வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் 

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்

                அம்பேத்கர் அவர்கள், “இந்திய அரசியல் அமைப்பின் இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்ப்பாடுகள் ஒரு “புதிய அம்சம்” (the Directive Principles of State Policy is a ‘novel feature’ of the Indian Constitution) என்றார். இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள், இந்திய அரசியல் சட்டத்தின் நான்காவது பகுதியில் உள்ளது. இக்கோட்பாடுகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • சோசியலிச கோட்பாடுகள் (Socialistic Principles)
  • காந்திய கோட்பாடுகள் (Gandhian Principles)
  • சுதந்திரமான அறிவுசார்ந்த கோட்பாடுகள் (Liberal Intellectual)

              அரசின் வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள், சமூக பொருளாதார, சமத்துவ சமுகத்தை (Social and Economic Democrcacy) ஏற்படுத்தும் வகையில் விதிகளை கொண்டுள்ளன. இதன் மூலம் “மக்கள் நல நாட்டினை” (Welfare State) உருவாக்க வேண்டும் என்பதே இதன் இலக்காகும்.

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்

  • மக்கள் நல நாட்டை உருவாக்கல்
  • வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
  • பொருளாதார உடைமைகளைப் பகிர்ந்து அளித்தல்
  • ஆண் – பெண் வேறுபாடு இன்றி சம உழைப்புக்குச் சம ஊதியம் வழங்கப்படல்
  • வேலை வாய்ப்புகளை உருவாக்கல்
  • 14 வயது வரை குழந்தைகளுக்கு கட்டாய கல்வி கொடுத்தல்
  • முதியோர் மற்றும் நோயாளிகளின் நலன் காத்தல்
  • பணியாளர்களின் பனி நிலையை மேம்படுத்தல்
  • கலாச்சார வசதிகளை மேம்படுத்தல்
  • நீதித்துறையை ஆட்சித்துறையிலிருந்து பிரித்தல்
  • கிராமப் பஞ்சாயத்துகளை ஏற்படுத்துதல்
  • குடிசை தொழில்களுக்கு ஊக்கமளித்தல்
  • தாழ்த்தப்பட்டோரை உயர்த்துதல் போன்றவை பிரதான வழிகாட்டு விதிகளாகும்.

       இந்திய அரசியல் அமைப்பு சட்டதில் உள்ள அடிப்படை உரிமைகளை (Fundamental Rights) போல் அல்லாமல், இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளை “நீதிப் படுத்த முடியாது” (non – justiciable).

              அதாவது எவரும் வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தை (Supreme Court) நாட முடியாது. இந்தக் கோட்பாடுகள் நாட்டின் நிர்வாகத்தில் அடிப்படை கொள்கையாகவும், அதனை செயல்படுத்த தகுந்த சட்டங்களை உருவாக்குவது அரசின் கடமையாகும்.

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் – குறிப்பு

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்

  • 1980-ல் நடைபெற்ற “மினெர்வா மில் (எதிர்) இந்திய அரசு” (Minerva Mills Vs Union of India) எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் கூறியதாவது, “அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள் இடையே சமநிலை ஏற்படுத்த இந்திய அரசியல் சட்டம் நிறுவப் பட்டுள்ளது” (the Indian Constitution is founded on the bedrock of the balance between the Fundamental Rights and the Directive Principles)
  • எம்.சி. சாக்ளா (M.C.Chagla) = “வழிகாட்டும் நெறிமுறை விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இந்தியா சுவர்க்க பூமியாகி விடும்” எனக் கூறினார்

Leave a Reply