தண்டியலங்காரம்

தண்டியலங்காரம்

தண்டியலங்காரம்

தண்டியலங்காரம்

  • தண்டியலங்காரம் என்ற நூலை எழுதியவர் = தண்டின் ஆவர்
  • இவரின் காலம் = 12 ஆம் நூற்றாண்டு ஆகும்
  • தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணம் = அணி இலக்கணம் மட்டும்
  • இன்று பயிலப்படும் அணி இலக்கான நூல்களுள் செல்வாக்கு மிகுந்தது தண்டியலங்கார நூல் மட்டுமே
  • இது ஒரு வழி நூல் ஆகும்
  • வடமொழியில் தண்டி என்பவர் எழுதிய “காவிய தரிசனம்” என்னும் நூலினை தழுவி இந்நூல் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது
  • இந்நூலுக்கு “அணியதிகாரம்” என்ற சிறப்பு பெயரும் உண்டு.
  • இந்நூலுக்கு முதலில் “அணியதிகாரம்” என்ற பெயர் இருந்தது என்பது பழைய உரையால் அறிய முடிகிறது

நூலின் அமைப்பு

  • இந்நூலில் 3 பெரும் பிரிவுகள் உள்ளன. அவை,
    • பொதுவியல்               = 26 நூற்பா ( + சிறப்புப் பாயிரம்)
    • பொருளணியியல் (குணவியல்) = 65 நூற்பா ( + சிறப்புப் பாயிரம்)
    • சொல்லணியியல் (எச்சவியல்) = 35 நூற்பா
  • இந்நூலில் மொத்தம் 126 நூற்பா உள்ளன
  • பொருளணியியல் “குணவியல்” என்ற பெயரிலும் கூறுவார்
  • சொல்லணியியல் “எச்சவியல்” என்றும் கூறுவார்

பொதுவியல்

தண்டியலங்காரம்

  • செய்யுளின் வகைகள் நான்கு
    • முத்தகச் செய்யுள்                   =      தனித்து நின்று பாடுவது
    • குளகச் செய்யுள்                      =      பல பாட்டு, ஒரு வினை கொள்வது
    • தொகைநிலைச் செய்யுள்  =      பாடுகள் பல தொகுக்கப்படுவது
    • தொடர்நிலைச் செய்யுள்   =      பொருளினும் சொல்லினும் தொடர்வது
  • பொருளால் தொடர்வதை “காப்பியம்” என்கிறோம்
  • சொல்லால் தொடர்வதை “அந்தாதி” என்கிறோம்
  • காப்பியம் 2 வகை = பெரும் காப்பியம், சிறு காப்பியம்
  • நெறி 2 வகைப்படும் = வைதருப்ப நெறி, கௌடநெறி

பொருளணியியல் (குணவியல்)

  • 35 வகையான அணிகளின் இலக்கணமும், அதன் வகைகளும் கூறப்பட்டுள்ளன
  • முதல் அணி தன்மை அணி
  • இறுதி அணி, பாவிக அணி ஆகும்

சொல்லணியியல் (எச்சவியல்)

  • மடக்கு, சித்திரம் ஆகியவற்றின் இலக்கணம் கூறுகிறது
  • இதழ் ஒட்டாமல் பாடுவது = நிரோட்டகம்

நூலின் சிறப்பு

  • தமிழில் காப்பிய இலக்கணத்தை முதல் முதலாக கூறும் நூல் = தண்டியலங்காரம் ஆகும்
  • தண்டியலங்காரத்தில் 35 வகையான அணிகளும், அவற்றின் பல்வேறு வகையான உட்பிரிவுகளும் கூறப்பட்டுள்ளன
  • 24 வகையான உவமை அணியின் வகைகள் கூறப்பட்டுள்ளன

தண்டியலங்காரம் – 35 வகையான அணிகள்

தண்டியலங்காரம்

    1. தன்மை
    2. உவமை
    3. உருவகம்
    4. தீவகம்
    5. பின்வருநிலை
    6. முன்னவிலக்கு
    7. வெற்றுப் பொருள் வைப்பு
    8. வேற்றுமை
    9. விபாவனை
    10. ஒட்டு
    11. அதிசயம்
    12. தற்குறிப்பேற்றம்
    13. ஏது
    14. நுட்பம்
    15. இலேசம்
    16. நிரனிறை
    17. ஆர்வமொழி
    18. சுவை
    19. தன்மேம் பாட்டுரை
    20. பரியாயம்
    21. சமாகிதம்
    22. உதாத்தம்
    23. அவநுதி
    24. சிலேடை
    25. விசேடம்
    26. ஒப்புடைக் கூட்டம்
    27. விரோதம்
    28. மாறுபாடு புகழ்நிலை
    29. பாகமாப் புகழ்ச்சி
    30. நிதாரிசனம்
    31. புணர்நிலை
    32. பரிவருத்தனை
    33. வாழ்த்து
    34. சங்கீர்ணம்
    35. பாவிகம்

தண்டியலங்காரம் – 24 வகையான உவமை அணிகள்

தண்டியலங்காரம்

    1. விரி
    2. தொகை
    3. இதரவிதரம்
    4. சமுச்சயம்
    5. உண்மை
    6. மறுபொருள்
    7. புகழ்தல்
    8. நிந்தை
    9. நியமம்
    10. அநியமம்
    11. ஐயம்
    12. தோற்றம்
    13. இன்சொல்
    14. விபரீதம்
    15. இயல்புதல்
    16. பலபொருள்
    17. விகாரம்
    18. மோகம்
    19. அபூதம்
    20. பலவயிற்போலி
    21. ஒருவயிற்போலி
    22. கூடாவுடை
    23. பொது நீங்கு
    24. மாலை

உருவக அணியின் வகைகள்

    1. தொகை
    2. விரி
    3. தொகைவிரி
    4. இயைபு
    5. இயைபிலி
    6. வியனிலை
    7. சிறப்பு
    8. விரூபகம்
    9. சமாதானம்
    10. உருவகம்
    11. ஏகம்
    12. அநேகாங்கம்
    13. முற்று
    14. அவயவம்
    15. அவயவி

அணிகள்

  • நிந்தை உவமை       =      உவமையை பழித்து உவமிப்பது
  • நியம உவமை =      இன்னதற்கு இன்னதே உவமையமாம் எனத் துணிந்து சொல்வது
  • அநியம உவமை =      இது தான் உவமை என்று கூறியதை விலக்கி, வேறொன்றும் உவமையாகும் என கூறுவது
  • விபரீத உவமை =      உவமையாய் வருவதனைப் பொருளாக்கி, பொருளாய் வருவதனை உவமையாக்கி உரைப்பது
  • இயம்புதல் வேட்கை =      இன்ன பொருள் இன்ன பொருளுக்கு உவமையாம் என இயம்புவதற்கு விரும்புவது
  • விகார உவமை =      ஒஅர் உவமையை விகாரப்படுத்தி உவமிப்பது
  • அபூத உவமை =      இல்லாத பொருளை உவமையாக்குதல்
  • கூடா உவமை =      ஒரு பொருளுக்கு கூடாததை கூடுவதாக கொண்டு அதனை ஒன்றற்கு உவமையாக்கி உரைப்பது
  • உருவாக அணி =      உவமை, பொருள் இரண்டையும் வேறுபாடு நீக்கி ஒன்று என்று உணர்ந்து கொள்ளுமாறு மயங்கச் செய்தல்
  • ஏகதேச உருவகம் =      ஒன்றனை உருவகம் செய்துவிட்டு, மற்றொன்றை விட்டு விட்டுவிடுதல்
  • தொகை உருவகம் =      “ஆகிய” என்னும் உருபு மறைந்து வருவது
  • விரி உருவகம் =      “ஆகிய” என்னும் உருபு விரிந்து வருவது
  • இயைபு உருவகம =      தம்முள் பொருத்தம் இல்லாத பொருட்களை வைத்து உருவகம் செய்வது
  • வியாநிலை உருவகம் =      ஒரு உறுப்பில் பலவற்றினுள், சிலவற்றை உருவகம் சசெய்து, சிலவற்றை உருவகம் செய்யாது இறுதியில் முழுப்பொருளை உருவகம் செய்து கூறுவது
  • விரூபாக உருவகம் =      ஒரு பொருளுக்கு கூடாத தன்மைகளை எல்லாம் கூட்டி உருவகம் செய்வது
  • ஏகாங்க உருவகம் =      ஒரு பொருளினது அங்கங்களை பலவற்றில் அங்கத்தை மட்டும் உருவகம் செய்வது
  • அநேகாங்க உருவகம் =      ஒரு பொருளின் அங்கங்கள் பலவற்றையும் உருவகம் செய்வது
  • முற்று உருவகம் =      முழுப் பொருளையும், அம்முழுப் பொருளுள் உள்ள உறுப்புகளையும் ஏற்ற இடத்தோடு, பிறவற்றோடும் முற்ற உருவகம் செய்தல்
  • அவயவ உருவகம் =      உறுப்புகளை மட்டும் உருவகம் செய்து முழுப் பொருளை விட்டு விடுவது
  • அவநுதி உருவகம் =      உண்மையை மறந்து அதையே உருவகம் செய்வது
  • தீவக அணி =      குணம், தொழில், சாதி, பொருள் ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றைக் குறித்து ஒரு செய்யுளின் ஓரிடத்தில் நின்று பலவிடத்தும் சென்று பொருளை விளக்குவது

தண்டியலங்காரம் நூல் குறிப்பு

தண்டியலங்காரம்

  • தீவக அணி பயில்வது = 3 (குணம், தொழில், சாதி)
  • பின்வரு நிலை அணி = 3 (சொல் பின்வருநிலை, பொருள் பின்வருநிலை, சொற்பொருள் பின்வருநிலை
  • வேற்று பொருள் வைப்பணி = 8 (முழுவதுஞ் சேறல், ஒருவழிச் சேறல், முரணித் தோற்றல், சிலேடையில் முடித்தல், கூடாவியற்கை, கூடுமியற்கை, இருமையியற்கை, விபரீதப்படுத்தல்)
  • ஒட்டணி வகை = 4 (அடையும் பொருளும் அயல்பா மொழிதல், ஆடை பொது வாக்கி ஆங்கன மொழிதல், விரவத் தொடுத்தல், விபரீதப் படுத்தல்)
  • தற்குறிப்பேற்ற அணி = 2 (பெயராத பொருள், பெயரும் பொருள்)
  • ஏதுவனி = 2 (காரகவேது, ஞாகபதவேது)
  • சிலேடை அணி = 2 (செம்மொழி சிலேடை, பிரிமொழிச் சிலேடை)
  • காப்பியப் பண்பு அணி = பாவிகவணி

Leave a Reply