சோசியலிசம்

சோசியலிசம்

சோசியலிசம்

சோசியலிசம் என்றால் என்ன

       1976-ம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தத்தின் (42nd Amendment Act, 1976) மூலம் “சோசியலிசம் என்னும் சமதர்ம சமூகம்” என்ற வார்த்தை இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்னர் வரை சமதர்மம் (Socialist) என்பது, அரசியலமைப்பின் (Constitution) வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள் (Directive Principles of State Policy) பகுதியில் உள்ள சில விதிகளில் இருந்தது. அதாவது இதுவரை அரசியலமைப்பு சட்டத்தில் மறைமுகமாக இருந்தவை, தற்போது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோசியலிச சமூகத்தின் அமைப்பு

       1955-ம் ஆண்டு தமிழகத்தின் ஆவடியில் (Avadi Session, Leader = U.N.Dhebar) நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “சோசியலிச சமூகத்தின் அமைப்பு” (Socialistic Pattern of Society) என்ற தீர்மானத்தின் மூலம், காங்கிரஸ் கட்சி சோசியலிசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அதில்,

       “காங்கிரஸ் கட்சியின் நோக்கமானது, இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தின் முகப்புரை மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகளில், சோசியலிச சமூகம் அமைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திட்டம் நடைபெற வேண்டும் என்றும், உற்பத்திக்கான முக்கிய வழிமுறைகள் சமூக உடைமை அல்லது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டுமென்றும், உற்பத்தி படிப்படியாக விரைவுபடுத்தப்பட்டு தேசிய செல்வத்தினை சமமான விநியோகம் செய்ய வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது  (In order to realise the object of Congress and to further the objectives stated in the Preamble and Directive Principles of State Policy of the Constitution of India, planning should take place with a view to the establishment of a socialistic pattern of society, where the principal means of production are under social ownership or control, production is progressively speeded up and there is equitable distribution of the national wealth’)

       இந்தியாவின் “சமதர்ம சமூகம்” என்பது “ஜனநாயக சமதர்மமாக” (Democratic Socialism) இருக்குமே தவிர, “கம்யுனிச சமதர்மமாக” (Communistic Socialism) இல்லை. அதாவது கம்யுனிச சமதர்மம் என்பது, நாட்டின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டு, தனியாரின் சொத்துக்கள் அபகரித்தல் (Abolition of Private Property) ஆகும்.

ஜனநாயக சமதர்மம்

       ஜனநாயக சமதர்மம் என்பது, “கூட்டுப் பொருளாதாரத்தில்” (Mixed Economy) நம்பிக்கை கொண்டதாகும். அதாவது தனியார் அமைப்புகள் மற்றும் அரசு, மக்கள் அமைப்புகள் இணைந்து பொருளாதாரத்தை உயர்த்துவது ஆகும். இதனை பற்றி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி (Indira Gandhi) கூறியதாவது,

       “நமக்கென சொந்தமாக ஒரு சோசியலிச குறியீடு இருக்கிறது என எப்போதும் நாம் சொல்லி வந்தோம். துறைகளை தேவைக்கு ஏற்ப நாம் தேசியமாக்கி வருகிறோம். வெறுமனே அணைத்து துறைகளையும் நாம் தேசியமயமாக்கம் செய்யவில்லை” (We have always said that we have our own brand of socialism. We will nationalise the sectors where we feel the necessity. Just nationalisation is not our type of socialism’) என்றர்.

       “ஜனநாயக சமதர்மம்” பற்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) கூரியதவாவது, “ஜனநாயக சமதர்மம் எனபது, வறுமை, அறியாமை, நோய், சமமான வாய்ப்பு இல்லாமை ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகும்” (Democratic socialism aims to end poverty, ignorance, disease and inequality of opportunity) என்றது.

       ஆனால் 1991-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவது, “புதிய பொருளாதார கொள்கையான தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்” (New Economic Policy (1991) of liberalisation, privatisation and globalisation) ஆகியவற்றால், சமதர்ம சமுகத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்பதே உண்மையாகும்.

                இந்திய சோசியலிசம் என்பது காந்திய கொள்கைகள் மற்றும் மார்க்சிய கொள்கைகள் கலந்த கலவையாகும். அனால் இது தற்போது காந்திய சோசியலிசம் நோக்கி சாய்கிறது.

முக்கிய குறிப்புகள்

  • சோசியலிசம் என்பதை பற்றி நமது அரசியல் அமைப்பு சட்டம் வரையறை செய்யவில்லை.
  • வருமானத்திலும், அந்தஸ்திலும், வாழ்க்கைத் தரத்திலும் ஏற்றத் தாழ்வுகளைக் களைவதே சோசியலிசமாகும். எனவே முகப்புரையில் “சோசியலிச” என்ற சொல் சேர்க்கப்பட்டதற்கு பின்னர், நீதிமன்றங்களில் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு விளக்குமுரைக்கும் சந்தர்பங்கள் தோன்றும் பொது நாட்டுடமையாக்கல், தனியார் சொத்துக்களையும் தொழிற்சாலைகளையும் அரசே ஏற்பதே என்ற வாதங்கள் வருகிறது.

Leave a Reply