின் – கேளுங்கள்
  • உய்ம்மின் – போற்றுங்கள்
  • உறைதல் – தங்குதல்
  • கூற்று – எமன்
  • மாசில் – குற்றமற்ற
  • புக்கு – புகுந்து
  • இடர் – இன்னல்

இலக்கணக்குறிப்பு:

  • தேவியும் ஆயமும் – எண்ணும்மை
  • அருந்தவர், நல்வினை – பண்புத்தொகை
  • வாழ்க – வியங்கோள் வினைமுற்று
  • செய்தவம், வீழ்கதிர் – வினைத்தொகை
  • பெரும்பேறு – பண்புத்தொகை
  • பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம் – பண்புத்தொகை
  • ஆய்தொடி நல்லாய் – இரண்டாம் வெறுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • கம்மத்தீ – உருவகம்
  • பொல்லக்காட்சி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்தறிதல்:

  • எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
  • அறிவுண்டாக = அறிவு + உண்டாக
  • இயல்பீராறு = இயல்பு + ஈறு + ஆறு
  • நன்மொழி = நன்மை + மொழி
  • எனக்கிடர் = எனக்கு + இடர்
  • நல்லறம் = நன்மை + அறம்

ஆசிரியர் குறிப்பு:

  • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரின் இயற் பெயர்.
  • இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
  • தானிய வாணிகம் செய்தவர்.
  • தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.
  • இவரது காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

  • இந்நூல் ஐம்பெரும்காபியங்க்களுள் ஒன்று.
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே கதை தொடர்பு உடையவை.
  • இவை இரண்டும் “இரட்டை காப்பியங்கள்” என அழைக்கப்படும்.
  • இந்நூலுக்கு “மணிமேகலை துறவு” என்ற பெயரும் உண்டு.
  • இந்நூல் பௌத்த சமயச் சார்பு உடையது.
  • முப்பது காதைகள் கொண்டது. இருபத்தி நான்காவது காதை என்பது ஆபுத்திரன் நாடு அடைந்த காதை ஆகும்.

 

Leave a Reply