பட்டினப்பாலை
நூல் அமைப்பு
- திணை = நெய்தல் திணையும் பாலைத் திணையும்
- துறை = பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல்(செலவழுங்குதல் = செல்லாது விடுதல்)
- பாவகை = இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டு
- அடி எல்லை = 301
பட்டினப்பாலை விளக்கம்
- பாலைத் திணையையும், காவிரிப்பூம்பட்டினம் நகரின் வளத்தையும் ஒருங்கே கூறுவதால் பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்
- வஞ்சி நெடும் பாட்டு (தமிழ் விடு தூது கூறுகிறது)
- பாலைபாட்டு
பட்டினப்பாலை ஆசிரியர்
- பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்
பட்டினப்பாலை உரை
- மறைமலையடிகள் உரை
- ரா.இராகவையங்கார் உரை
பொதுவான குறிப்புகள்
- பட்டினப் பாலை பாடியமைக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
- இந்நூலுக்கு வஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது
- பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.
- இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளது.
- இந்நூல் அரகேற்றப்பட்ட இடம் = பதினாறு கால் மண்டபம்
- பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதன் தலைநகரை அழித்தபோது, அந்நகரில் இந்நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்க ஆணையிட்டான் என “திருவெள்ளரைக் கல்வெட்டு” கூறுகிறது.
- இந்நூலில் கிளவித் தலைவனின் பெயர் கூறப்படவில்லை.
முக்கிய அடிகள்
- நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
- தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதுஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
- முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே