இறையாண்மை

இறையாண்மை

இறையாண்மை

இறையாண்மை என்றால் என்ன

                அரசியல் அறிவியல் மற்றும் சட்டவியல்களில், இறையாண்மை (Sovereign) என்பது ஒரு நாட்டின் அத்திவாவசியமான பண்பு என்றும், நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எந்த அதிகார அமைப்புக்கும் கீழ்படியாத முழு நிறைவான உயரதிகாரம் என்றும் பொருள்படும். “வேறு உயர் அதிகாரம் எதையும் ஏற்காத, முழு நிறைவான உச்சநிலை அதிகாரம் செயல்படுகிற அமைப்பே” இறையாண்மையுடைய நாடு என்று கூலே என்பவர் வரையறை செய்கிறார்.

       இறையாண்மை அதிகாரங்கள் எங்கு இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தின் என்த வகை உறையும் குறிபிட்டுச் சொல்லவில்லை.

        இறையாண்மை எங்கிருக்கிறது என்றும், அரசியலமைப்பின் ஆதாரம் என்ன என்பதையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள உதவும் ஒரே வழி = முகவுரை (Preamble) தான்.

       “இந்திய மக்களாகிய நாம் ஓர் அரசியலமைப்பை இயற்றி ஏற்றுக்கொண்டு நமக்கு நாமே அளித்துக் கொள்கிறோம்” என்று கூறியதன் மூலம், நாம் அனைவரும் ஒரே மக்கள், இந்திய மக்கள், பல்வேறு மாநிலங்களின் மக்கள் அல்ல என்றும், இறையாண்மை இந்திய மக்கள் அனைவரையும் சார்ந்தது, தனித்தனித் மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதன்று என்றும்; இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்த, தனித்துப் பிரிக்கவியலாத இறையாண்மை கொண்ட ஓர் அலகினால் அது ஏற்கப்பட்டுள்ளது என்றும் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் உறுதிபடக் கூறினர்.

       முகவுரையில் உள்ள “இறையாண்மை” என்ற சொல்லின் பொருளானது, இந்தியா ஓர் சுதந்திர நாடு என்றும், அது எந்த நாட்டினையும் சார்ந்தது அல்ல என்றும், டொமினியன் அந்தஸ்து உள்ள நாடு அல்ல என்றும் கூறுகிறது.

       அதாவது, 1947 இந்திய சுதந்திரச் சட்டத்தின் படி (Indian Independence Act, 1947), இந்தியாவானது சுதந்திரம் அடையும் வரை, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழுள்ள ஒரு நாடாகும். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரை, இந்தியா சுதந்திரம் பெற்ற போதிலும், இந்தியாவானது பிரிட்டிஷ் அமைப்பின் கீழுள்ள ஒரு காமன்வெல்த் (Commonwealth) தேசமாகவே கருதப்பட்டது.

       இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் முதலே இந்தியா தனிக் குடியரசாக கருதப்பட்டது. மேலும் இந்தியா தன்னை அன்று “ஒரு இறையாண்மையுள்ள குடியரசு தேசம்” (Sovereign Republic State) என்றும் அறிவித்தது. மேலும் வெளியுறவு மற்றும் உள்நாட்டு கொள்கைகளை உருவாக்கிகொள்ளும் அதிகாரம் தானாகவே இந்தியாவிற்கு கிடைத்தது.

காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்

       நேரு கூறியதாவது = 1949-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெற்ற “காமன்வெல்த் நாடுகளின் பிரதமர்கள் கூட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, இந்தியநாடு முழு இறைமை பெற்ற சுதந்திரக் குடியரசாக மாறிவிட்ட போதிலும், காமன்வெல்த் நாடுகளின் கூட்டுறவில் அது முழு உறுப்பினராக பங்குபெற்று இருந்து வருமென்றும், காமன்வெல்த் நாடுகள் சுதந்திரம் பெற்று நட்புடன் இயங்குவதற்கு இலட்சியமாக பிரிட்டிஷ் அரசரை ஏற்குமென்றும் அறிவிக்கப்பட்டது. அனால் இந்த அறிவிக்கை சட்டவரம்பிற்கு அப்பாற்பட்டது ஆகும். பிரிட்டிஷ் அரசரை இலட்சியக்குறியாக ஏற்றிருப்பதால், இந்தியக் குடிமக்கள் அந்நாட்டு மன்னருக்கு தலைவணங்கி அடிபணியவேண்டும் என்பதில்லை.

         நாம் எவ்வாறு இதில் இணைந்தோமோ அது போலவே கூட்டுறவை துண்டித்துக்கொள்ளவும் முடியும் (We took pledge long ago to achieve Purna Swaraj. We have achieved it. Does a nation lose its independence by an alliance with another country? Alliance normally means Commitments. The free association of the sovereign Commonwealth of Nations does not involve such commitments. Its very strength lies in its flexibility and its complete freedom. It is well-known that it is open to any member-nation to go out of the commonwealth if it so chooses’. He further stated, ‘It is an agreement by free will, to be terminated by free will)

ஐக்கிய நாடுகள் அவை உறுப்பினர்

       1945-ம் ஆண்டு இந்தியா ஐக்கிய நாடுகளின் அவையில் (UNO – United Nations Organisation) உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டது. சுதந்திரத்திற்கு முன்பே இந்தியா இவ்வவையில் தன்னை இணைத்துக்கொண்டது. இந்தியா சுதந்திரம் பெற்று, தன்னை இறையாண்மை உள்ள குடியரசாக அறிவித்த பொழுதும், ஐக்கிய நாடுகள் அவையில் எவ்வித குறைபாடுகளும் இந்தியாவிற்கு ஏற்படவில்லை.

அதிகாரங்கள்

       இந்தியாவில் ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருந்த போதிலும் இறையாண்மை பிரிக்கப்படவில்லை. அவசர நிலைகளின் பொழுது நாட்டு நலன் கருதி மாநிலங்களின் அதிகாரங்களை ஒன்றிய மத்திய அரசு எடுத்துக் கொள்ளலாம்.

இந்திய நிலப்பகுதி

       இந்திய ஒன்றியம் அந்நிய நிலப்பகுதியை (Foreign Territory) கையகப்படுத்தலாம் என்று நமது அரசியல் சட்டப் பிரிவு 1(3)(C) தெளிவுபடுத்துகிறது. சில அரசியலமைப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்நிலப்பகுதியைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாம் (மக்கன்பாய் ஈஸ்வர்பாய் படேல் வழக்கு எதிர் இந்திய அரசு, 197௦). அரசியலமைப்பின் 2, 3, 4 ஆவது பிரிவுகளின் படி, நாடாளுமன்ற சாதாரண சட்டம் ஒன்றை இயற்றுவதன் மூலம், புதிய மாநிலங்களைச் சேர்த்துக் கொள்ளவும் முடியும்.

முக்கிய குறிப்புகள்

  • இந்தியா, பிரிட்டிஷ் காமன்வெல்த் டொமினியன் அந்தஸ்தில் இருந்து மாறி இறையாண்மையுள்ள குடியரசு நாடாக மாறிய தினம் = 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம். ஆனால் பாகிஸ்தான் 1956 வரை பிரிட்டிஷ் டொமினியன் நாடாகவே இருந்தது.
  • விதி 249 (Article 249) = மத்திய அரசு சாதாரண சமயங்களில் கூட அரசியல் சட்டத்தின் 249-வது பிரிவின் படி மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்து சட்டம் இயற்றலாம்.

Leave a Reply