பிறப்பு வழி குடியுரிமை
பிறப்பு வழி குடியுரிமை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, குடியுரிமைக்காக உருவாக்கப்பட்ட “இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955” படி, பிறப்பின் காரணமாக (Citizenship by Birth) இந்தியாவில் குடியுரிமையை பெறுவதற்கான வழிமுறைகள் ஆனது,
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு நபரும்,
- 1950 ஜனவரி 26 முதல், 1987 ஜூலை 1-ம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமகனாக கருதப்படுவர் (on or after the 26th day of January, 1950, but before the 1st day of July, 1987)
- ஜூலை 1, 1987 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த ஒருவர், அவர் பிறந்த நேரத்தில் அவரது பெற்றோரில் ஒருவர் இந்தியாவின் குடிமகனாக இருந்தால் மட்டுமே அவர் இந்தியக் குடிமகனாக கருதப்படுவார் (on or after the 1st day of July, 1987, but before the commencement of the Citizenship (Amendment) Act 2003, and either of whose parents is a citizen of India at the time of his Birth)
- டிசம்பர் 3, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள் (on or after the commencement of the Citizenship (Amendment) Act, 2003)
-
-
- அவர்களின் பெற்றோர் இருவரும் இந்தியாவின் குடிமக்களாக இருந்தால் மட்டுமே அவர்களை இந்தியாவின் குடிமக்களாக கருதப்படுவர் (both of his parents are citizens of India) அல்லது
- அவரின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாகவும் மற்றவர் அவர்கள் பிறந்த நேரத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்லாமல் இருந்தால், அவர் இந்தியக் குடிமகனாக கருதப்படுவர் (one of whose parents is a citizen of India and the other is not an illegal migrant at the time of his birth)
-
பிறப்பு வழி குடியுரிமை
இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், இந்திய மண்ணில் உள்ள அந்நிய விரோதிகள் போன்றோரின் குழந்தைகள், இந்தியக் குடிமக்களாக கருதப்பட மாட்டார்.
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் / EXCHANGE OF TERRITORIES WITH BANGLADESH
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் / INTEGRATION OF PRINCELY STATES
- தார் கமிசன் / DHAR COMMISSION
- ஜேவிபி குழு / JVP COMMITTEE
- பசல் அலி கமிசன் / FAZAL ALI COMMISSION
- 1956 பிறகு புதிய மாநிலங்கள் / STATES AFTER 1956
- ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் / JAMMU KASHMIR AND LADAKH
- மாநிலங்களின் பெயர் மாற்றம் / RENAMING OF STATES