மரபுவழிக் குடியுரிமை

மரபுவழிக் குடியுரிமை

மரபுவழிக் குடியுரிமை
மரபுவழிக் குடியுரிமை

மரபுவழிக் குடியுரிமை

     இந்தியக் குடியுரிமை சட்டம், 1955-ல் தெரிவிதுள்ளப்படி, மரபுவழிக் குடியுரிமை (Citizenship by Descent) பெறுவதற்கான வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

     1950 ஜனவரி 26 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வெளியே பிறந்த ஒருவர், ஆனால் 1992 டிசம்பர் 10 க்கு முன்னர் (A person born outside India on or after January 26, 1950 but before December 10, 1992), அவரது தந்தை பிறந்த நேரத்தில் இந்தியாவின் குடிமகனாக இருந்திருந்தால், இந்திய வம்சாவளி அடிப்படையில் அவர் இந்தியாவின் குடிமகன் ஆவார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

   1992 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு (on or after December 10, 1992) இந்தியாவுக்கு வெளியே பிறந்த ஒருவர், அவனது பெற்றோர்களில் ஒருவர் அவர்கள் பிறந்த நேரத்தில் இந்தியக் குடிமகனாக இருந்தால் (if either of his parents is a citizen of India at the time of his birth), அவர்கள் இந்தியக் குடிமகனாக கருதப்படுவர்.

   டிசம்பர் 3, 2004 முதல், இந்தியாவுக்கு வெளியே பிறந்த ஒருவர் பிறப்பு தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் ஒரு இந்திய துணைத் தூதரகத்தில் பதிவு செய்யப்படாவிட்டால் அல்லது ஒருவருடத்திற் பிறகும் மத்திய அரசின் அனுமதியுடன் விண்ணப்பிக்காமல் விட்டால், அவர் இந்தியக் குடிமகனாக கருதப்பட மாட்டார் (his birth is registered at an Indian consulate within one year of the date of birth or with the permission of the Central Government, after the expiry of the said period)

     ஒரு மைனர் குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதற்கான ஒரு விண்ணப்பம், அவர்கள் இருக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும், அத்தகைய மைனர் குழந்தையின் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக அவர் அல்லது அவள் வேறு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கவில்லை (minor child that he or she does not hold the passport of another country) என்ற உறுதிமொழிசான்று வழங்கப்படவேண்டும்.

    மேலும், இந்திய குடியுரிமையை பெற்றுள்ள, இந்திய வம்சாவழியை உடைய மைனர் குழந்தை, வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தால், அவர் தனது முழு வயதை அடைந்த 6 மாதத்திற்குள் (within 6 months of his attaining full age) அந்நாட்டின் குடியுரிமியை துறக்காவிட்டால், தானாகவே இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப்படும்.

 

 

Leave a Reply