தன்னேர் இலாத தமிழ்

தன்னேர் இலாத தமிழ்

தன்னேர் இலாத தமிழ்

தன்னேர் இலாத தமிழ் பாடல்

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னோர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!

–    தண்டியலங்கார உரை மேற்கோள்

தன்னேர் இலாத தமிழ்

பாடல் குறிப்பு

  • இப்பாடலில் இடம்பெற்ற பா வகை = நேரிசை வெண்பா
  • இப்பாடலில் பொதிந்துள்ள அணி = பொருள் வேற்றுமை அணி

பொருள் வேற்றுமை அணி

  • இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதாளில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.

இலக்கணக் குறிப்பு

  • வெங்கதிர் = பண்புத்தொகை
  • உயர்ந்தோர் = வினையாலணையும் பெயர்
  • இலாத = இடைக்குறை (இல்லாத)
  • இலாத தமிழ் = எதிர்மறைக் குறிப்பு பெயரெச்சம்
  • இடை = ஏழாம் வேற்றுமை உறுப்பு
  • ஏங்கு ஒலி =  வினைத்தொகை
  • ஒலி நீர் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ( ஒலியைக் கொண்ட நீர்)
  • நீர் = தானியாகு பெயர்
  • நீர் ஞாலம் = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (நீரினால் சூழப்பாட்ட ஞாலம்)
  • தொழ = வினையெச்சம்
  • ஆழி = சினையாகு பெயர்

பிரித்து எழுதுக

  • ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
  • தனியாழி = தனி + ஆழி
  • வெங்கதிர் = வெம்மை + கதிர்

நூல் குறிப்பு

தன்னேர் இலாத தமிழ்

  • தண்டியலங்காரம், அணி இலக்கணத்தை மட்டும் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்றாகும்
  • மேற்கூறப்பட்ட பாடல், பொருளணியியல் பகுதியில் இடம் பெற்றுள்ளது
  • “காவியதர்சம்” என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட இந்நூலின் ஆசிரியர் “தண்டி” ஆவார்
  • இவர் கி.பி (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • இந்நூலின் 3 பெரும் பிரிவுகள் = பொதுவியல், பொருளணியியல் மற்றும் சொல்லணியியல்
  • இலக்கண நூலார், உரையாசிரியர்கள் ஆகியோர் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது இந்நூல்.

அணி இலக்கணம் மட்டும் கூறும் நூல்கள்

  • தண்டியலங்காரம்
  • மாறன் அலங்காரம்
  • குவலயானந்தம்

பிற இலக்கணத்தையும் கூறும் நூல்கள்

  • தொல்காப்பியம்
  • வீரசோழியம்
  • இலக்கண விளக்கம்
  • தொன்னூல் விளக்கம்
  • முத்துவீரியம்

தண்டியலங்காரம் நூலினை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள “இங்கே கிளிக் செய்யவும்”

 

பனிரெண்டாம் வகுப்பு – இளந்தமிழே

பனிரெண்டாம் வகுப்பு – தமிழ் மொழியின் நடை அழகியல்

Leave a Reply