தண்டியலங்காரம்
தண்டியலங்காரம்
- தண்டியலங்காரம் என்ற நூலை எழுதியவர் = தண்டின் ஆவர்
- இவரின் காலம் = 12 ஆம் நூற்றாண்டு ஆகும்
- தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணம் = அணி இலக்கணம் மட்டும்
- இன்று பயிலப்படும் அணி இலக்கான நூல்களுள் செல்வாக்கு மிகுந்தது தண்டியலங்கார நூல் மட்டுமே
- இது ஒரு வழி நூல் ஆகும்
- வடமொழியில் தண்டி என்பவர் எழுதிய “காவிய தரிசனம்” என்னும் நூலினை தழுவி இந்நூல் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது
- இந்நூலுக்கு “அணியதிகாரம்” என்ற சிறப்பு பெயரும் உண்டு.
- இந்நூலுக்கு முதலில் “அணியதிகாரம்” என்ற பெயர் இருந்தது என்பது பழைய உரையால் அறிய முடிகிறது
நூலின் அமைப்பு
- இந்நூலில் 3 பெரும் பிரிவுகள் உள்ளன. அவை,
- பொதுவியல் = 26 நூற்பா ( + சிறப்புப் பாயிரம்)
- பொருளணியியல் (குணவியல்) = 65 நூற்பா ( + சிறப்புப் பாயிரம்)
- சொல்லணியியல் (எச்சவியல்) = 35 நூற்பா
- இந்நூலில் மொத்தம் 126 நூற்பா உள்ளன
- பொருளணியியல் “குணவியல்” என்ற பெயரிலும் கூறுவார்
- சொல்லணியியல் “எச்சவியல்” என்றும் கூறுவார்
பொதுவியல்
- செய்யுளின் வகைகள் நான்கு
- முத்தகச் செய்யுள் = தனித்து நின்று பாடுவது
- குளகச் செய்யுள் = பல பாட்டு, ஒரு வினை கொள்வது
- தொகைநிலைச் செய்யுள் = பாடுகள் பல தொகுக்கப்படுவது
- தொடர்நிலைச் செய்யுள் = பொருளினும் சொல்லினும் தொடர்வது
- பொருளால் தொடர்வதை “காப்பியம்” என்கிறோம்
- சொல்லால் தொடர்வதை “அந்தாதி” என்கிறோம்
- காப்பியம் 2 வகை = பெரும் காப்பியம், சிறு காப்பியம்
- நெறி 2 வகைப்படும் = வைதருப்ப நெறி, கௌடநெறி
பொருளணியியல் (குணவியல்)
- 35 வகையான அணிகளின் இலக்கணமும், அதன் வகைகளும் கூறப்பட்டுள்ளன
- முதல் அணி தன்மை அணி
- இறுதி அணி, பாவிக அணி ஆகும்
சொல்லணியியல் (எச்சவியல்)
- மடக்கு, சித்திரம் ஆகியவற்றின் இலக்கணம் கூறுகிறது
- இதழ் ஒட்டாமல் பாடுவது = நிரோட்டகம்
நூலின் சிறப்பு
- தமிழில் காப்பிய இலக்கணத்தை முதல் முதலாக கூறும் நூல் = தண்டியலங்காரம் ஆகும்
- தண்டியலங்காரத்தில் 35 வகையான அணிகளும், அவற்றின் பல்வேறு வகையான உட்பிரிவுகளும் கூறப்பட்டுள்ளன
- 24 வகையான உவமை அணியின் வகைகள் கூறப்பட்டுள்ளன
தண்டியலங்காரம் – 35 வகையான அணிகள்
-
- தன்மை
- உவமை
- உருவகம்
- தீவகம்
- பின்வருநிலை
- முன்னவிலக்கு
- வெற்றுப் பொருள் வைப்பு
- வேற்றுமை
- விபாவனை
- ஒட்டு
- அதிசயம்
- தற்குறிப்பேற்றம்
- ஏது
- நுட்பம்
- இலேசம்
- நிரனிறை
- ஆர்வமொழி
- சுவை
- தன்மேம் பாட்டுரை
- பரியாயம்
- சமாகிதம்
- உதாத்தம்
- அவநுதி
- சிலேடை
- விசேடம்
- ஒப்புடைக் கூட்டம்
- விரோதம்
- மாறுபாடு புகழ்நிலை
- பாகமாப் புகழ்ச்சி
- நிதாரிசனம்
- புணர்நிலை
- பரிவருத்தனை
- வாழ்த்து
- சங்கீர்ணம்
- பாவிகம்
தண்டியலங்காரம் – 24 வகையான உவமை அணிகள்
-
- விரி
- தொகை
- இதரவிதரம்
- சமுச்சயம்
- உண்மை
- மறுபொருள்
- புகழ்தல்
- நிந்தை
- நியமம்
- அநியமம்
- ஐயம்
- தோற்றம்
- இன்சொல்
- விபரீதம்
- இயல்புதல்
- பலபொருள்
- விகாரம்
- மோகம்
- அபூதம்
- பலவயிற்போலி
- ஒருவயிற்போலி
- கூடாவுடை
- பொது நீங்கு
- மாலை
உருவக அணியின் வகைகள்
-
- தொகை
- விரி
- தொகைவிரி
- இயைபு
- இயைபிலி
- வியனிலை
- சிறப்பு
- விரூபகம்
- சமாதானம்
- உருவகம்
- ஏகம்
- அநேகாங்கம்
- முற்று
- அவயவம்
- அவயவி
அணிகள்
- நிந்தை உவமை = உவமையை பழித்து உவமிப்பது
- நியம உவமை = இன்னதற்கு இன்னதே உவமையமாம் எனத் துணிந்து சொல்வது
- அநியம உவமை = இது தான் உவமை என்று கூறியதை விலக்கி, வேறொன்றும் உவமையாகும் என கூறுவது
- விபரீத உவமை = உவமையாய் வருவதனைப் பொருளாக்கி, பொருளாய் வருவதனை உவமையாக்கி உரைப்பது
- இயம்புதல் வேட்கை = இன்ன பொருள் இன்ன பொருளுக்கு உவமையாம் என இயம்புவதற்கு விரும்புவது
- விகார உவமை = ஒஅர் உவமையை விகாரப்படுத்தி உவமிப்பது
- அபூத உவமை = இல்லாத பொருளை உவமையாக்குதல்
- கூடா உவமை = ஒரு பொருளுக்கு கூடாததை கூடுவதாக கொண்டு அதனை ஒன்றற்கு உவமையாக்கி உரைப்பது
- உருவாக அணி = உவமை, பொருள் இரண்டையும் வேறுபாடு நீக்கி ஒன்று என்று உணர்ந்து கொள்ளுமாறு மயங்கச் செய்தல்
- ஏகதேச உருவகம் = ஒன்றனை உருவகம் செய்துவிட்டு, மற்றொன்றை விட்டு விட்டுவிடுதல்
- தொகை உருவகம் = “ஆகிய” என்னும் உருபு மறைந்து வருவது
- விரி உருவகம் = “ஆகிய” என்னும் உருபு விரிந்து வருவது
- இயைபு உருவகம = தம்முள் பொருத்தம் இல்லாத பொருட்களை வைத்து உருவகம் செய்வது
- வியாநிலை உருவகம் = ஒரு உறுப்பில் பலவற்றினுள், சிலவற்றை உருவகம் சசெய்து, சிலவற்றை உருவகம் செய்யாது இறுதியில் முழுப்பொருளை உருவகம் செய்து கூறுவது
- விரூபாக உருவகம் = ஒரு பொருளுக்கு கூடாத தன்மைகளை எல்லாம் கூட்டி உருவகம் செய்வது
- ஏகாங்க உருவகம் = ஒரு பொருளினது அங்கங்களை பலவற்றில் அங்கத்தை மட்டும் உருவகம் செய்வது
- அநேகாங்க உருவகம் = ஒரு பொருளின் அங்கங்கள் பலவற்றையும் உருவகம் செய்வது
- முற்று உருவகம் = முழுப் பொருளையும், அம்முழுப் பொருளுள் உள்ள உறுப்புகளையும் ஏற்ற இடத்தோடு, பிறவற்றோடும் முற்ற உருவகம் செய்தல்
- அவயவ உருவகம் = உறுப்புகளை மட்டும் உருவகம் செய்து முழுப் பொருளை விட்டு விடுவது
- அவநுதி உருவகம் = உண்மையை மறந்து அதையே உருவகம் செய்வது
- தீவக அணி = குணம், தொழில், சாதி, பொருள் ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றைக் குறித்து ஒரு செய்யுளின் ஓரிடத்தில் நின்று பலவிடத்தும் சென்று பொருளை விளக்குவது
தண்டியலங்காரம் நூல் குறிப்பு
- தீவக அணி பயில்வது = 3 (குணம், தொழில், சாதி)
- பின்வரு நிலை அணி = 3 (சொல் பின்வருநிலை, பொருள் பின்வருநிலை, சொற்பொருள் பின்வருநிலை
- வேற்று பொருள் வைப்பணி = 8 (முழுவதுஞ் சேறல், ஒருவழிச் சேறல், முரணித் தோற்றல், சிலேடையில் முடித்தல், கூடாவியற்கை, கூடுமியற்கை, இருமையியற்கை, விபரீதப்படுத்தல்)
- ஒட்டணி வகை = 4 (அடையும் பொருளும் அயல்பா மொழிதல், ஆடை பொது வாக்கி ஆங்கன மொழிதல், விரவத் தொடுத்தல், விபரீதப் படுத்தல்)
- தற்குறிப்பேற்ற அணி = 2 (பெயராத பொருள், பெயரும் பொருள்)
- ஏதுவனி = 2 (காரகவேது, ஞாகபதவேது)
- சிலேடை அணி = 2 (செம்மொழி சிலேடை, பிரிமொழிச் சிலேடை)
- காப்பியப் பண்பு அணி = பாவிகவணி