ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழிநானூறு எனப் பெயர்பெற்றது.
பழமொழி நானூறு வேறு பெயர்கள்
பழமொழி
உலக வசனம்
ஆசிரியர் குறிப்பு
முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
நூல் பகுப்பு முறை
இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)
பொதுவான குறிப்புகள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழிநானூறு
தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே